NASA சீக்ரெட்டாக உருவாக்கிய மனித உருவ ரோபோ! இதற்கு பூமியிலும் விண்வெளியிலும் வேலையா?
நாசா (NASA) நீண்ட காலமாக ஒரு சைலன்ட் சீக்ரெட் பிராஜெக்ட்டில் வேலை செய்து வருவதாக சில தகவல்கள் லீக் ஆனது. இறுதியில், அந்த பிராஜெக்ட் ஒரு மனித வடிவ உயர்திறன் கொண்ட ஹியூமன்னாய்டு ரோபோட் உடன் தொடர்புடையது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
விண்வெளி பயணங்கள் மற்றும் விண்வெளியில் ஏற்படும் சிக்கலான சவால்களை மனித உயிர்களின் சேதமின்றி செய்து முடிக்க, நாசா இந்த புதிய அதிநவீன ஹியூமன்னாய்டு ரோபோட்களை (Humanoid Robot) உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஹியூமன்னாய்டு ரோபோட்டை நாசா (NASA) இப்போது வெற்றிகராக உருவாக்கிவிட்டதாக தெரிகிறது.

காரணம், நாசாவின் இந்த மனித உருவ விண்வெளி வீரர் ஹியூமன்னாய்டு ரோபோட் சோதனைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வால்கெய்ரி (Valkyrie) என அழைக்கப்படும், இந்த மனித உருவ ரோபோவை ஏஜென்சியின் ஆர்ட்டெமிஸ் (Artemis) மற்றும் பிற விண்வெளிப் பயணங்களின் போது நாசா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாசாவின் வால்கெய்ரி மனித உருவ ரோபோ, ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் சொந்த தளத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள உட்சைட் எனர்ஜி (Woodside Energy) ஆஸ்திரேலிய நிலையத்திற்கு விரிவான சோதனைக்காக அனுப்பப்படுகிறது. இங்கு இதன் முழு செயல்பாடும் சோதனை செய்யப்படும்.
வால்கெய்ரி, நாசாவின் மனித உருவ விண்வெளி வீர ரோபோ, ஏஜென்சியின் ஆர்ட்டெமிஸ் மற்றும் பிற விண்வெளிப் பயணங்களின் போது பயன்படுத்தவும் மனித விண்வெளி வீரர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசாவிற்கும், உட்சைட் எனர்ஜிக்கும் இடையிலான ஒப்பந்தம் வால்கெய்ரி ரோபோவின் விரிவான சோதனை மற்றும் விண்வெளிக்கு வெளியே உள்ள பயன்பாடுகளை ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டது.

இந்த சோதனைகளின் பொது, வால்கெய்ரி ரோபோவின் திறன்கள் சோதனை செய்யப்படும். குறிப்பாக மனித பணியாளர்கள் இல்லாத இடங்களிலும், மற்றும் கடலோர மின் வசதிகளை தொலைதூரத்தில் இருந்து பராமரிக்கவும் இந்த ரோபோவின் திறன்கள் சோதிக்கப்படும் என்று நாசா அறிவித்துள்ளது. வுட்சைட் வசதிகளில் நடத்தப்படும் சோதனைகள், சந்திரன் மற்றும் பிற கிரகங்களில் காணப்படும் சவால்களை சமாளிக்கும் ரோபோவின் திறன்களும் சோதனை செய்யப்படும்.
மனிதர்கள் களம்காண முடியாத மாசுபட்ட மற்றும் ஆபத்தான நிலைகளில், மனிதர்களுக்கு பதிலாக இந்த ரோபோக்கள் களமிறக்கப்படும் வகையில் நாசா இவற்றை உருவாக்கியுள்ளன. இந்த ரோபோக்களை களமிறக்குவதற்கு முன்பு எவ்வாறு சிறப்பாக இவை சவால்களை சமாளிக்கிறது என்றும், எப்படி திறன்பட இவை அதன் நுண்ணறிவைப் பெருக்கி செயல்படுகிறது என்பதையும் இந்த சோதனையில் நாசா கண்டறியவுள்ளது.
விண்வெளி பயணங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள், உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தல் மற்றும் பராமரித்தல் போன்ற செயல்களை இந்த ஹியூமன்னாய்டு ரோபோட் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. வால்கெய்ரி போன்ற மேம்பட்ட மொபைல் ரோபோக்கள், ஆபத்தான வேலைகளை தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்க உதவும் என்றும், கடினமான வேலைகளை மீண்டும்-மீண்டும் செய்யும் பணிகளின் சுமையை குறைக்க மக்களுக்கு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த காரணத்திற்காக, ஆர்ட்டெமிஸ் போன்ற முக்கியமான விண்வெளி பணிகளை நிறைவேற்றுவதற்கும், சந்திர மேற்பரப்பில் மனிதகுலம் நிரந்தரமாக இருப்பதற்கும் இத்தகைய ரோபோக்களின் உதவி நமக்கு மிகவும் முக்கியமானது என்று நாசா தெரிவித்துள்ளது. மனித குளம் வேற்றுகிரகத்திலும், சந்திர பரப்பிலும் காலனி துவங்க இத்தகைய ஹியூமன்னாய்டு ரோபோட்களின் தேவை முக்கியமானது என்றும், சோதனை வெற்றி பெற்றவுடன் அதிக எண்ணிக்கையிலான ஹியூமன்னாய்டு ரோபோட்களை நாசா உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








