உயிரினங்கள் வாழ்ந்ததா., ஏதாவது அறிகுறி இருக்கா?- செவ்வாய் கிரகத்தில் தொடங்கும் ஆய்வு: நாசா அறிவிப்பு

|

1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா நிகழ்த்தி வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது.

மலைகள், குன்றுகள், பாறைகள்

மலைகள், குன்றுகள், பாறைகள்

இந்த பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக படம் படித்து அனுப்பியது. இந்த ரோவர் ஆனது கடந்த கால வாழ்க்கையின் அறிகுறிகளை கண்டறியும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. பெர்சவரன்ஸ் போராவ் செவ்வாய் கிரகத்தில் தனது முதல் பாறை மாதிரியை பண்டைய ஏரி படுக்கையின் இடத்தில் இருந்து சேகரிக்கத் தயாராகி வருவதாக நாசா கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

உயிரினங்கள் வாழ்ந்ததா?

பண்டை ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரிக்க காரணம் உயிரனங்கள் ஏதேனும் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளதா என்பதை கண்டறியவே என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்ய உள்ளது என ஆய்வு திட்டத்தின் இயக்கனர் கென் ஃபெர்லி கூறினார். மேலும் இதுகுறித்து கென் ஃபெர்லி கூறுகையில், செவ்வா கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பூமியின் சுற்றுப்புற பகுதிகள் போன்றே இருப்பதாக கூறினார்.

மண் எடுத்து ஆய்வு

இந்த இடத்தில் மண் எடுத்து ஆய்வு செய்யும்போது செவ்வாய் கிரகத்தில் உயிரினம் ஏதேனும் வாழ்ந்தது என்பது உண்மை என்றால் அது நுண்ணியிரியை கொண்டிருக்கும் என அவர் கூறினார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் உயிரினங்கள் வாழ்ந்ததா என்று ஆராய்வதோடு எதிர்காலகத்தில் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா சுவாசிக்க வழி இருக்கிறதா என்பதும் அறிந்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

ஜெசரோ பள்ளத்தில் மாதிரிகள் எடுத்து ஆய்வு

ரோவர் மணல் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதோடு அதை தனது உடலுக்குள் பாதுகாப்பாக வைக்கும் பணியையும் செய்யும் என தெரிவித்தார்.

ஜெசரோ பள்ளத்தில் இருந்து பெர்சவரன்ஸ் ரோவர் முதல் மாதிரியை சேகரிக்கும் இதே இடத்தில் அதன்பின் வருபவர்களும் ஆய்வு மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

வேதியியல் மற்றும் தாது கலவை குறித்த தடயங்கள்

ரோவர் மணல் எடுக்கும் இந்த பள்ளம் முந்தைய காலத்தில் பழங்கால ஏரியின் தாயமாக இருந்தது எனவும் பலமுறை நிரம்பியிருந்து அதன்பின் உள்ளே இழுக்கப்பட்டது எனவும் கணிக்கப்படுகிறது. ரோவர் மாதிரிகளை ஆய்வு செய்து பாறைகளின் வேதியியல் மற்றும் தாது கலவை குறித்த தடயங்களை வெளிப்படுத்தும் எனவும் இதன்மூலம் இது எரிமலைகளால் உருவாக்கப்பட்டதா அல்லது வண்டல் தோற்றம் கொண்டவையா எனவும் கண்டறிய முடியும் என குறிப்பிட்டார்.

ஆய்வு மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும்

ஆய்வு மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும்

முதலாவதாக ரோவர் அதன் 7-அடி நீளம் உள்ள ரோபோ கையை பயன்படுத்தி அதன் மாதிரியை எங்கு எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். பின் சிராய்ப்பு கருவியை பயன்படுத்தி பாறையின் மேல் அடுக்கைத் துளைத்து மாதிரிகளை சேகரிக்கும். நாசா ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் 2030 ஆம் ஆண்டில் ரோவரில் சேமித்து வைக்கப்பட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூமியில் உள்ளது போன்றே பல தடயங்கள்

பூமியில் உள்ளது போன்றே பல தடயங்கள்

ரோவரில் வெளியான தகவலின்படி, பூமியில் ஏற்படும் நில அதிர்வுகள் போன்றே செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைகப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Perseverance Rover Going Take Rock Samples in Mars

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X