வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!

|

NASA விண்வெளி ஆராய்ச்சி மையனத்தின் தகவல் படி, நாம் வாழும் பூமியானது சூரியனிலிருந்து மூன்றாவது கிரகமாக இருக்கிறது. சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் உயிர் உள்ள ஒரே கிரகம் பூமி மட்டும் தான். பூமியின் நிலப்பரப்பு என்பது சுமார் 29% கண்டங்கள் மற்றும் தீவுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பூமியின் பெரும் பகுதி 71% நீரால் சூழப்பட்டிருக்கிறது. அதுவும் பூமியின் பெரும்பாலான இடம் பெருங்கடல்களால் நிரப்பப்பட்டுள்ளது.

உயிர்கள் வாழ முக்கிய காரணம் கடல் தானா?

உயிர்கள் வாழ முக்கிய காரணம் கடல் தானா?

இதேபோக ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளும் பூமியில் உள்ளது, இதுவே பூமியில் உயிர்கள் வாழ முக்கிய காரணமாக இருக்கிறது.பூமியில் உள்ள பெரும்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது, பூமியில் உள்ள கடல் வளத்தை நம்பி சுமார் 37 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்று ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. கடலை சார்ந்து வாழ்வது மனிதன் மட்டுமின்றி, கடலில் ஏராளமான உயிர்களும் வாழ்கின்றது.

பூமிக்கு அருகில் இருக்கும் கிரகத்தில் 2 கடல்களா?

பூமிக்கு அருகில் இருக்கும் கிரகத்தில் 2 கடல்களா?

பூமியில் கடல் எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்த்தோம், இதேபோல், நம்முடைய பால்வெளி மண்டலத்தில் கடல் வளத்துடன் இருக்கும் உலகங்கள் சில உள்ளது என்கிறது நாசா. ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், கடல் உலகங்கள் தான், நம்முடைய பூமி கிரகத்திற்கு அருகிலேயே 2 கடல் உலகங்கள் இருப்பதாக நாசா கூறுகிறது. உயிர்களின் தடங்களைக் கண்டறிவதற்கு நீரும், கடலும் இரு முக்கிய காரணியாக இருக்கிறது என்பதே உண்மை.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

இந்த 2 கடல்களும் எங்கிருக்கிறது தெரியுமா?

இந்த 2 கடல்களும் எங்கிருக்கிறது தெரியுமா?

இதனால் தான், நாசா நமது பூமிக்கு அருகில் உள்ள கடல் உலகங்களில் ஏலியன் உயிர்களுக்கான அடையாளங்கள் எதுவும் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்யத் திட்டமிட்டுள்ளது. இப்போது, நாம் கூறும் கடல் உலகங்களில் ஒன்று ஜூபிட்டர் கிரகத்திற்குச் சொந்தமான யூரோப்பா (Europa) நிலவிலும், சனி கிரகத்திற்குச் சொந்தமான என்செலாடஸ் (Enceladus) நிலவிலும் புதைந்திருக்கிறது. எதிர்காலத்தில் விரைவில், இந்த நிலவுகளின் தடிமனான பனிக்கட்டி ஓடுக்கு அடியில் புதைந்திருக்கும் கடல் உலகங்களை நாசா ஆராய்ச்சி செய்யப் போகிறது.

ஐஸ் ஓடுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் கடல் உலகம்

ஐஸ் ஓடுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் கடல் உலகம்

இந்த தடிமனான ஐஸ் ஓடுகளை குடைந்து, மேற்பரப்பிற்கு அடியில் இருக்கும் கடல் உலகத்திற்குள் நீந்தித் திரியும் செல்போன் அளவிலான ரோபோக்களின் கூட்டத்தை நாசா விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அளவிலான ஸ்விம் ரோபோட்கள் வேற்று கடல் உலகங்களில் ஏலியன் உயிர்களுக்கான அடையாளங்கள் எதுவும் இருக்கிறதா என்பதைத் தேடப்போகிறது. இந்த ரோபோக்களை நாசா மிகவும் சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனமாகவும் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

ஸ்விம் ரோபோட்கள் புதிய கடல் உலகங்களை ஆராய்ச்சி செய்யும்

ஸ்விம் ரோபோட்கள் புதிய கடல் உலகங்களை ஆராய்ச்சி செய்யும்

அடர்த்தியான பனி தரையில் குடைந்து ஊடுருவும் பிரோப்களை நாசா இந்த இரண்டு நிலவுகளுக்கு அனுப்பவிருக்கிறது. இந்த பிரோப் பனி ஓடுகளை குடைந்து கடல் உலகத்தை அடைந்ததும், பிரோப்களுக்குள் நிரம்பியிருக்கும் ஸ்மார்ட்போன் அளவிலான ஸ்விம் ரோபோட்களை நீருக்கடியில் பிரோப் வெளியிடும். பின்னர், இந்த ஸ்விம் ரோபோட்கள் புதிய உலகங்களைப் பற்றி அறிய நீண்ட மற்றும் ஆழமான நீச்சலை மேற்கொள்ளும் என்று நாசா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

நாசாவின் இந்த நீந்தும் ராக்கெட் போன்ற உருவம் எப்படி உருவாக்கப்பட்டது?

