நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம்! ஆனாலும் இதில் ஒரு சிக்கல்!

|

நாசாவின் மூன் லேண்டர், இந்தியாவின் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் புகைப்படத்தை எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால் நாசாவின் மூன் லேண்டரால், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிய முடியவில்லை என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு புகைப்படத்தை நாசா கிளிக் செய்துள்ளது.

செப்டம்பர் 6, விக்ரம் லேண்டர்

செப்டம்பர் 6, விக்ரம் லேண்டர்

நிலவில் மேற்பரப்பில் விழுந்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை எடுப்பதில் மீண்டும் சிக்கல் எழும்பியுள்ளது. இந்தியாவின் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, நிலவின் தென் துருவதில் தரை இறங்கும் பொழுது செயலிழந்தது.

நாசாவின் மூன் ஆர்பிட்டர்

நாசாவின் மூன் ஆர்பிட்டர்

செயலிழந்த விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து, பூமிக்கு அனுப்ப நாசாவின் மூன் ஆர்பிட்டர் உதவும் என்று அண்மையில் நாசா இஸ்ரோவிடம் தெரிவித்திருந்தது. இஸ்ரோவும் இதற்குச் சம்மதம் தெரிவித்து விக்ரம் லேண்டரின் புகைப்படத்திற்காகக் காத்திருந்தது.

Google Pay மூலம் பணம் அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்! எப்படி தெரியுமா?Google Pay மூலம் பணம் அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்! எப்படி தெரியுமா?

விக்ரம் லேண்டர் இடத்தை கண்டறிவதில் நாசாவிற்கு சிக்கல்

விக்ரம் லேண்டர் இடத்தை கண்டறிவதில் நாசாவிற்கு சிக்கல்

நாசாவின் லூனார் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் (NASA's Lunar Reconnaissance Orbiter (LRO) நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் இருந்து, விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், நாசாவின் LRO ஆர்பிட்டரால், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிய முடியாமல் போனதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!

நாசா தெரிவித்த காரணம்

நாசா தெரிவித்த காரணம்

நாசாவின் ஆர்பிட்டர் ஏன் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென்துருவப் பகுதிக்கு மேல் இருக்கும் பொழுது, நிலவில் நீண்ட நிழல் காலம் நேற்று அதிகாலை முதல் துவங்கியுள்ளது. இதனால் நிலவின் பகுதிகள் பெரும்பாலும் இருளால் சூழப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ்க்கு தானாக ஒளிறும் சிக்னல்: கலக்கும் தமிழ்நாடு.!108 ஆம்புலன்ஸ்க்கு தானாக ஒளிறும் சிக்னல்: கலக்கும் தமிழ்நாடு.!

நீண்ட நிழல் காலம்

நீண்ட நிழல் காலம்

குறிப்பாக, விக்ரம் லேண்டர் விழுந்துள்ள தென்துருவப் பகுதிகளில் பெருமளவில் இருள் சூழ்ந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. இரண்டு வாரக் காலம் நீடிக்கும் இந்த நிலவின் நீண்ட நிழல் காலம் முடியும் வரை நாசாவின் ஆர்பிட்டரால் புகைப்படம் எடுக்கமுடியாதென்று நாசா காரணத்தை விளக்கி கூறியுள்ளது.

நிலவின் புகைப்படம்

நிலவின் புகைப்படம்

இருப்பினும் நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுக்கத் தவறவில்லை, நாசா ஆர்பிட்டர் கிளிக் செய்துள்ள முந்தைய நிலவின் புகைப்படம் மற்றும் நேற்று கிளிக் செய்யப்பட்ட விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தின் புகைப்படத்தில் இருளை தவிர வேறு எதுவும் படம் பிடிக்கப்படவில்லைஎன்றுநாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Moon Orbiter Fails to Spot India’s Vikram Lunar Lander But We Got The Befor After Picture : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X