செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கியது இப்படி தான்: வைரல் வீடியோ!

|

நாசா அமைப்பு செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது. அதாவது செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது.

 பயணத்தை அடுத்து வெற்றிகரமாக

சரியாக 7 மாத பயணத்தை அடுத்து வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்தது. மேலும் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், ஜெசிரா பள்ளத்தில் கடந்த வாரம் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

ரோவர் இறங்கிய காட்சி

ரோவர் இறங்கிய காட்சி

மேலும் செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பெர்சர்வன்ஸ் ரோவர் இறங்கிய காட்சிகளை முதன்முறையாக வெளியிட்டுள்ளது நாசா அமைப்பு. அதன்படி பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சர்வன்ஸ் ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் இறங்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்தனர்

மேலும் நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, விண்கலத்தின் 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 5 கேமராக்கள் மூலம் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரோவர் துல்லியமாக இறங்கிய காட்சியை பூமியின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து பார்த்த விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்தனர்.

 இந்த ரோபோட்டிக் ரோவர் 5 மைல்கள்

குறிப்பாக 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் 5 மைல்கள் தூரம் வரை பயணித்து மாதிரிகளை சேகரிக்கும். இதற்கு முன்பு ஆற்றுப்படுகை இருந்த இடமாக கருதப்படுவதால், இங்கு கிடைக்கும் மாதிரிகள் செவ்வாய் கிரகம் குறித்த பல புதிய தகவல்களை வழங்கும்.

 மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031-ம் ஆண்டு பூமிக்கு

அதேபோல் இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031-ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஓராண்டுக்கு ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள்.

ஆக்சைடை ஆக்சிஜனாக

மேலும் கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோவருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்துதான் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா வகுக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA releases footage of rover landing on Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X