Home
News

மார்ஸ்-ல் வண்டி ஓடுதே., உயிர் வாழ முடியுமா?- இரண்டு மாதிரிகளை சேகரித்த நாசா: பதில் என்ன?

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செப்டம்பர் 6 ஆம் தேதி மான்டெனியர் என்று பெயரிடப்பட்ட முதல் மாதிரியை சேகரித்தது. அதேபோல் செப்டம்பர் 8 ஆம் தேதி பாறையில் இருந்து அதன் இரண்டாவது மொன்டாக்னாக்கை சேகரித்தது. அதன்படி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தற்போதுவரை இரண்டு பாறை மாதிரிகளை சேகரித்துள்ளது.

பெர்சவரன்ரஸ் ரோவர்

பெர்சவரன்ரஸ் ரோவர்

பெர்சவரன்ரஸ் ரோவர் மூலமாக மார்ஸ்-ல் நுண்ணியிரிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆராய்ச்சிகள் செய்யப்பட இருக்கிறது. தங்களின் முதல் பாறை மாதிரிகள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை வெளிப்படுத்துவது போல் இருக்கிறது என விஞ்ஞானி கென் பார்லி அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள்

சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள்

பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் செப்டம்பர் 6 ஆம் தேதி மான்டெனியர் என்று பெயரிடப்பட்ட முதல் மாதிரியை சேகரித்தது. செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று பாறையில் இருந்து இரண்டாவது மாதிரியான மான்டாக்னாக் என்ற இரண்டாவது மாதிரியை சேகரித்திருக்கிறது.இந்த பாறைகளின் சுவாரஸ்யம் என்னவென்றால் நிலத்தடி நீருடன் தொடர்புக்கான அறிகுறிகள் இருப்பதை காட்டுகின்றன என நாசா தரப்பில் தெரிவித்துள்ளது.

சீல் செய்யப்பட்ட குழாய்கள்

சீல் செய்யப்பட்ட குழாய்கள்

தற்போது எடுக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் ஆனது ஒரு பென்சில் அளவை விட சற்று அகலம் மற்றும் ஆறு சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் எனவும் இது ரோவரின் உட்புறத்தில் சீல் செய்யப்பட்ட குழாய்களில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மாதிரிகள் ஆனது ஜெசேரா க்ரெட்டர் பள்ளத்தாக்கில் உள்ள ரோச்செட்டே என்று பெயரிடப்பட்டுள்ள பாறையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் ஆனது டைட்டானியம் குழாயில் அடைக்கப்பட்டிருக்கிறது.

முதல் முயற்சி தோல்வி

முதல் முயற்சி தோல்வி

முன்னதாக ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்படும் தரவுகள் பூமிக்கு அனுப்பப்படும் அதன்படி முதல் முயற்சியாக ரோவர் மூலம் செவ்வாய் கிரக மாதிரிகளை ஒரு குழாயில் ரோவர் சேகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போதைய முயற்சி தோல்வி அடைந்தது.

மேற்பரப்பில் துளையிட்டு சேகரிக்கப்பட்டு மாதிரிகள்

மேற்பரப்பில் துளையிட்டு சேகரிக்கப்பட்டு மாதிரிகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு மாதிரிகளை சேகரித்ததாக கணிக்கப்பட்டது. ஆனால் பூமியில் கிடைத்த தரவுப்படி ரோவரின் பகுப்பாய்வில் பாறை மாதிரிகளை சேகரிப்பதற்கான ஆரம்ப முயற்சியில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் முயற்சியில் தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் ரோவர் பாறை மாதிரிகளை சேகரிக்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறிய மேட்டின் புகைப்படம்

சிறிய மேட்டின் புகைப்படம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் ரோவரின் மூலம் மையத்தில் துளையுடன் கூடிய ஒரு சிறிய மேட்டின் புகைப்படத்தை வெளியிட்டது. செவ்வாய் கிரகத்தில் ரோபோவால் தோண்டப்பட்டது. அதுவே முதன்முறையாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து தற்போது இரண்டு முறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரோவர் மூலம் பூமிக்கு அனுப்பப்பட்ட தரவில், குழாயில் மாதிரியை சேகரித்து அடைத்து வைக்கும் முயற்சியை ரோவர் தவறவிட்டது என்று கணிக்கப்படுகிறது.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனம்

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனம்

1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா நிகழ்த்தி வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது.

மலைகள், குன்றுகள், பாறைகள்

மலைகள், குன்றுகள், பாறைகள்

இந்த பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக படம் படித்து அனுப்பியது. இந்த ரோவர் ஆனது கடந்த கால வாழ்க்கையின் அறிகுறிகளை கண்டறியும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

பண்டை ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரிக்க காரணம் உயிரனங்கள் ஏதேனும் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளதா என்பதை கண்டறியவே என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்ய உள்ளது என ஆய்வு திட்டத்தின் இயக்கனர் கென் ஃபெர்லி கூறினார். மேலும் இதுகுறித்து கென் ஃபெர்லி கூறுகையில், செவ்வா கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பூமியின் சுற்றுப்புற பகுதிகள் போன்றே இருப்பதாக கூறினார்.

Best Mobiles in India

English summary
Nasa's Perseverance Rover Collected Two Rock Samples in Mars
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X