NASA-வின் சேட்டிலைட் படங்கள் அம்பலமாக்கிய சீனாவின் மற்றொரு உலக தீங்கு இதுதான்!

|

சீனா உலக நாடுகளுக்கு இழைத்த பெரிய கொடூரம் கொரோனா வைரஸ் என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத மற்றொரு தீங்கையும் சீனா இந்த உலகிற்குச் செய்துவந்துள்ளது என்பது சமீபத்திய நாசாவின் சேட்டிலைட் புகைப்படத்தில் தெளிவாகியுள்ளது. இன்னொரு தீங்கா.! என்று ஷாக் ஆகாமல் படியுங்கள்.

கொரோனா வைரஸ் முதலில் இங்கிருந்து தான் கிளம்பியது

கொரோனா வைரஸ் முதலில் இங்கிருந்து தான் கிளம்பியது

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து தான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அந்த பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கிருந்து வெளியே செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை, அதேபோல் உள்ளே செல்லவும் யாருக்கும் அனுமதியில்லை. இப்படி இருக்கும் போதே உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ளது.

உலகமே அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அம்பலம்

உலகமே அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அம்பலம்

இது நமக்குத் தெரிந்த தகவல் தான், இது ஒரு புறம் இருக்கட்டும். சீனாவில் உள்ள பெய்ஜிங் இத்தனை காலமாக உலகிற்கு எவ்வளவு, எவ்வளவு பெரிய தீங்கை இழைத்து வந்துள்ளது என்று நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் அதிர்ச்சி தரும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. உலகமே அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகவல் தற்போது, அம்பலமாகியுள்ளது.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!

நச்சுப்புகையின் அளவு

நச்சுப்புகையின் அளவு

கொரோனா வைரஸின் தாக்குதல் சீனாவில் பெரியளவில் உள்ளதினால் தலைநகர் பெய்ஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையின் அளவு காற்றில் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பகுதியில் இப்பொழுது நஞ்சு புகையே இல்லை என்று தான் கூறவேண்டும்.

அமெரிக்கா கேட்டபோது மறுத்திவிட்ட சீனா

அமெரிக்கா கேட்டபோது மறுத்திவிட்ட சீனா

இதற்கு முன்பு அமெரிக்கா, சீனாவிடம் அவர்களின் நாடு அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவை விடவும் சீனா அதிகமாக வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி வந்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீனாவும் மறுத்து வந்தது.

ரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு!ரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு!

சீனாவின் சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படம்

சீனாவின் சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படம்

ஆனால், இப்போது சீனாவின் மறுப்பு முற்றிலும் பொய் என்று நிரூபிக்கும் விதமாக நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் இருக்கிறது. இதன் முதல் புகைப்படம் 2019ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமீபத்திய புகைப்படம் நோய்ப் பாதிப்பு உச்சத்திலிருந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 16ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு படங்களின் தகவல் என்ன கூறுகிறது

இரண்டு படங்களின் தகவல் என்ன கூறுகிறது

இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எவ்வளவு நஞ்சு புகையைச் சீனா வெளியிட்டுள்ளது என்று அம்பலமாகியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்த இரு புகைப்படங்களில், சீனாவில் நைட்ரஜன் டை-ஆக்ஸைடு எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?

தொழிற்சாலைகள் மூடப்பட்டதினால் நஞ்சு புகை இல்லை

தொழிற்சாலைகள் மூடப்பட்டதினால் அங்கு தற்போது புகைமூட்டம் இல்லாமல் தெளிவான நிலை உருவாகியுள்ளது. இதைப் படத்தில் தெளிவாகக் காணலாம். ஆனால், டிசம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவப்பு நிறத்தில் புகையின் அளவு அதிகமாக இருப்பதும் தெரிகிறது.

இயல்பு நிலைக்கு மாறும் சீனா

இயல்பு நிலைக்கு மாறும் சீனா

இந்த இரண்டு படங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது சீனாவின் தொழிற்சாலைகள் எந்த அளவிற்கு நஞ்சு புகைகளை வெளியிட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், இனி நஞ்சு புகை வெளியிடப்படவில்லை என்று பொய் சொல்லித் தப்பிக்க முடியாது என்பதும் உறுதியாகி உள்ளது. சீனாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மாறத்துவங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
NASA Satellite Images Revealed How China Lied On Emission Of Nitrogen Dioxode : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X