நாசாவின் இந்த நீந்தும் ராக்கெட் போன்ற உருவம் எப்படி உருவாக்கப்பட்டது?

நாசாவின் இந்த ஸ்விம் ரோபோட்கள், ஸ்கேளர் சென்சிங் வித் இண்டிபெண்டண்ட் மைக்ரோ ஸ்விமர்ஸ் (Schaler's Sensing With Independent Micro-Swimmers) என்று அழைக்கப்படுகிறது. இது சுருக்கமாக SWIM என்று கூறப்படுகிறது. இந்த SWIM தொழில்நுட்ப கருத்துக்கு NASA சமீபத்தில் இன்னோவேடிவ் அட்வான்ஸ்டு கான்செப்ட்ஸ் (NIAC) திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதியுதயாக சுமார் $600,000 டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதை வைத்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3D அச்சிடப்பட்ட மாடல்களை குழு உருவாக்கும்.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

SWIM ரோபோட் ஸ்மார்ட்போன் அளவிற்கு சிறியதா?

SWIM ரோபோட் ஸ்மார்ட்போன் அளவிற்கு சிறியதா?

SWIM ரோபோட்கள் பார்ப்பதற்கு வெட்ஜ் அல்லது ராக்கெட் வடிவிலான ரோபோக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு ஸ்விம் ரோபோட்களும் சுமார் 12 சென்டிமீட்டர் நீளமும் 60 முதல் 75 கன சென்டிமீட்டர் அளவு கொண்டதாக இருக்கிறது. 25 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட ஒரு கிரையோபோட்டில் (cryobot), அதாவது, பனி ஓடுகளை ஊடுருவும் பிரோப்பின் உள், சுமார் நான்கு டஜன் ஸ்விம் ரோபோட்களை பொருத்தக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அறிவியல் பேலோட் அளவின் 15 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

2024 ஆம் ஆண்டில் விண்ணுக்கு புறப்படும் புது ராக்கெட்டில் ஸ்விம் ரோபோட்

2024 ஆம் ஆண்டில் விண்ணுக்கு புறப்படும் புது ராக்கெட்டில் ஸ்விம் ரோபோட்

இந்த ஒவ்வொரு ரோபோட்களும், அதன் சொந்த ப்ரோபல்ஷன் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆன்போர்ட் கம்ப்யூட்டர் சிஸ்டம் மற்றும் அல்ட்ராசவுண்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம், வெப்பநிலை கண்காணிப்பு, உப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கண்காணிப்பு மற்றும் அழுத்தத்தைக் கணக்கிடும் சென்சார்கள் போன்றவற்றுடன் கடல் உலகங்களுக்குள் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது. நாசா இந்த ஸ்விம் ரோபோட்களை வரும் 2024 ஆம் ஆண்டில் NASA's Europa Clipper மிஷன் மூலம் விண்ணுக்கு அனுப்பும்.

ஏலியன் உயிர்களை நாசா கண்டுபிடிக்குமா?

ஏலியன் உயிர்களை நாசா கண்டுபிடிக்குமா?

இந்த ரோபோட்களை கொண்டும் செல்லும் பிரோப் ஒரு பிரத்தியேக லேண்டர் மூலம் ஜூபிட்டரின் நிலவில் 2030 ஆம் ஆண்டில் தரையிறக்கும் என்று நாசா கூறியுள்ளது. அதற்குப் பின், கடல் உலகம் இருக்கும் இடத்தில், துளையிடப்பட்டு ஸ்விம் ரோபோட்கள் நீருக்குள் விடுதலை செய்யப்படும். இந்த 4 டஜன் ஸ்விம் ரோபோட்களும் நீருக்குள் கிடைக்கும் தகவலை கம்யூனிகேஷன் சிஸ்டம் மூலம் பூமியுடன் பகிர்ந்துகொள்ளும். ஏலியன் உயிர்களின் அடையாளங்களை நாசா கண்டுபிடிக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
NASA Is Creating SWIM Robots To Look For Alien Life In Nearby Ocean Worlds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X