ஏலியன்ஸ் வாழ்கிறதா?- தோண்டப்பட்ட மாதிரிகளை காணவில்லை: செவ்வாய் கிரகத்தில் நாசாவின் முதல்முயற்சி தோல்வி!
ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்படும் தரவுகள் பூமிக்கு அனுப்பப்படும் அதன்படி முதல் முயற்சியாக ரோவர் மூலம் செவ்வாய் கிரக மாதிரிகளை ஒரு குழாயில் ரோவர் சேகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பூமிக்கு அனுப்பப்பட்ட தரவின் மூலமே பெர்சவரன்ஸ் ரோவரில் மாதிரிகளி இல்லை என்பது அறியப்பட்டுள்ளது.

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு மாதிரிகளை சேகரித்ததாக கணிக்கப்பட்டது. ஆனால் பூமியில் கிடைத்த தரவுப்படி ரோவரின் பகுப்பாய்வில் பாறை மாதிரிகளை சேகரிப்பதற்கான ஆரம்ப முயற்சியில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியில் தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் ரோவர் பாறை மாதிரிகளை சேகரிக்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ரோபோவால் தோண்டப்பட்டது முதல்முறை
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் ரோவரின் மூலம் மையத்தில் துளையுடன் கூடிய ஒரு சிறிய மேட்டின் புகைப்படத்தை வெளியிட்டது. செவ்வாய் கிரகத்தில் ரோபோவால் தோண்டப்பட்டது இதுவே முதன் முறையாகும். இதன்மூலம் பள்ளம் தோண்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரோவர் மூலம் பூமிக்கு அனுப்பப்பட்ட தரவில், குழாயில் மாதிரியை சேகரித்து அடைத்து வைக்கும் முயற்சியை ரோவர் தவறவிட்டது என்று கணிக்கப்படுகிறது.

எதிர்பார்த்த "துளை-இன்-ஒன்" இது இல்லை
நாசாவின் அறிவியல் பணி இயக்குனரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்புச்சென், இது தாங்கள் எதிர்பார்த்த "துளை-இன்-ஒன்" இல்லை இருப்பினும் புதிய நிலத்தை உடைப்பதில் எப்போதும் ஆபத்து இருக்கிறது என்பது உண்மை. தங்களின் சரியான குழு இதை செய்யும் என தான் நம்புவதாக குறிப்பிட்டார். எதிர்காலத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான தீர்வை நோக்கி நாங்கள் பெர்சவரன்ஸ் ரோவர் உடன் இருப்போம் என குறிப்பிட்டார்.

நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி
1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா நிகழ்த்தி வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது.

மலைகள், குன்றுகள், பாறைகள்
இந்த பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக படம் படித்து அனுப்பியது. இந்த ரோவர் ஆனது கடந்த கால வாழ்க்கையின் அறிகுறிகளை கண்டறியும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. பெர்சவரன்ஸ் போராவ் செவ்வாய் கிரகத்தில் தனது முதல் பாறை மாதிரியை பண்டைய ஏரி படுக்கையின் இடத்தில் இருந்து சேகரிக்கத் தயாராகி வருவதாக நாசா கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

உயிரினங்கள் ஏதேனும் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளதா?
பண்டை ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரிக்க காரணம் உயிரினங்கள் ஏதேனும் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளதா என்பதை கண்டறியவே என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்ய உள்ளது என ஆய்வு திட்டத்தின் இயக்கனர் கென் ஃபெர்லி கூறினார். மேலும் இதுகுறித்து கென் ஃபெர்லி கூறுகையில், செவ்வா கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பூமியின் சுற்றுப்புற பகுதிகள் போன்றே இருப்பதாக கூறினார்.

மாதிரிகள் எடுத்து ஆய்வு
இந்த இடத்தில் மண் எடுத்து ஆய்வு செய்யும்போது செவ்வாய் கிரகத்தில் உயிரினம் ஏதேனும் வாழ்ந்தது என்பது உண்மை என்றால் அது நுண்ணியிரியை கொண்டிருக்கும் என அவர் கூறினார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் உயிரினங்கள் வாழ்ந்ததா என்று ஆராய்வதோடு எதிர்காலகத்தில் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா சுவாசிக்க வழி இருக்கிறதா என்பதும் அறிந்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications