செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா.! முக்கிய தகவலை சொன்ன வானியலாளர்.!

|

நாசா அமைப்பு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது செவ்வாய் கிரகத்தில் உயரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக நாசா அமைப்பு பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் உள்ள கல், மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி

அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாய்கிரகத்தில் ஜெசேரோ பள்ளத்தாக்கு என்று கூறப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில்ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும்தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும்

இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படுவதாக நாசா கூறியது.

வெயில் காலத்துக்கு தேவைப்படும்- பாதி விலையில் ஏசி வாங்கலாம்: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடிகள்!வெயில் காலத்துக்கு தேவைப்படும்- பாதி விலையில் ஏசி வாங்கலாம்: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடிகள்!

பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர்

இந்நிலையில் பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டடுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் போன்றவற்றை இதுவரை
இல்லாத அளவு துல்லியமான தரத்தில் புகைப்படங்களை காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை கால சலுகை: கூடுதல் டேட்டா, கூடுதல் வேலிடிட்டி நாட்கள்- பிஎஸ்என்எல் பயனர்களே என்ஜாய்!பண்டிகை கால சலுகை: கூடுதல் டேட்டா, கூடுதல் வேலிடிட்டி நாட்கள்- பிஎஸ்என்எல் பயனர்களே என்ஜாய்!

மேலும் இந்த பெர்சவரன்ஸ் விண்கலத்தின் செயல்பாடுகளை நாசா வானியாலாளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக இப்போது கிடைத்துள்ள செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை குறித்து வில்லியம்ஸ் கூறுகையில், ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் அம்சங்களும், நமது பூமியின் நதி டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் வழங்கும் ரூ. 6000 மதிப்புள்ள நன்மைகள்.. நிபந்தனைகளை படிக்க மறக்காதீர்கள் அதான் முக்கியமே..ஏர்டெல் வழங்கும் ரூ. 6000 மதிப்புள்ள நன்மைகள்.. நிபந்தனைகளை படிக்க மறக்காதீர்கள் அதான் முக்கியமே..

அந்த புகைப்படங்களில் காணப்படும்

அதேபோல் அந்த புகைப்படங்களில் காணப்படும் மூன்று அடுக்குகளின் வடிவமானது, சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் எமி வில்லியம்ஸ். ஆனாலும் இந்த படங்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றது தான் என்றும், ரோவர் கருவியை எங்கு அனுப்ப வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானப்பதற்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.12,000 விலையில் இவ்வளவு அம்சங்களா?- வந்தது மோட்டோ ஜி ப்யூர், மோட்டோ இ40: எல்லாமே சமீபத்திய அம்சங்கள்!ரூ.12,000 விலையில் இவ்வளவு அம்சங்களா?- வந்தது மோட்டோ ஜி ப்யூர், மோட்டோ இ40: எல்லாமே சமீபத்திய அம்சங்கள்!

பூமியைத் தவிர உயிரினங்கள்

அதேபோல் பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. மேலும் பூமிக்கு அருகில் உள்ள சிறுகோளை திசை திருப்ப நாசா டார்ட் என்ற விண்கலத்தை தயார் செய்துள்ளதாக
தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தூக்கிச் செல்லும் அம்சத்தோடு டார்ட் விண்கலத்தை நாசா தாயார் செய்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பூமிக்கு அருகில் வரும் சிறுகோளை திசை திருப்பும் பணியை இந்த விண்கலம் மேற்பார்வையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்சிறுகோள் என்பது பூமியை மோதினால் ஏற்படும் அழிவு என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத அளவிலானது இதுபோன்ற அபாயத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA releases new photos of Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X