மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?

|

நீங்கள் விண்வெளி தொடர்பான பல்வேறு உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பும் ஒருவராக இருந்தால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கானது தான். நாசாவால் நிர்வகிக்கப்படும் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் இப்போது இணையத்தின் பேசும் பொருளாக மாறியுள்ளது. நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஏராளமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான செவ்வாய் கிரகத்தின் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நாசா செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் என்ன?

நாசா செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் என்ன?

நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகம் பற்றிப் பல விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு சாதிக்கூறு உள்ளதா என்று மிக முக்கியமான ஆராய்ச்சியைச் செய்து வருகிறது. விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பித் தங்க வைக்கவும் ஒரு திட்டத்தை நாசா தன் வசம் வைத்துள்ளது. இதற்காக நாசா செவ்வாய் கிரகத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் மிக முக்கியமான ஆராய்ச்சிகளைச் செவ்வாயில் துளையிட்டு மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் நம்பமுடியாத புகைப் படத்தை வெளியிட்ட நாசா

செவ்வாய் கிரகத்தின் நம்பமுடியாத புகைப் படத்தை வெளியிட்ட நாசா

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, செவ்வாய் கிரகத்தைக் கண்காணிக்கும் UAHiRISE செயற்கைக்கோள் தற்சமயம் படம்பிடித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அழகு எல்லா இடங்களிலும் உள்ளது, என்று நாசா இந்த புதிய படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளது. மார்ஷியன் மேற்பரப்பின் புதிய படத்தைப் பகிர்ந்துகொண்ட நாசா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தது, "நீர் மற்றும் எரிமலைக் குழம்புகள் ஒரு நிலப்பரப்பில் தங்கள் அடையாளங்களை விட்டுச் செல்வது போல், காற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பொருளாகச் செவ்வாய்க் கிரகத்தில் திகழ்கிறது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..

செவ்வாயின் மாடிம் வாலிஸ் இல் படம்பிடிக்கப்பட்ட படம்

செவ்வாயின் மாடிம் வாலிஸ் இல் படம்பிடிக்கப்பட்ட படம்

செவ்வாய் கிரகத்தில் உள்ள மாடிம் வாலிஸ் உள்ள இடத்தில் இந்த புகைப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காற்றின் சக்தி செவ்வாய் கிரகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்த புகைப்படங்கள் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பைக் காற்று எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படத்தில் உள்ள கோடுகள் மற்றும் வண்ணங்கள் நமது செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டரில் உள்ள @UAHiRISE கேமராவில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு புகைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா?

கிட்டத்தட்ட இந்த புகைப்படத்தில் உள்ள விபரங்கள் ஒரு சுருக்க ஓவியத்தை நினைவூட்டுகின்றன! என்று நாசா விண்வெளி நிறுவனம் தனது பதிவில் சேர்த்து பதிவிட்டுள்ளது. இந்த பதிவு, பகிரப்பட்டதிலிருந்து, மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை சேகரித்துள்ளது மற்றும் பார்வையாளர்களின் எண்கள் இன்னும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த பதிவு பல்வேறு வகையான கருத்துகளையும் தனது கமெண்ட் பிரிவில் குவித்துள்ளது.

பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்

இணையத்தை கலக்கிய நாசாவின் புகைப்படம்

இணையத்தை கலக்கிய நாசாவின் புகைப்படம்

இதை "அற்புதம்," என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதியுள்ளார். கேபோல், மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் "அழகான புகைப்படம்," என்று பகிர்ந்துள்ளார். பலர் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்த இதய இமோஜிகளை வெளியிட்டுள்ளனர். நாசா பகிர்ந்துள்ள செவ்வாய் தொடர்பான பதிவு பற்றி உங்களின் கருத்து என்ன? என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இதேபோல் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றிய பபுகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஸ் ஹெலிகாப்டரும் நாசா ஆராய்ச்சியும்

மார்ஸ் ஹெலிகாப்டரும் நாசா ஆராய்ச்சியும்

மார்ஸ் ஹெலிகாப்டர் நாசா ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியதற்குக் காரணம் என்ன தெரியுமா? உண்மையில் இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் வெறும் 5 முறை மட்டுமே பறக்கும்படி வடிவமைத்து உருவாக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாகச் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது உண்மையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் கில்லி மாதிரி பறக்கும் மார்ஸ் ஹெலிகாப்டர்.. நாசாவை வியப்பில் ஆழ்த்த காரணம் என்ன?செவ்வாய் கிரகத்தில் கில்லி மாதிரி பறக்கும் மார்ஸ் ஹெலிகாப்டர்.. நாசாவை வியப்பில் ஆழ்த்த காரணம் என்ன?

செவ்வாய் கிரகம், விண்வெளி, தொழில்நுட்ப்பம் பற்றி அறிய

செவ்வாய் கிரகம், விண்வெளி, தொழில்நுட்ப்பம் பற்றி அறிய

மார்ஸ் ஹெலிகாப்டர் தொடர்பான இந்த முழு செய்தியை படிக்கச் எங்கள் பக்கத்தின் அறிவியல் பிரிவை பார்வையிடுங்கள். செவ்வாய் கிரகம், விண்வெளி, தொழில்நுட்ப்பம், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டெலிகாம் தகவல்கள் போன்ற அனைத்து தொழில்நுட்ப்பம் தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Posts Incredible Picture Of Mars Can You Guess What The Viral Image Shows : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X