மார்ஸ் மிஷன் : இஸ்ரோவிற்கு 'தூண்டில்' போடும் நாசா..! ஏன்..?

Written By:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முனைப்பில் இருப்பதால் அது சார்ந்த முயற்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மார்ஸ் மிஷன் : இஸ்ரோவிற்கு 'தூண்டில்' போடும் நாசா..! ஏன்..?

இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் அமேரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்குள்ளும், சாத்தியமான சர்வதேச ஒத்துழைப்பு நிகழ வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாஷிங்டன் :

வாஷிங்டன் :

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் இந்த முயற்சி சார்ந்த சந்திப்பு அடுத்த மாதம் வாஷிங்டன் நகரில் நடக்க இருகிறது.

பல்வேறு நாடுகள் :

பல்வேறு நாடுகள் :

மார்ஸ் மிஷன் சார்ந்த இந்த சந்திப்பில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் பங்குபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோபோடிக் மிஷன் :

ரோபோடிக் மிஷன் :

"செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் இந்த முயற்சிக்கு முன்பு சில ரோபோடிக் மிஷன்களை நடத்த வேண்டியது இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் ஜெட் ப்ரோப்பல்ஷன் ஆய்வகத்தின் இணை இயக்குனரான ஜேகப் வன் ஸில்.

வருங்கால செவ்வாய் திட்டங்கள் :

வருங்கால செவ்வாய் திட்டங்கள் :

மேலும், "இந்த சந்திப்பில், வருங்கால செவ்வாய் திட்டங்கள் சார்ந்த கலந்துரையாடலுக்காக இஸ்ரோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் ஜேகப் வன் ஸில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகுப்பாய்வு :

பகுப்பாய்வு :

அது மட்டுமின்றி இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (Mars Orbiter Mission) மற்றும் நாசாவின் செவ்வாய் வளிமண்டலம் மற்றும் ஆவியாகும் பரிணாம மிஷன் (Mars Atmosphere and Volatile Evolution Mission) ஆகிய இரண்டு மிஷன்களையும் பகுப்பாய்வு (analysis) செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பு :

சர்வதேச ஒத்துழைப்பு :

இந்த சந்திப்பானது நிச்சயமாக ஒரு பெரிய அளவிலான நிறுவனங்களின் கூட்டுச் சங்கமாக இருக்கும் என்றும், இதன் மூலம் இஸ்ரோ மற்றும் நாசாவிற்கு இடையே சர்வதேச ஒத்துழைப்பு நிகழும் என்றும் நம்பப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் :

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் :

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆனது இஸ்ரோவின் மார்ஸ் மிஷன் திட்டத்தில் இணைந்தததோடு, கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பாகம் 2 : அமெரிக்கா செய்த வரலாற்று துரோகம்..!


மீண்டும் அசிங்கப்பட்டது நாசா, வெளியிடப்பட்ட 250 ஜிபி ரகசிய தகவல்கள்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : இஸ்ரோ, நாசா

English summary
Nasa invites ISRO to US for possible collaboration. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot