Home
News

Deep Space Food Challenge: சத்தான உணவுகள் தயாரிக்க ஐடியா வேண்டும்.! நாசா பரிசு அறிவிப்பு.!

நாசா தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் நாசாவும் கனடா ஸ்பேஸ் ஏஜென்சி அமைப்பும் இணைந்து மக்களிடம் Deep Space Food Challenge(டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்) அறிவித்துள்ளது. குறிப்பாக விண்வெளியில் எளிதாக உணவை எப்படி தயாரிப்பது என மக்கள் சிந்தித்து தெரிவிக்கலாம் என நாசா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம்

அதேபோல் இந்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகவிண்வெளி வீரர்கள் விண்ணில் நாம் அறிந்திராதஇடங்களுக்கு சென்று பல அறிவியல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முயற்சிசெய்கின்றனர்.

 விண்வெளி வீரர்கள் விண்ணில்

இருந்தபோதிலும் விண்வெளி வீரர்கள் விண்ணில் உயிர் வாழ்வதற்கு மிக முக்கிய தேவையாக இருக்கும் உணவை எப்படி அவர்களுக்கு அளிப்பது என்பதில் குழம்பி நிற்கிறது நாசா. இந்நிலையில் தான் கனடா ஸ்பேஸ் ஏஜென்சி அமைப்பும், நாசாவும் இணைந்து மக்களிடம் Deep Space Food Challenge (டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்) அறிவித்துள்ளது.

உருவாக்குவதையும் மக்கள் சிந்தித்து தெரிவிக்கலாம்

எனவே இந்த சேலஞ்ச் மூலம் மிகக் குறைந்த அளவிலான வளங்களை பயன்படுத்தியும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும்
உணவு தயாரிப்பதையும், குறைவான கழிவுகளை உருவாக்குவதையும் மக்கள் சிந்தித்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

பாக உணவை நீண்ட காலம்

குறிப்பாக உணவை நீண்ட காலம் சேமிக்கப்பட்டால் அதில் உள்ள முக்கியமான சத்துகள் இழக்கப்படுகிறது. அதேபோல்
விண்வெளி வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துவது உகந்தது அல்ல. விண்வெளி வீரர்களுக்கென்று தயாரிக்கப்படும் உணவுகளில் எண்ணற்ற சாவல்கள் உள்ளது. மிக சில
வகையான உணவுகளை மட்டுமே அவர்கள் அங்கு சாப்பிட முடியும்.

எனவே இதை மாற்றி அமைக்கும் வகையில் விண்வெளி வீரர்களின் உணவுகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வருவோருக்கு சுமார் 7.4 கோடி ரூபாயை (1 மில்லியன் டாலர்) நாசா வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு பலருக்கு ஆவலை தூண்டி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Deep Space Food Challenge மூலம் விண்வெளிக்கு

Deep Space Food Challenge மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு சத்தான, புதுமையான நீண்ட நாள்கெடாத உணவுகளை வழங்க வேண்டும். மேலும் இதற்காக சிறந்த தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு இந்த பணம் வழங்கப்படும்.

னினும் இதில் அணைத்து

ஊட்டச்சத்துக்கள் நிறைத்த உணவுகளை விண்வெளி வீரர்கள் சாப்பிடும் வகையில் சிறந்த தொழில்நுட்ப முறைகளைகண்டுபிடிக்க வேண்டும். இது எங்களின் நீண்ட கால ஆய்வாக உள்ளது. தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் விண்வெளி வீரர்கள் சாப்பிட்டு வருகின்றனர். எனினும் இதில் அனைத்து வகையான சத்துக்களும் கிடைப்பதில்லை
என நாசா உணவு துறையின் தலைமை அதிகாரி ஜிம் ராய்ட்டர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA Offers $ 1 million for Ideas to feed astronauts on Deep Space Food Challenge: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X