Home
News

செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?

நாசா அமைப்பு தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பல சாதனைகளை செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கி மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது நாசா அமைப்பு.

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் இல்லை

அதாவது செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் இல்லை, 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடுதான் இருக்கிறது. எனவே இதுபோன்ற கிரகத்திற்கு மனிதர்கள் சென்றால் ஆக்சிஜனை உருவாக்கி சுவாசிக்க முடியுமா என்று கேள்வி எழும்? தற்சமயம் இதற்கு ஒரு பதிலை நாசா அமைப்பு கொடுத்துள்ளது,

ரோவரை கடந்த பிப்ரவரி மா

அதன்படி மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆராய்சி செய்யவைக்க முடியாமா என்பதை அறிந்துகொள்ள நாசா அமைப்பு Perseverance எனும் ரோவரை கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது.

இறங்கிய ரோவர் ஆன

செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் ஆனது துல்லியமான புகைப்படங்கள் மற்றும் தவல்களை நாசா அமைப்பிற்கு அனுப்பி வருகிறது. மேலும் 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஆனது தற்சமயம் செவ்வாய் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்ற MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளது நாசா அமைப்பு.

ஆனது காரபன் டை

அதாவது இந்த கருவி ஆனது காரபன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரிந்து ஆக்சிஜனை உருவாக்கும் அருமையான திறன் கொண்டது. நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இந்த முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை கருவி உற்பத்தி செய்துள்ளது என்றும், இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்கள் வரை சுவாசிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நேரத்திற்கு 10 கிராம்

மேலும் இந்த MOXIE என பெயரிடப்பட்ட கருவியை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி

குறிப்பாக இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும். பின்பு ரோவார் பூமிக்கு திரும்பும் போது உந்துசக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது

Best Mobiles in India

English summary
NASA has created a record by producing oxygen on Mars: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X