மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?

|

இது வரை விண்வெளி ஆராய்ச்சி பற்றிப் பல விசித்திரமான செய்திகள் மற்றும் புதிய முயற்சிகள் பற்றி நாம் படித்திருப்போம். ஆனால், இந்த செய்தி இதுவரை யாரும் யூகித்துக் கூட பார்த்திருக்க முடியாத அளவிற்கு ஒரு வினோதமான மற்றும் விசித்திரமான முயற்சியாக அமைந்திருக்கிறது. ஆம், நிலவு, செவ்வாய் கிரகம், சனி கிரகத்தின் டைட்டன் நிலவில் உயிர் வாழத் தேவையான சாத்தியங்களை நாசா போன்ற சில முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஆனால், நமக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.

சதிக்கோட்பாளர்களின் வாய்களை மூடிய நாசா

சதிக்கோட்பாளர்களின் வாய்களை மூடிய நாசா

மனிதர்களுக்கான மற்றொரு கிரகத்தை உருவாக்கும் முயற்சியில் நாசா மும்முரமாகக் களமிறங்கி வேலை செய்து வருகிறது. நிலவில் மனிதர்களுக்கான ஸ்பேஸ் நிலையத்தை அமைப்பது, நிலவில் மனிதர்களை நீண்ட நாள் தங்க வைப்பது, செவ்வாய் கிரகத்தில் முதல் மனித காலனியை உருவாக்குவது போன்ற பல நம்ப முடியாத விஷயங்களை நாசா திட்டமிட்டு, அவற்றை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. முதலில், நாசாவின் இந்த முயற்சிகள் எல்லாம் பயனளிக்காது என்று கூறிய சதிக்கோட்பாளர்களின் வாய்கள் இப்போது மூடப்பட்டுள்ளது.

மனிதர்களின் நிர்வாண படங்களை விண்வெளியில் அனுப்புகிறதா நாசா?

மனிதர்களின் நிர்வாண படங்களை விண்வெளியில் அனுப்புகிறதா நாசா?

இந்த தகவல்கள் எல்லாம் நமக்குத் தெரிந்த ஒன்றே, ஆனால் நமக்குத் தெரியாத மற்றொரு விஷயமும் இருக்கிறது. அது தான், நாசா மனிதர்களின் நிர்வாண படங்களை அதன் DNA கோட் உடன் விண்வெளிக்கு அனுப்பும் தகவல். எது, மனிதனின் நிர்வாண படங்களா? உண்மையிலேயே, நாசா இது போன்ற ஒரு காரியத்தைச் செய்கிறதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். நிச்சயமாகச் சிலர் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, இது எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூட கூறுவீர்கள். ஆனால், இது அப்படியான கட்டுக்கதை இல்லை, உண்மை தான்.

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..

பிரபஞ்சத்தில் ஏலியன் வேட்டையைத் துவங்கிவிட்ட NASA

பிரபஞ்சத்தில் ஏலியன் வேட்டையைத் துவங்கிவிட்ட NASA

ஆம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களுக்கான மற்றொரு கிரகத்தில் உயிர் வாழத் தேவையான சாத்தியங்களைத் தேடி ஆராய்வதோடு, இப்போது ஏலியன் வேட்டையையும் துவங்கிவிட்டது. வேற்றுக்கிரக வாசிகளை ஈர்க்கும் நோக்கத்தில், நாசா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை, அவர்களுக்கான DNA கோடிங் தகவலுடன் விண்வெளியில் அனுப்பியுள்ளது. இதனுடன் இன்னும் சில தகவல்களையும் நாசா இணைத்துள்ளது. எதற்காக இந்த வினோத முயற்சி? நாசாவின் உண்மையான நோக்கம் என்ன? என்று தெளிவாகப் பார்க்கலாம்.

ஏலியன் என்றால் என்ன?

ஏலியன் என்றால் என்ன?

இந்த தகவலுக்குள் செல்வதற்கு முன், முதலில் ஏலியன் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏலியன் என்பது வேற்று கிரக வாழ்க்கை அல்லது வேற்று கிரகத்தில் உயிர் வாழக்கூடிய ஒரு உயிரைக் குறிக்கிறது. பூமிக்கு வெளியில் அல்லது நமது பூமிக்குச் சொந்தம் இல்லாத பிற உயிர்கள் தான் எலியன்கள் என்று அழைக்கப்படுகிறது. டிரேக் சமன்பாடு (Drake equation), பிரபஞ்சத்தில் வேறு எங்கோ ஒரு மூலையில் அறிவுள்ள ஒரு உயிர் வாழ்க்கை இருப்பதைப் பற்றி ஊகிக்கிறது. இதுவே, வேற்று கிரக வாழ்க்கையின் மேல் ஒரு புதிய ஆர்வத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்த காரணமாக இருந்தது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

மனிதன் கூட விரைவில் ஏலியன் ஆவான்.. இது என்னப்பா புது டிவிஸ்ட்?

மனிதன் கூட விரைவில் ஏலியன் ஆவான்.. இது என்னப்பா புது டிவிஸ்ட்?

எது மனிதன் கூட விரைவில் ஏலியன் ஆவானா? என்னப்பா சொல்றீங்க? என்று குழப்பமடைய வேண்டாம். நீங்கள் நினைக்கும் படி பெரிய மண்டை, நீண்ட கால்கள், வெளிறிய தோல் போன்று நாம் மாறப்போவதில்லை. அறிவியல் ரீதியாக மனிதன் விரைவில் ஒரு ஏலியன் உயிரினமாக அழைக்கப்படுவன். காரணம், பூமியில் உயிர் வாழும் மனிதன் பூமி கிரகத்திற்குச் சொந்தமானவன். எப்போது, மனிதனின் கால்தடம் செவ்வாய் கிரகத்தில் படுகிறதோ, அப்போது, வேற்றுக்கிரகத்தில் கால் பதித்த முதல் ஏலியன் உயிரினமாக மனிதன் கருதப்படுவான். இதன் மூலம், அறிவியல் ரீதியாக மனிதன் செவ்வாய் கிரகத்தில் ஏலியனாவன்.

ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண படத்தைத் திறந்த விண்வெளியில் அனுப்பத் திட்டம்

ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண படத்தைத் திறந்த விண்வெளியில் அனுப்பத் திட்டம்

சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். விண்வெளிக்கு நிர்வாண படங்களை அனுப்புவது வேற்றுகிரகவாசிகளை பூமிக்கு வரவழைக்கக்கூடும் என்று நாசா கருதுகிறது. விண்வெளியில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய, நாசா ஒரு ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண படத்தைத் திறந்த விண்வெளியில் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அது ஏலியன்களுக்கான அழைப்பதாகத் தோன்றுவதை உறுதிசெய்ய, மனித படங்கள் இரண்டும் 'ஹாய்' சொல்வது போல, கைகளை அசைக்கும் படி நாசா அந்த செய்தியை உருவாக்கியுள்ளது.

ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..

டிஎன்ஏ விளக்கங்களுடன் கூடிய ஆண் / பெண்ணின் படம்

டிஎன்ஏ விளக்கங்களுடன் கூடிய ஆண் / பெண்ணின் படம்

வேற்றுகிரகவாசிகள் எப்போதாவது இதைப் பெற்று, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டினால், இது அவர்கள் பதிலளிப்பதற்கான அழைப்பை இந்த படம் கொண்டிருக்கும் என்று நாசா கூறியுள்ளது. இருப்பினும், இந்த படங்கள் நீங்கள் நினைப்பது போன்ற மனிதனின் அசல் அல்லது கிராஃபிக் படம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. மாறாக, இது டிஎன்ஏ விளக்கங்களுடன் கூடிய ஒரு நிர்வாண ஆண் மற்றும் பெண்ணின் விளக்கப்படங்களைக் காட்டும் ஒரு வரையப்பட்ட படமாகும். இது நாசாவின் "பீக்கன் இன் தி கேலக்ஸி" (Beacon in the Galaxy) முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 'ஏலியன் இன்விடேஷன்' மெசேஜ்ஜில் என்னென்ன தகவல்கள் உள்ளது?

இந்த 'ஏலியன் இன்விடேஷன்' மெசேஜ்ஜில் என்னென்ன தகவல்கள் உள்ளது?

