நாசா வெளியிட்ட புகைப்படம்,இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!
உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில்நிலைகொண்டுள்ளது.
உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 22 ஆயிரத்து 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பேரை பலி கொடுத்த நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை இத்தாலி முதலிடத்தில்இருந்து வந்த நிலையில் அந்த நாட்டையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் சமூக விலகல், ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்திஉள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் இயற்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக நாசா அமைப்புஅன்மையில் புகைப்படும் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி வடகிழக்கு அமெரிக்காவில் சுமார் 30சதவிகிதம் அளவுக்கு காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிஉள்ளது. மேலும் 2015 முதல் 2019-ம் ஆண்டு வரையில் காற்று மாசுபாடு உலகம் முழுவதும் அதிகமாக இருந்ததையும்,தற்போது கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்து இருப்பதாகவும்புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பது, வாகனங்களின் குறைவான பயன்பாடு ஆகியவை காற்று மாசுபாட்டினை வெகுவாக குறைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications