நிலவில் மனிதர்களுக்கான முகாம்! வடிவமைப்பை வெளியிட்ட நாசா‌‌..

|

நாசா நிறுவனம் அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் வரலாற்று சாதனையை மீண்டும் படைக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பணி, அதன் தற்போதைய கால அட்டவணையில் இருந்து சில தாமதங்களை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும் நாசா இன்னும் தயாரிப்புகளுக்கு ஈடுபட்டுள்ள நிலையில், சந்திரனில் ஒரு தளத்தை எவ்வாறு உருவாக்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாசா முன்வைத்த புதிய 13 பக்க அறிக்கையில்

நாசா முன்வைத்த புதிய 13 பக்க அறிக்கையில், அந்த அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது மனிதர்களுக்கான விண்வெளி பயணத் திட்டங்களை எவ்வாறு உருவாக்க திட்டமிட்டுள்ளது என்பதை விளக்குகிறது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பணியில் ஈட்டுள்ளநிலையில், ஆர்ட்டெமிஸ் 2024 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை மீண்டும் அனுப்பும் பணிக்கு உதவும் வகையில் பணியாற்றும்.

மேற்கொள்ளப்படும் இந்த

மனிதர்களால் மேற்கொள்ளப்படும் இந்த செயல்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி, பூமியின் அண்டை கிரகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம் தளங்களில் அடிப்படை முகாம்களையும் தினசரி நடவடிக்கைகளையும் நிறுவுவதாகும். செவ்வாய் கிரகத்திற்கான மார்ஸ் மிஷனுக்கு முன்னர், சந்திரனிலும் இதைப் பயிற்சி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.! தரமான சலுகை அறிவிப்பு.!வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.! தரமான சலுகை அறிவிப்பு.!

டைக்கவுள்ள

"செவ்வாய் கிரகத்திற்கான முதல் மனித பயணத்தின்போது நமக்கு கிடைக்கவுள்ள அனுபவங்களுக்கு ஏற்ப செயல்திட்ட காலம் மற்றும் செயல்பாடுகளுக்கு எங்களை தயார்படுத்த, சந்திரனிலும் அதைச் சுற்றியும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான" நீடித்த சந்திர மேற்பரப்பு இருப்புக்கான திட்டம்" உதவும் என நாசாவால் பகிரப்பட்டுள்ளது.

 நாசா சந்திரனின் தென் துருவத்தில் அடிப்படை முகாமை ஆர்ட்டெமிஸ்

இத்திட்டத்தின் படி நாசா சந்திரனின் தென் துருவத்தில் அடிப்படை முகாமை ஆர்ட்டெமிஸ் உருவாக்கும். விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் 7 முதல் 45 நாட்கள் வரை எங்கும் செலவிட முடியும். அதற்காக மூன்று முதன்மை பணி கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குழு பல்வேறு தளங்களுக்கு செல்ல போக்குவரத்திற்கு உதவும்‌ சந்திர நிலப்பரப்பு வாகனம்( எல்.டி.வி ), ஆர்ட்டெமிஸ் அடிப்படை முகாமில் இருந்து நீண்ட பயணங்களுக்கான வாழக்கூடிய இயக்க தளம் ( Habitable mobility platform) மற்றும் சந்திர தென் துருவத்தில் நான்கு குழுவினருக்கு குறுகிய காலம் தங்குவதற்கான அடித்தள மேற்பரப்பு வாழ்விடம் ஆகியவை 3 முதன்மை பணி கூறுகள் ஆகும்

மின்சாரம், தகவல் தொடர்பு

மின்சாரம், தகவல் தொடர்பு, கதிர்வீச்சு கவசம், தரையிறங்கு தளம், கழிவுகளை அகற்றுவது மற்றும் சேமிப்பு திட்டமிடல் போன்ற துணை உள்கட்டமைப்புகளை அடிப்படை முகாமுக்கு காலப்போக்கில் சேர்க்கவும் நாசா திட்டமிட்டுள்ளது. இந்த கூறுகள் சந்திரனில் ஒரு நிலையான திறனைக் கொண்டிருப்பதுடன், அவை வரவிருக்கும் தசாப்தங்களில் உருவாக்கப்படலாம். சில கட்டமைப்புகளின் கான்கிரீட்டில் விண்வெளி வீரர்களின் சிறுநீரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சமீபத்தில் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

இதுபோன்ற ஒரு அமைப்பு

சந்திரனில் இதுபோன்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டதும், விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்துக்கும் அதன் பயணத்துக்கும் ஏற்ப உருவகப்படுத்துவதற்கான ஒரு பயிற்சி களமாக இதை பயன்படுத்துவதை நாசா நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக சந்திர சுற்றுப்பாதையில் நிறுவப்படவுள்ள நுழைவாயில் போன்ற விரிவுபடுத்தப்பட்ட குடியிருப்பு அமைப்பிற்கு செல்ல நான்கு நபர்கள் கொண்ட குழுவை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் பின்னர் சந்திரனின் மேற்பரப்பில் வசிப்பதுடன் நுழைவாயிலிலும் மாறிமாறி இருக்கலாம்.

 மனிதகுல வரலாற்றில் மிக

இந்த பயணங்கள் மனிதகுல வரலாற்றில் மிக நீண்ட கால மனித விண்வெளி பயணங்களாக இருக்கும். நாசா இத்திட்டங்களுடன் தொடரும்போது, ​​இந்த பணிகள் மனிதர்களின் விண்வெளி பற்றிய ஆழமான அறிவை விரிவாக்குவது, மனிதகுலத்திற்குத் தெரிந்த வழக்கமான அன்றாட உயிர்வாழும் நடைமுறைகளையும் எவ்வாறு மாற்றியமைக்கும் பல காரணிகளைக் கொண்டுள்ளன.

Best Mobiles in India

English summary
NASA Reveals The Design Of Fitrst Ever Moon Human Base Camp On Moon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X