Home
News

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் எடுத்த வீடியோ.. மார்ஸுக்கு இரண்டு நிலவுகளா?

சூரிய கிரகணம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் நினைவிற்கு என்ன தோன்றும்? சூரியனுக்கும் நாம் வசிக்கும் பூமி கிரகத்திற்கு இடையில் ஒரு கருப்பு உருண்டை வந்து நேர்கோட்டில் நின்று பின் மறையும் காட்சி உங்கள் கண்களுக்குள் வந்து சென்றிருக்கும். பூமிக்கும் சூரியனும் இடையில் நம்முடைய நிலவு நேர்கோட்டில் தோன்றி மறையும் நிகழ்வைத் தான் நாம் சூரிய கிரகணம் என்று குறிப்பிடுகிறோம். இதேபோன்ற நிகழ்வு தான், சமீபத்தில் செவ்வாய் கிரகத்திலும் நடந்தேறியுள்ளது. ஆனால், செவ்வாய் கிரகம் இரண்டு நிலவுகளைக் கொண்ட கிரகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகளா?

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகளா?

எது, செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகளா? என்று நீங்கள் ஆச்சரியப்பட வாய்ப்புள்ளது. இதற்கே ஷாக்கானால் எப்படி? அப்போ, நம் பிரபஞ்சத்தில் இருக்கும் சனி கிரகத்திற்கு 82 நிலவுகள் என்ற விஷயம் தெரிந்தால் உங்களுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்? சரி, விஷயத்திற்கு வருவோம். நமது பூமியில் நிகழும் சூரிய கிரகண நிகழ்வை ஒத்த கிரகண நிகழ்வு சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வை நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் முழுமையாகப் பதிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நடந்த சூரிய கிரகணம்

செவ்வாய் கிரகத்தில் நடந்த சூரிய கிரகணம்

பூமியில் நிகழும் சூரிய கிரகணத்தையே நாம் வியந்து முழு வியப்பில் பார்த்து ரசிப்போம், இப்போது செவ்வாய் கிரகத்தின் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் இரண்டு நிலவுகளில் ஒன்றான ஃபோபோஸ் இடம்பெறும் கிரகணத்தின் இந்த விரைவு வீடியோவை நாசாவின் பெர்செவரன்ஸ் மார்ஸ் ரோவர் படம் பிடித்துள்ளது. பெர்ஸெவரன்ஸ் ரோவர் எடுத்த இந்த வீடியோ, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து ஜூம் செய்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்படாத தரத்தில் முதல் வீடியோ ஆதாரம்

இதுவரை செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்படாத தரத்தில் முதல் வீடியோ ஆதாரம்

இதுவரை செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் இந்த செவ்வாய் சூரிய கிரகண நிகழ்வு தான் பெர்ஸ்வெரன்ஸ் ரோவரால் அதிகம் ஜூம் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட ஒரே வீடியோ ஆதாரம் என்று NASA குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஃபோபோஸ் நிலவு, சூரியனுக்கு இடையில் வந்து கிரகணத்தின் நிகழ்வைத் துவங்கி பின் மறையும் வரை பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் அதிக பிரேம்-ரேட் கொண்ட வீடியோவாக ஜூம் செய்து படம்பிடித்துள்ளது. இந்த நிகழ்வு பற்றி நாசா மேலும் கூறுகையில்,

போபோஸ் நிலவு செவ்வாய் கிரகத்துடன் மோதுமா?

போபோஸ் நிலவு செவ்வாய் கிரகத்துடன் மோதுமா?

"செவ்வாய் கிரகணங்களைக் காண எங்கள் ரோவர்களைப் பயன்படுத்துவது விஞ்ஞானிகளுக்கு நிலவுகளின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தைக் காண வாய்ப்பளிக்கிறது. சிவப்பு கிரகத்திற்கு அருகாமையில் உருவாக்கப்பட்ட தீவிர அலை சக்திகள், போபோஸ் செவ்வாய் கிரகத்தை நோக்கி மிக மெதுவாக நகர்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும், இப்போதிலிருந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, போபோஸ் செவ்வாயுடன் மோதும்," என நாசா அறிக்கை தெரிவித்துள்ளது.

