Home
News

ஓ.. செவ்வாயில் இருந்து பார்த்தா நம்ம பூமியும் நிலவும் இப்படி தான் இருக்குமா? நாசா வெளியிட்ட படம்..

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கும் போது பூமியும் சந்திரனும் எப்படித் தோன்றும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரே பிரேமில் ஒன்றாகக் காட்டிய படத்தை நாசா தற்பொழுது பகிர்ந்துள்ளது. பூமி செவ்வாய் கிரகத்தில் இருந்து 142 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (MRO) அதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. MRO படம்பிடித்த இந்த புகைப்படத்தில், பூமி மற்றும் சந்திரனின் தெரியும் பகுதிகளை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

செவ்வாயில் இருந்து பார்த்தால் பூமியும் நிலவும் இப்படி தான் தெரியுமா?

செவ்வாயில் இருந்து பார்த்தால் பூமியும் நிலவும் இப்படி தான் தெரியுமா?

பூமியில் இருந்து நம் கிரகத்திற்குச் சொந்தமான நிலவு எவ்வளவு தூரத் தொலைவில் அமைந்துள்ளது என்பதை இந்த புகைப்படம் தெளிவாகக் காண்பிக்கிறது. இந்த புகைப்படத்தில் பூமி நீல நிறத்தில் தோன்றிய போது, ​​இருண்ட, கருப்பு கேன்வாஸுக்கு எதிராகச் சந்திரன் வெண்மையாகத் தெரிந்தது. சூரியனின் ஒளி பட்ட இடங்கள் மட்டும் அசல் நிறத்தில் தெரிகிறது. சூரிய ஒளி படாத, பூமி மற்றும் நிலவின் மற்ற இடங்கள் இருள் சூழ்ந்திருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

எப்படி இந்த புகைப்படத்தை நாசா படம்பிடித்து?

நாசாவின் MRO ஆர்பிட்டர் உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை (HiRISE) கேமரா மூலம் இந்த படம் எடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் படம் அக்டோபர் 2007 இல் எடுக்கப்பட்டாலும், இந்த வாரம் மீண்டும் நாசாவால் பகிரப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் அதன் ஏழு பயணங்கள் ஒவ்வொன்றும் "உண்மையில் நாசா எர்த்லிங்" என்று கூறியது. சிவப்பு கிரகத்தை ஆராயும் விஞ்ஞானிகளின் கண்களாக அவை செயல்படுகின்றன.

98 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கப்பட்ட பூமியின் படம்

98 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கப்பட்ட பூமியின் படம்

இந்த ரோபோக்கள் பூமியின் மீதான நமது மதிப்பை ஆழப்படுத்த உதவுகின்றன என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமியின் படத்தில் மேகங்கள் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருந்தாலும், அது கீழ் வலதுபுறத்தில் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையின் வெளிப்புறத்தைக் காட்டுகிறது. இந்த படம் பிடிக்கப்பட்ட நேரத்தில் கட்ட கோணம் 98 டிகிரியாக இருந்தது, அதாவது பூமியின் வட்டு மற்றும் சந்திரனின் வட்டில் பாதிக்கும் குறைவானது நேரடி ஒளியைக் கொண்டுள்ளது என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிக்கல் பற்றி விவரித்த நாசா என்ன சொன்னது?

சிக்கல் பற்றி விவரித்த நாசா என்ன சொன்னது?

பூமியையும் சந்திரனையும் செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரியனின் எதிர் பக்கத்தில் இருக்கும் போது மட்டுமே MRO முழு வெளிச்சத்தில் படமெடுக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. ஜூம் வரம்பு மிக அதிகமாக இருக்கும் மற்றும் இதனுடன் ஒப்பிடும்போது படத்தின் தெளிவு விவரம் குறைவாக இருக்கும். செவ்வாய் கிரகத்தின் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் ஆகஸ்ட் 2005 இல் ஏவப்பட்டது.

செவ்வாய் கிரகம் பற்றி நமக்குத் தெரிந்த புதிய தகவல்கள் என்னென்ன?

செவ்வாய் கிரகம் பற்றி நமக்குத் தெரிந்த புதிய தகவல்கள் என்னென்ன?

அது மார்ச் 2006 இல் செவ்வாய் சுற்றுப்பாதையில் செருகப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அல்லது அதற்கு அருகில் உள்ள நீர் ஓட்டங்களின் வரலாறு உட்பட, சிவப்பு கிரகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வது இதன் முதன்மை நோக்கமாக இருக்கிறது. இது மற்ற செவ்வாய் பயணங்களுக்கான முக்கிய தகவல் பரிமாற்ற நிலையமாகவும் உள்ளது. செவ்வாய் கிரகம் பற்றிக் கடந்த சில ஆண்டுகளில் பல புதிய தகவல்களை நாசா தொடர்ந்து கண்டறிந்து வருகிறது.

செவ்வாயில் ஓடிய நீரோட்டம்.. செவ்வாயில் மனித பேச்சு சிதைவடையுமா?

செவ்வாயில் ஓடிய நீரோட்டம்.. செவ்வாயில் மனித பேச்சு சிதைவடையுமா?

செவ்வாய் கிரகத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரோட்டம் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், அதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் நாசா முன்பு தெரிவித்திருந்தது. அதேபோல், செவ்வாய் கிரகத்தில் ஒலி, பூமியில் உள்ளது போல் செயல்படுவதில்லை என்றும் நாசா சமீபத்தில் கண்டறிந்தது. இதன்படி, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் பேச்சு மெதுவாகப் பயணித்துச் சிதைவடையும் என்றும் நாசா கூறியிருந்தது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னாள், செவ்வாய் கிரகத்தில் இரண்டு மிகப் பெரிய நிலநடுக்கங்கள் உருவாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பதிவான நிலநடுக்கம்

செவ்வாய் கிரகத்தில் பதிவான நிலநடுக்கம்

இதையும் நாசா கண்காணித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதன் தேடுதல் வேட்டையை தொடரும் இன்சைட் லேண்டர் மூலம் இந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்க அளவுகோலில் ஒரு நிலநடுக்கம் 4.2 ரிக்டர் என்ற அளவிலும், மற்றொன்று 4.1 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு செவ்வாய் கிரக நிலநடுக்கங்கள் 24 நாள் இடைவெளியில் உருவாகியுள்ளது. அதுவும் இவை 94 நிமிடங்கள் செவ்வாய் கிரகத்தில் நீடித்துள்ளது என்று நாசா கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Mars Reconnaisance Orbiter Catches a Glimpse of Earth and Moon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X