மர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு

|

இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய நிலவின் இரண்டாவது விண்கலம் இதுவாகும். இந்த விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியது.

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர்

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர்

சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய கருவிகள் வைத்து அனுப்பப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால் நிலவை நெருங்கும் சிறிது நேரத்தில் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

வேகமாக தரையில் மோதியிருக்கலாம்

வேகமாக தரையில் மோதியிருக்கலாம்

விக்ரம் லேண்டர் தரையிரக்கிய போது விண்வெளி மையத்துடனான கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் விக்ரம் லேண்டர் வேகமாக இறங்கி தரையில் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் விக்ரம் லேண்டர் என்னவாயிற்று என மர்மம் நிலவி வந்தது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த மர்மத்தை நாசா முடித்து வைத்துள்ளது.

ரெட்மி 8 சீரிஸ் கொண்டாட்டம்: 3 மாதங்களில் 1 கோடி யூனிட்கள் விற்பனைரெட்மி 8 சீரிஸ் கொண்டாட்டம்: 3 மாதங்களில் 1 கோடி யூனிட்கள் விற்பனை

இஸ்ரோவுடன் இணைந்த நாசா

இஸ்ரோவுடன் இணைந்த நாசா

இஸ்ரோ-வுடன் சேர்ந்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா இணைந்து செயல்பட்டது. நாசாவின் விண்கலமான எல்ஆர்ஓ விக்ரம் லேண்டருக்கு மேலே பயணித்தது. அப்போது விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், விக்ரம் லேண்டர் குறித்து எந்த தகவலும் அறியமுடியவில்லை.

சந்திரயான் 2 தோல்வியில்லை

சந்திரயான் 2 தோல்வியில்லை

ஆனால் சந்திரயான் 2 முழுமையாக தோல்வி அடையவில்லை. சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் செயல்படவில்லை என்றாலும் ஆர்பிட்டர் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழல் நிலவி கொண்டு இருக்கையில் நாசா தற்போது விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மர்மத்தை உடைத்த நாசா

விக்ரம் லேண்டர் குறித்த மர்மத்தை உடைக்கும் வகையில் நாசா புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய மையத்தையும், அப்போது சிதறிய விண்கல பாகத்தையும் காண்பித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ஒரு மகிழ்ச்சி செய்தி: :ஒரு மகிழ்ச்சி செய்தி: :"கூகுள் பே"ல் இனி தங்க பரிசு ஆப்ஷன் அறிமுகம்!

 நாசா புகைப்படம் வெளியீடு

நாசா புகைப்படம் வெளியீடு

இந்த புகைப்படத்தில் பச்சை நிறப் புள்ளிகள் அனைத்தும் விண்கல குப்பைகளை குறிக்கும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் நாசா, விக்ரம் லேண்டர் குறித்த மர்மத்தை உடைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nasa satellite finds crashed chandrayaan 2 lander vikram debris on moon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X