பெர்ஸ்வெரன்ஸின் முதன்மை நோக்கம் என்ன தெரியுமா?

பெர்ஸ்வெரன்ஸின் முதன்மை நோக்கம் என்ன தெரியுமா?

இந்த நிகழ்விற்காக பெர்ஸ்வெரன்ஸின் கண்கள் வானத்தில் இருந்தாலும் கூட, பெர்ஸ்வெரன்ஸின் முதன்மை நோக்கங்களில் ஒன்று, பண்டைய செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகள் எதுவும் உள்ளதா என்ற தடயங்களைத் தேடிச் சேகரிப்பதாக மட்டுமே இருக்கிறது. ரோவர் ரெட் பிளானட்டின் ரெகோலித், பாறை மற்றும் தூசி ஆகியவற்றைப் படித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும், இது செவ்வாய் கிரகத்தில் உள்ள சில மாதிரிகளைச் சேகரித்து தேக்ககப்படுத்தும் முதல் ரோவர் வகைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகம் பற்றி நமக்குத் தெரியாத பல புதிய தகவலை இந்த ரோவர் வழங்கி வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் ஒலியை கேட்டு வியந்து போன விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தின் ஒலியை கேட்டு வியந்து போன விஞ்ஞானிகள்

இதற்கிடையில், செவ்வாய் கிரகத்தின் முதல் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது காற்றுடன் கூடிய அமைதியான கிரகத்தை ரோவர் சமீபத்தில் வெளிப்படுத்தியது. செவ்வாய் கிரகத்தில் இரண்டு வெவ்வேறு வேகமான ஒலியை கேட்கும் போது, விசித்திரமான தாமதமான விளைவை ஏற்படுத்தும் நிகழ்வு நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தனர். இதற்கான எளிமையான அர்த்தம், செவ்வாய் கிரகத்தில் ஒலி பூமியைப் போல் செயல்படுவதில்லை. பூமியை விட மிகத் தாமதமாக ஒலி செவ்வாய் கிரகத்தில் பயணிக்கிறது என்பதே அர்த்தமாகும்.

சிவப்பு கிரகத்தின் அசல் சுற்றுப்புற ஒலி எப்படி இருக்கிறது?

சிவப்பு கிரகத்தின் அசல் சுற்றுப்புற ஒலி எப்படி இருக்கிறது?

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பிறகு, அதன் இரண்டு மைக்ரோஃபோன்கள் பதிவு செய்யத் தொடங்கின, விஞ்ஞானிகள் முதல் முறையாகச் சிவப்பு கிரகத்தின் அசல் சுற்றுப்புற ஒலி எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க இது அனுமதித்தது. வெள்ளிக்கிழமை நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் பெர்செவரன்ஸ் மைக்ரோஃபோன்களால் எடுக்கப்பட்ட ஐந்து மணிநேர ஒலியின் முதல் பகுப்பாய்வைக் கொடுத்தனர்.

ஷூபாக்ஸ் அளவிலான சூப்பர் கேமராவின் மைக்

செவ்வாய் கிரகத்தில் முன்னர் அறியப்படாத கொந்தளிப்பை ஆடியோ வெளிப்படுத்தியது. முக்கிய மைக்ரோஃபோனைக் கொண்ட ரோவரின் மாஸ்டில் பொருத்தப்பட்ட ஷூபாக்ஸ் அளவிலான சூப்பர் கேமராவின் மைக் இதை ரெக்கார்ட் செய்தது என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரும் அறிவியல் இணை இயக்குநருமான சில்வெஸ்ட்ரே மாரிஸ் கூறினார். செவ்வாய் கிரகத்தில் நடந்த இந்த சூரிய கிரகண நிகழ்வு பற்றிய உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான சுவாரசியமான செய்திகளை அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
NASA s Perseverance Rover Captured Solar Eclipse On Mars Watch The Video : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X