நிலவில் முதல் வீடு ரெடி.. நாசா நிலவில் எப்படி வீடு கட்ட போகிறது? 2040-ல் நிலவில் மனிதர்களுக்கான வீடு நிஜமா?
சமீபத்தில் வெளியான நாசா (NASA) தகவல், உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள தகவலின் படி, 2040 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதர்களுக்கான வீடுகளை கட்ட நாசா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை நாசா எப்படி கட்டப்போகிறதென்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் (NYT) செய்தியின் படி, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிலவில் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. அப்பல்லோ 17 (Apollo 17 mission) பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் சந்திர மேற்பரப்பில் 75 மணி நேரம் செலவிட்டதை தொடர்ந்து, நாசா இம்முறை மனிதர்களை நீண்ட காலம் தங்க விரும்புகிறது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு, நாசா மனிதர்களை நிலவுக்கு மீண்டும் அனுப்ப திட்டமிட்டு வருகிறது.

ஆனால், இந்த முறை ஜஸ்ட் விசிட் செய்யமட்டுமல்லாமல், நிலவில் தங்கி, எதிர்கால சந்ததியினர் தங்க தேவைப்படும் வீடுகளை நிலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. நாசாவின் காலவரிசை லட்சியமானது என்று சில நிபுணர்கள் நம்பினாலும், அமெரிக்க அவுட்லெட் அரை டஜன் விஞ்ஞானிகளிடம் பேசியது, அவர்கள் சந்திர கட்டமைப்புகளுக்கான 2040 இலக்கை அடைய முடியும் என்று கூறியுள்ளனர்.
நிலவுக்கு 3டி பிரிண்டரை (3D printer) அனுப்பி, அதன் பிறகு கட்டமைப்புகளை உருவாக்குவது நாசாவின் திட்டமாகும். நிலவின் பள்ளம் நிறைந்த மேற்பரப்பின் மேல் அடுக்கில் இருந்து பாறை சில்லுகள் (moon rock chips) மற்றும் கனிமத் துண்டுகளால் (mineral fragments) செய்யப்பட்ட கான்கிரீட்டை பயன்படுத்தி, 3டி பிரின்டிங் முறைப்படி, நிலவில் மனிதர்களுக்கான வீட்டை நாசா உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான ஆராய்ச்சி குழு தலைவர் கூறுகையில், ''நாங்கள் ஒரு முக்கிய தருணத்தில் இருக்கிறோம், சில வழிகளில் இது ஒரு கனவு திட்டமாக இருக்கிறது. மனிதர்கள் நிலவில் தங்கவைப்பதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. இந்த முறையை நாம் தவிர்க்க முடியாது" என்று நாசாவின் தொழில்நுட்ப முதிர்ச்சிக்கான இயக்குனர் நிகி வெர்கெய்சர் கூறியுள்ளார்.

விண்வெளி நிறுவனம் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான கூட்டாண்மையை நம்பியுள்ளது. "ஒரு பொதுவான குறிக்கோளுடன் சரியான நேரத்தில் அனைத்து சரியான நபர்களையும் நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம். அதனால் தான் நாங்கள் நாசாவின் திட்டம் சரியான நேரத்தில் நிறைவு பெரும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2024 பிப்ரவரியில் சந்திரனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு 3டி பிரிண்டர் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று நாசா தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன், நாசா, கென்னடி விண்வெளி மையத்தில் (Kennedy Space Centre) இருந்து ரோபோக்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு, அதன் முன்னோடியான - ஆர்ட்டெமிஸ் 1-ல் (Artemis 1) இந்த திட்டத்திற்கான துவக்கத்தை துவங்கவுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் துவங்கி ஒரு வருடத்திற்கு பிறகு, அடுத்த ஆண்டு ஆர்ட்டெமிஸ்-2 (Artemis 2) திட்டம் நிலவு நோக்கி விண்ணில் பாயும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பூமியின் (earth) செயற்கைக்கோளுக்கு வெற்றிகரமாக விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. முதல் சந்திரப் பயணம் சந்திரனைச் சுற்றி வந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் 2 இல் நான்கு மனிதக் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். 2025 அல்லது 2026 ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் 3 மிஷன் (Artemis 3 mission) சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் (SpaceX Starship) உதவியுடன் மனிதர்களை மேற்பரப்புக்குத் திரும்பும் என்று பார்ச்சூன் அறிக்கை கூறியது. இந்த திட்டத்திற்கு நடுவே நிலவில் நாசா மனிதர்களுக்கான வீடுகளை கட்ட துவங்கும் என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








