இரண்டு மாதம் படுக்கையில் இருந்தால் ரூ.13 லட்சம்: நாசா வழங்குகிறது!

ஜஸ்ட் படுக்கையில் படுத்து கொண்டிருந்தால் போதும், உங்களுக்கு நாசா பணம் கொடுக்கும்

|

படுத்து கொண்டே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்றால் யாராவது நம்புவீர்களா? ஆம் அமெரிக்காவின் நாசா அப்படி ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் ராக்கெட் எஞ்சினியரிங் அல்லது டிசைனிங் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜஸ்ட் படுக்கையில் படுத்து கொண்டிருந்தால் போதும், உங்களுக்கு நாசா பணம் கொடுக்கும்.

இரண்டு மாதம் படுக்கையில் இருந்தால் ரூ.13 லட்சம்: நாசா வழங்குகிறது!

செயற்கை புவியீர்ப்பு விசை குறித்து நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஈஎஸே என்ற நிறுவனமும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த செயற்கை புவியீர்ப்பு விசை விண்வெளிக்கு செல்லும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

 24 வயது முதல் 55 வயது வரை

24 வயது முதல் 55 வயது வரை

இந்த ஆய்வில் 24 வயது முதல் 55 வயது வரையிலான 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் இரண்டு மாதங்களுக்கு படுக்கையில் படுத்திருக்க வேண்டும். இதற்காக நாசா உங்களுக்கு ஒரு பெரிய தொகை தருகிறது. அதாவது இந்த இரண்டு மாத படுக்கைக்காக உங்களுக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.13 லட்சம் ஆகும்

ஜெர்மன் ஏரோஸ்பேஸ்

ஜெர்மன் ஏரோஸ்பேஸ்

படுக்கையில் இருக்க சம்மதிப்பவர்கள் படுக்கையில் இருந்து கொண்டே தங்களுக்கு தேவையான உணவு, பரிசோதனை உள்பட அனைத்தையும் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆய்வுக்கான வசதியை AGBRESA என்ற விண்வெளி நிறுவனமும், ஜெர்மன் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து தரவுள்ளன

கார்டியோவாஸ்குலர்

கார்டியோவாஸ்குலர்

இந்த ஆய்வில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், மேலும் அவர்களின் அறிவாற்றல், தசை வலிமை, பேலன்ஸ் மற்றும் கார்டியோவாஸ்குலர் ஆகியவைகளின் செயல்பாடுகள் பல்வேறு சோதனைகள் மூலம் கண்காணிக்கப்படும். விஞ்ஞானிகள் நுட்பம் விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

தலைமை விஞ்ஞானி லெட்டிகா வேகா

தலைமை விஞ்ஞானி லெட்டிகா வேகா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடை குறைபாடுகளின் விளைவுகள் முதன்மையான விஷயமாக கருதப்பட்டாலும், இதுபோன்ற சோதனைகள் அங்கும் உள்ளன: பூமியில் கட்டுப்பாட்டு நிலைமைகளின் கீழ் சில ஆராய்ச்சி செய்யும்போது விண்வெளி வீரர்களுக்கு அது வேறுவித உதவியாக இருக்கும்" என்று நாசாவின் மனித ஆராய்ச்சி திட்டத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பிற்கான அசோசியேட் தலைமை விஞ்ஞானி லெட்டிகா வேகா தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படும்

மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படும்

இந்த சோதனை மூலம் விண்வெளியில் செயற்கை புவியிர்ப்பு விசை குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்டால், அது விண்வெளி வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படும். விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நீண்ட காலம் இருக்கவும் அது உதவும்.

Best Mobiles in India

English summary
NASA ready to pay 13 Lacs if you lie down on bed for two months: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X