விண்வெளியில் உள்ள மற்ற அறிவார்ந்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ள நாசா எடுக்கும் ஒரு வினோதமான முயற்சி இதுவாகும். திறந்த விண்வெளியில் அனுப்பப்படும் இந்த செய்தியில், உலகளாவிய தகவல்தொடர்பு வழிமுறையை நிறுவுவதற்கான அடிப்படை கணித மற்றும் இயற்பியல் கருத்துக்களும் உள்ளது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள உயிர்களின் உயிர்வேதியியல் கலவை பற்றிய தகவல்கள், அறியப்பட்ட உலகளாவிய கொத்துகளுடன் ஒப்பிடும்போது பால்வீதியில் சூரிய குடும்பத்தின் நேர முத்திரையிடப்பட்ட நிலை,

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

வேற்றுகிரகவாசிகளுக்கு இவ்வளவு தகவல் கொடுக்க வேண்டுமா?

வேற்றுகிரகவாசிகளுக்கு இவ்வளவு தகவல் கொடுக்க வேண்டுமா?

அத்துடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சூரிய குடும்பம் மற்றும் பூமியின் மேற்பரப்பின் சித்தரிப்புகள் என்று பல தகவல்கள் அந்த செய்தியுடன் விண்வெளியில் அனுப்பப்படவுள்ளது என்று ஆய்வின் ஆசிரியர் ஜோனாதன் ஜியாங் டிஸ்கவரியிடம் கூறியுள்ளார். BITG இன் இந்த செய்தி 'பைனரி' குறியீட்டில் எழுதப்பட்டுள்ளது என்பது ஒரு முக்கியமான விஷயம். இது உலகளாவிய மொழிக்கு மிக நெருக்கமான விஷயம் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது என்பதை டிஸ்கவரி கூட தெரிவித்துள்ளது. பைனரி குறியீட்டில் இந்த செய்தி அனுப்பப்படுவதற்கும் ஒரு முக்கியமான மறைமுக காரணம் உள்ளது.

இது உண்மையில் விபரீதமா? அல்லது நல்ல விஷயமா?

இது உண்மையில் விபரீதமா? அல்லது நல்ல விஷயமா?

இந்த படம் ஏலியன்களுக்கான அழைப்பிதழ் என்பதைத் தவிர, அனுப்பப்படவுள்ள இந்த செய்தியில் மனிதநேயம் பற்றிய தகவல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேற்றுகிரகவாசிகளைச் சந்திக்கும் இந்த முயற்சி, பூமிக்கு விரோதமான உயிரினங்களைக் கொண்டு வரக்கூடும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், நாசா குழு நல்லவிதமான நம்பிக்கையுடன் உள்ளது. இதற்கான காரணம் பைனரி கோட் ஆகும்.

செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..

பைனரி குறியீட்டில் இந்த தகவலை அனுப்புவதற்கு இது தான் காரணமா?

பைனரி குறியீட்டில் இந்த தகவலை அனுப்புவதற்கு இது தான் காரணமா?

பைனரி குறியீட்டை மீட்டெடுத்து நாம் அனுப்பும் தகவலை ஒரு இனம் படிக்க முடிந்தால், நிச்சயமாக அந்த இனம் ஒத்துழைப்பு மற்றும் அமைதியின் மதிப்பைப் புரிந்துகொள்வதற்கான அறிவுடன் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.இதனால், தான் இந்த தகவல்கள் அனைத்தும் பைனரி வடிவில் அனுப்பப்படவுள்ளது.

இந்த ஏலியன் இன்விடேஷன் எங்கிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும்?

இந்த ஏலியன் இன்விடேஷன் எங்கிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும்?

இந்த செய்தி உண்மையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டால், அது சீனாவில் உள்ள 500 மீட்டர் அபெர்ச்சர் ஸ்பெரிகல் ரேடியோ டெலஸ்கோப் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆலன் டெலஸ்கோப் அரே வழியாக அனுப்பப்படும். ஏலியன்களுக்கு நாசா அனுப்பும் இந்த அசாதாரண பூமி அழைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கருத்துகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொடர்பான சுவாரசியமான தகவலை அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Is Transmitting Naked Images With DNA Descriptions Of Humans Into Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X