Just In
- 1 hr ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
- 13 hrs ago
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- 14 hrs ago
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!
- 15 hrs ago
வாட்ஸ்அப் குரூப்: இனி அந்த சிக்கல் இருக்காது.! வரப்போகிறது புதிய அப்டேட்.!
Don't Miss
- Movies
ஒரே வார்த்தையில் அல்லு அர்ஜுனை அலற விட்ட அட்லி...அப்படி என்ன சொன்னாரு?
- News
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசாணை...தமிழக அரசு அதிரடி
- Finance
தங்கம் விலை இன்றும் சரிவா.. எவ்வளவு குறைந்திருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Automobiles
3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எடுத்த வேலையை உரிய நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்...
- Sports
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓஹோ., இது இப்படிதான் இருக்குமா?- கேலக்ஸியின் பிரமாண்ட காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி!
நாசா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி நாசா நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் கடந்த டிசம்பர் மாதம் ஏவப்பட்டது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நமது அண்டை விண்மீன் மண்டலத்தின் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பகிர்ந்திருக்கிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் தகவல்படி, ஹப்பிளை பின்தொடர்ந்து வரும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது அண்டை விண்மீன் மண்டலத்தின் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களை நாசா டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. இதன் GIF என்ற படம் மங்கலான படத்தை கூர்மைப்படுத்தி, மின்னும் நட்சத்திங்களை போன்று கிரகங்களை காட்டுகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
நாசாவின் முந்தைய அகச்சிவப்பு ஆய்வகமான ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடும் போது, இந்த தொலைநோக்கியில் பதிவு செய்த காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. காரணம் இந்த வெப் தொலைநோக்கியில் பெரிய ரக முதன்மை கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அகச்சிவப்பு வானத்தை இன்னும் தெளிவாக பார்க்க மேம்பட்ட டிடெக்டர்கள் இதில் இருக்கிறது.

ஹப்பிளின் வாரிசாக இந்த தொலைநோக்கி
தொலைநோக்கியின் MIRI மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. MIRI என்பது மிட் இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகும். இதில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் மூலக்கூறுகளானது விண்மீன் வாயுக்கள் குறித்து ஆய்வாளர்களை நன்கு அறிந்துக் கொள்ள உதவுகிறது. நாசாவின் இந்த பதிவுக்கு 8300-க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்திருக்கிறது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது ஹப்பிளின் வாரிசாக அழைக்கப்படுகிறது. இந்த தொலைநோக்கியானது ஜூன் 2022-ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
அண்டை விண்மீன் மண்டலத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
நாசாவின் புதிய தொலைநோக்கி அண்டை விண்மீன் மண்டலத்தின் அதிர்ச்சியூட்டும் படங்களை பதிவு செய்து பகிர்ந்திருக்கிறது. இந்த புதிய தொலைநோக்கியின் முதன்மை ரக பெரிலியம் கண்ணாடியானது 18 ஹெக்ஸாகோனல் கோல்ட் பிளேடட் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசாக இது இருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கிாயனது 25 சதுர மீடட்ர் பரப்பளவை கொண்டிருக்கிறது. இந்த தொலைநோக்கி ஹப்பிளை விட 6 மடங்கு பெரியதாகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

நாசா உருவாக்கிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. குறிப்பாக இந்த புதிய தொலைநோக்கி, முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்குசக்தி மற்றும் திறன் கொண்டதாகும். விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய 'ஹப்பிள்' என பெயரிடப்பட்ட தொலைநோக்கியில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதனுள் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் உபயோகத்தை பொறுத்து இந்த தொலைநோக்கி அதன் உத்தேசித்த ஆயுட்காலஅளவான 10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கும் தொலைநோக்கி
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக செயல்படுகிறது. குறிப்பாக உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999