Home
News

செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர்.!

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது. அதாவது செவ்வாய் கிரத்தில் உயிரனங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ்
என்கிற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் கல், மண், பாறைகளை அய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த ஆண்டு ஜூலை மாதம்

அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாய் கிரகத்தில்ஜெசேரோ என்று அழைக்கப்படும் பகுதியில் தரையிறங்கியது. குறிப்பாக இதற்குமுன்பு நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம்எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கானஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால் ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்வுசெய்தது.

பெர்சவரன்ஸ் ரோவர்

அதேபோல் இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு
பயன்படுத்தப்படும் என்று நாசா அமைப்பு கூறியது.

வ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு

மேலும் செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏற்கனவே பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா அமைப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது முன்பு எப்போதும் கண்டிராத புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தினை முதன் முறையாக படம் பிடித்து தற்போது அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். மேலும் அந்த படங்களை ட்விட்டர் பக்கத்தில் நாசா அமைப்பு பகிர்ந்துள்ளது.

மாதம் நாசா வெளியிட்ட

மேலும் கடந்த மாதம் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள மலைகள்,
பாறைகள், படிமங்கள், போன்றவற்றை இதுவரை அளவு துல்லியமான தரத்தில் காணமுடிகிறது.

அதேபோல் இந்த பெர்சவரன்ஸ் விண்கலத்தின் செயல்பாடுகளை நாசா வானியாலாளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அதாவது கடந்த மாதம் வெளியிட்டப்பட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை குறித்து வில்லியம்ஸ் கூறுகையில், ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் வடிவங்களும், நமது பூமியின் நதி
டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த புகைப்படங்களில் காணப்படும் மூன்று அடுக்குகளின் வடிவமானது, சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் எமி வில்லியம்ஸ். இருந்தபோதிலும் இந்த படங்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றது தான் என்றும், ரோவர் கருவியை எங்கு அனுப்ப வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானப்பதற்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளார் எமி வில்லியம்ஸ்.

மியைத் தவிர உயிரினங்கள்

குறிப்பாக பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதில் செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. அதாவது நாசா அமைப்பு 1970-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக பல விண்கலன்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
NASA Mars rover discovers something no one has seen and shares images: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X