விண்வெளி வாசனையில் NASA உருவாக்கியுள்ள சென்ட்! உண்மையில் இது விண்வெளி வாசம் தானாம்!

|

விண்வெளியில் என்ன வாசனைத் திரவியங்கள் மிதக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நிச்சயமாக நாம் ஒருபோதும் அப்படி யோசித்திருக்கமாட்டோம், காற்றுக்கு என்ன வாசனையா இருக்கிறது என்று அசால்ட்டாக நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் விண்வெளியில் நாம் அறிந்திடாத வாசனைத் திரவியங்கள் மிதக்கின்றனவாம். அந்த வாசனையை நாசா தற்பொழுது சென்டாக உருவாக்கியுள்ளது.

விண்வெளி வசத்தில் புதிய சென்ட்

விண்வெளி வசத்தில் புதிய சென்ட்

மனிதர்களில் விண்வெளி வீரர்கள் மட்டுமே இந்த வாசனையை இதுவரை அனுபவித்துள்ளனர். பூமியில் வாழும் சாதாரண மனிதர்கள் யாரும் இதுவரை விண்வெளி வாசனையை நுகர்ந்ததில்லை. அவற்றை அனுபவிக்க நமக்கெல்லாம் இரு வாய்ப்பு கிடைக்குமென்று கூட நாம் யூகித்திருக்க மாட்டோம். ஆனால், இனி அப்படியில்லை இப்போது நம்மால் விண்வெளி வாசத்தை அனுபவிக்க முடியும், நாசாவின் ஈவ் டி ஸ்பேஸ் என்ற வாசனைத் திரவியம் இதைச் சாத்தியமாகியுள்ளது.

நாசாவுடன் இணைந்து கிக்ஸ்டார்ட்டர் உருவாக்கிய சென்ட்

நாசாவுடன் இணைந்து கிக்ஸ்டார்ட்டர் உருவாக்கிய சென்ட்

இதற்கு நாசாவிற்கு தான் நாம் பெரிய நன்றியைத் தெரிவிக்க வேண்டும். விண்வெளி வீரர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையிலிருந்த இது தற்பொழுது 'கிக்ஸ்டார்ட்டர் (Kickstarter)' நிதியளித்து தயாராகி உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் முதல் ஸ்பேஸ் செண்டான நாசாவின் ஈ டி ஸ்பேஸ் வாசனைத் திரவியங்களை வாடிக்கையாளர்கள் அக்டோபர் 2020 க்கு முன்பே அனுபவிக்கக் கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் விலை என்ன தெரியுமா?

இதன் விலை என்ன தெரியுமா?

கிக்ஸ்டார்ட்டர் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, இந்த புதிய சென்ட் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் ஷிப்பிங் தொகையுடன் சேர்த்து அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 29 டாலர் என்ற விற்பனை விலைக்குக் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறிய அளவு பாட்டில்கள் 15 என்ற துவக்க விலையில் கிடைக்குமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை நாசாவின் வேதியியலாளர் ஸ்டீவ் பியர்ஸ் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி வீரர்களுக்கு இது ஒரு பயிற்சி

விண்வெளி வீரர்களுக்கு இது ஒரு பயிற்சி

இந்த விண்வெளி வாசனை கொண்ட வாசனைத் திரவியம் பல தசாப்தங்களுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொழுது, உண்மையில் விண்வெளியில் எப்படி வாசனை வீசும் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த திரவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த வாசனையை நீங்களும் அனுபவிக்கலாம். "விண்வெளியின் வாசனை" தெரிந்து கொள்ள வேண்டும் ", என்பவர்கள் இதை உடனே ஆர்டர் செய்யலாம்.

விண்வெளி வாசனை இப்படி தான் இருக்கும்

விண்வெளி வாசனை இப்படி தான் இருக்கும்

பியர்ஸ், உலகின் சிறந்த வாசனைத் திரவிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, இந்த தயாரிப்பைப் பிரத்தியேகமாக உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார். விண்வெளி வாசனை எதைப் போன்றது என்பதை நாம் எளிதாக விமர்சித்துவிட முடியாது என்று நாசாவின் விண்வெளி வீரர் டோனி அன்டோனெல்லி குறிப்பிட்டிருந்தார். அது எப்படி இருக்கும் என்று அவர் கூறியதாவது "சீரேட் ஸ்டீக், ராஸ்பெர்ரி மற்றும் ரம்" ஆகியவற்றின் கலவையைப் போல் இருக்கும் என்று வர்ணித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
NASA Has Made A Perfume That Smells Like Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X