செவ்வாய் கிரகம்: இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் சப்தத்தை வெளியிட்டுள்ளது நாசா.!
கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளதுஎன்று தான் கூறவேண்டும்.இந்நிலையல் செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஆனது பறக்கும் சப்தத்தை நாசாமுதன்முறையாக வெளியிட்டுள்ளது.
அண்மையில் நாசா அமைப்பு ஹெலிகாப்டரை மீண்டும் பறக்க வைத்து முயற்சி மேற்கொண்டது. அப்போது சரியாக 2 நிமிடங்களில்872 அடி தூரம் பறந்து இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் சாதனை படைத்தது.

அதேபோல் ஹெலிகாப்டர் புறப்படும் போது அதன் இறக்கைகள் சழலும் சப்தத்தையும் நாசா அமைப்பு தற்சமயம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வேறு கிரகத்தில் மற்றொரு விண்கலத்தின் சப்தத்தை பதிவு செய்தது இதுவே முதன் முறை என்று நாசா கூறியுள்ளது.

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

அதேபோல் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் ஆனது துல்லியமான புகைப்படங்கள் மற்றும் தவல்களை நாசா அமைப்பிற்கு அனுப்பி வருகிறது. மேலும் 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஆனது தற்சமயம் செவ்வாய் வளிமண்டலத்தில் இருந்து கார்பன்டைஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது.குறிப்பாக கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்ற MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளது நாசா அமைப்பு.

அதாவது இந்த கருவி ஆனது காரபன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரிந்து ஆக்சிஜனை உருவாக்கும் அருமையான திறன் கொண்டது. நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இந்த முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை கருவி உற்பத்தி செய்துள்ளது என்றும், இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்கள் வரை சுவாசிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த MOXIE என பெயரிடப்பட்ட கருவியை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும்என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும். பின்பு ரோவார்பூமிக்கு திரும்பும் போது உந்துசக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications