கெரோனாவால் குறைந்த காற்றுமாசு! காட்டிக்கொடுத்த நாசா செயற்கைக்கோள்..!
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைபடிவ எரிபொருள் உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன.
புதைபடிவ எரிபொருள்கள் போன்ற மாசுபடுத்திகளின் விளைவுகளை நாசா விண்வெளியில் இருந்து காணலாம். நமது கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள பூமி-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள், கணினி அடிப்படையிலான மாதிரிகள், தரவுத்தொகுப்புகள் மற்றும் சென்சார்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் கொண்டுள்ளது.இது சுற்றுச்சூழலை தொடர்ந்து கண்காணிப்பதுடன், விஞ்ஞானிகள் இந்த தொற்றுநோயின் வளர்ந்து வரும் விளைவுகளை அவதானிக்க அனுமதிக்கிறது. வோவிட்-19 தொற்றுநோய் நமது கிரகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் புதிய திட்டங்களை நாசா தொடங்கியுள்ளது.

"இந்த தொற்றுநோய்க்கு நம் உலகம் எதிர்வினையாற்றிவரும் இந்த காலகட்டம் ஒரு திட்டமிடப்படாத சோதனையாகும்.இது பல்வேறு காற்று மாசு உமிழ்வு ஆதாரங்களைப் பற்றிய நமது புரிதலை சோதிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது"என்று நாசா தலைமையகத்தின் வெப்பமண்டல கலவைக்கான நாசாவின் திட்ட விஞ்ஞானி பாரி லெஃபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிகளில் குறிப்பாக விண்வெளியில் இருந்து புதைபடிவ எரிபொருள் உமிழ்வைப் கண்காணிப்பதும் ஒன்றாகும். மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் ஆராய்ச்சியாளர்களான ஜோனா ஜாய்னர் மற்றும் பிரையன் டங்கன், வளிமண்டலத்தில் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் பெரும்பாலும் தொடர்புடைய நைட்ரஜன் டை ஆக்சைடு என்ற காற்று மாசுபாட்டைக் காட்டும் வரைபடங்களையும் புகைப்படங்களையும் உருவாக்குகின்றனர். இந்த தரவுகள் விஞ்ஞானிகளுக்கு நமது சூழல் எவ்வாறு மாறுகிறது என்பது மட்டுமே தெரிவிக்காமல், பொருளாதாரங்கள் எவ்வாறு மாறிவருகின்றன என்பதற்கும் பதிலளிக்க முடியும் தெரிவிக்கிறது.

இந்த மாற்றங்களைப் ஆராய, ஆராய்ச்சியாளர்கள் OMI (ஓசோன் கண்காணிப்பு கருவி), நாசாவின் அவுரா செயற்கைக்கோளில் உள்ள டச்சு-ஃபின்னிஷ் கருவி மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் -5 பி செயற்கைக்கோளில் உள்ள டிராபோஸ்பெரிக் கண்காணிப்பு கருவி (TROPOMI) உள்ளிட்ட கருவிகளின் தரவுகளுடன் பணிபுரிகின்றனர். டங்கன் மற்றும் ஜாய்னர் OMI தரவைப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் TROPOMI தரவு அதிக தெளிவுத்திறன் கொண்டதாக இருந்தாலும், OMI நீண்ட காலமாக உள்ளதால் அவற்றில் அதிகமான தரவுகள் உள்ளன.

"பொருளாதாரங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நைட்ரஜன் டை ஆக்சைடில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெளியேற்றப்படும் மாசுபாட்டின் அளவு காலப்போக்கில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தால், உங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடையும் " என்று டங்கன் அந்த அறிக்கையில் கூறுகிறார்.

இந்த தொற்றுநோயின் தொடக்க நாட்களில் இருந்து, செயற்கைக்கோள்கள் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகளில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன. இதுவரை இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன.

பூமியின் வளிமண்டலத்தில் வாயுக்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் காண்பிப்பதற்காக புதிய மற்றும் சிறந்த ஒப்பீடுகளைத் தொடர, ஜாய்னர் மற்றும் டங்கன் ஆகியோர் 2005 ஆம் ஆண்டிலிருந்து உள்ள ஓஎம்ஐ தரவைப் பயன்படுத்துகின்றனர்.

முக்கிய மிஷனில் இல்லாத அனைத்து நாசா ஊழியர்களும் தொலைதூரத்தில் பணிபுரியும் அதே வேளையில், இந்த முயற்சிகளில் அந்நிறுவனத்தின் முன்னேற்றங்களை தடுக்கமுடியவில்லை. ஏனெனில் ஜாய்னர், டங்கன் மற்றும் பிற நாசா ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி பூமியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
News Source: space.com


Click it and Unblock the Notifications