செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து.. நிலவில் ஓட்டை போடும் NASA.. அதுவும் பெரிய ஓட்டை.. ஏன்?
சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்பு (1969) அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA), நிலவின் மேற்பரப்பில் (Moon Surface) தன்னுடைய விண்வெளி வீரர்களின் கால்தடங்களை மட்டுமே விட்டுவந்தது. ஆனால் இம்முறை, நிலவின் மேற்பரப்பில் அதைவிட பெரியப்பெரிய விஷயங்களை செய்ய உள்ளது.
நாசா அப்படி என்ன செய்ய போகிறது? கடந்த 2022 இல் பெர்சவரென்ஸ் ரோவர் (Perseverance Rover) மூலம் செவ்வாய் (Mars) கிரகத்தில் போட்ட ஓட்டை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறவைக்கும் அளவிற்க்கு, சந்திர கிரகத்தில் "பெரிய அளவிலான ஓட்டைகளை" போடவுள்ளது. இன்னும் புரியும்படி சொன்னால் நிலவில் சுரங்கம் தோண்டவுள்ளது!

எதற்காக? வேறு எதற்காக நிலவில் உள்ள வளங்களுக்காக தான்! இதற்கான வேலைகளை அடுத்த மாதம் முதல் தொடங்குகின்றன. முதற்கட்டமாக சந்திர கிரகத்திற்கு ஒரு ட்ரில் ரிக்கை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இப்படியாக வருகிற 2032 ஆம் ஆண்டிற்குள் சந்திர கிரகத்தில் ஒரு பெரிய ரெகோலித் சுரங்கத்தை நிறுவ வேண்டுமென்று நாசா திட்டமிட்டுள்ளது.
இப்படியாக நிலவின் மேற்பரப்பில் உருவாகும் முதற்கட்ட செயலாக்க ஆலையை (Pilot processing plant) பயன்படுத்தி நீர், இரும்பு மற்றும் அரிய வகை உலோகங்கள் போன்ற வளங்களை பிரித்தெடுக்க முடியும். இதை நாங்கள் சொல்லவில்லை, ராய்ட்டர்ஸ்-க்கு பேட்டியளித்த நாசாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானியே கூறியுள்ளார்.
நிலவில் உள்ள வளங்களை தோண்டி எடுத்து நாசா என்ன செய்ய போகிறது? முன்னதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி, சந்திர கிரகத்தில் நிழல் மிகுந்த பகுதிகளில் பனி நீர் தேக்கங்கள் மறைந்துள்ளன. அவைகளில் இருந்து எதிர்கால விண்வெளி பயணத்திற்கான ராக்கெட் எரிபொருளை தயாரிக்க முடியும் என்று நாசா நம்புகிறது.
அதுமட்டுமின்றி நிலவின் மேற்பரப்பிற்கு கீழே மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் தாதுக்களும் கிடைக்குமென்று நாசா எதிர்நோக்குகிறது. அதாவது சீனாவின் சாங் 5 (Chang'e 5) மூன் மிஷனில் கிடைத்தது போலவே தனக்கும் ஏதாவது புதிய வகை கனிமம் கிடைக்கும் என்று நாசா நம்புகிறது.
நினைவூட்டும் வண்ணம், சாங் 5 என்பது சீனாவின் முதல் லூனார் சாம்பிள் ரிட்டர்ன் மிஷன் (Lunar sample-return mission) ஆகும். அதாவது சந்திர கிரகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியை பூமிக்கு கொண்டுவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சி பணியாகும். இம்முயற்சியின் போது நிலவில் புதிய வகை கனிமம் ஒன்று கிடைத்தது; அதில் அணுக்கரு இணைவுக்கு (Nuclear fusion) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஹீலியம்-3 (Helium-3) கண்டுபிடிக்கப்பட்டது.
2022ல் செவ்வாய் கிரகத்தில் நாசா போட்ட ஓட்டைகுள் என்ன கிடைத்தது? செவ்வாய் கிரகத்தில் உள்ள நாசாவின் பெர்சவரென்ஸ் ரோவர் ஆனது - ஆய்வு பணிகளுக்காக - வைல்ட்கேட் ரிட்ஜ் (Wildcat Ridge) என்று அழைக்கப்படும் ஒரு செவ்வாய் கிரக பாறையில் ஓட்டை ஒன்றை போட்டது
அதற்குள் ஆர்கானிக்-ரிச் மெட்டீரியல் (Organic-rich material), அதாவது கரிம வளமான பொருள் கிடைத்துள்ளதாகவும், இந்த கண்டுபிடிப்பானது முன்னொரு காலத்தில் அங்கே நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் நாசா கூறியுள்ளது!


Click it and Unblock the Notifications