செவ்வாய் கிரகத்தின் பாறையை பூமிக்கு கொண்டுவர அனுமதி: அடுத்து என்ன?
நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள செவ்வாய் கிரகத்தின் மாதிரியை பூமிக்கு கொண்டு வர அனுமதி கிடைத்துள்ளது. நாசா தனது மார்ஸ் மாதிரி ரிட்டர்ன் (எம்எஸ்ஆர்) மிஷனுக்கு கீழ் நாசா இதை மேற்கொள்ள இருக்கிறது.

எம்எஸ்ஆர் இன்டிபெண்டன்ட் ரிவ்யூ
அமெரிக்க விண்வெளி நிறுவனம், எம்எஸ்ஆர் இன்டிபெண்டன்ட் ரிவ்யூ என்ற அமைப்பை நிறுவியது. பின் அதன் கருத்துகளை இஎஸ்ஏ அதாவது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி உடனான சர்வதேச கூட்டுறவில் மேற்கொள்ள இருக்கிறது.

மார்ஸ் மாதிரி ரிட்டர்ன் திட்டம்
இந்த திட்டம் குறித்த வாரியத்தின் அறிக்கையின்படி, ஏஜென்சியின் மார்ஸ் மாதிரி ரிட்டர்ன் திட்டத்தை ஆராய்ந்து பல தசாப்தங்களாக அறிவியல் முன்னேற்றம் மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து முன்னோக்கி செலுத்த நாசா தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது.

ஏணைய சவால்கள் உள்ளது
செவ்வாய் மாதிரி ரிட்டர்ன் என்பது உலகளவில் முன்னணி உறுப்பினராக இருக்கும் நாசா செய்ய வேண்டிய ஒன்று என நாசா நிர்வாகி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த திட்டத்தில் ஏணைய சவால்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதன்காரணமாகவே கட்டமைப்புகளை உன்னிப்பாக கவனித்து இறுதியில் பெரிய சாதனை புரிவோம் என கூறினார்.

விண்வெளி வாகனங்கள் பயன்பாடு
செவ்வாய் மாதிரி ரிட்டர்ன் பிராஜெக்ட்டுக்கு மூன்று மேம்படுத்தப்பட்ட விண்வெளி வாகனங்கள் தேவைப்படும். ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மார்ஸ் 2020 பெர்சிவெரென்ஸ் ரோவர் இருக்கும். அதோடு கோரிங் டிரில் மற்றும் சாம்பில் குழாய்கள் உள்ளடக்கிய அதிநவீன அமைப்பாக இது விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறது. டிரில்லர் பாறைகளை பிரித்தெடுத்த பிறகு அதில் இருக்கும் சாம்பில் பொருட்களை சேமிப்பதற்கு சாம்பில் குழாய் பயன்படுத்தப்படும். இஎஸ்ஏ வழங்கிய "பெட்ச்" ரோவர் சேகரிக்கப்பட்ட சில பாறைகளை எடுக்கும்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதை
அதன்பின் நாசா மூலம் வழங்கப்பட்ட மாதிரிகளை மார்ஸ் ஏஜென்ட் வாகனம் பெற்றுக்கொள்ளும். அதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு செலுத்தப்படும். அதன்பின் இஎஸ்ஏ வழங்கிய எர்த் ரிட்டர்ன் ஆர்பிட்டர் செயலுக்கு வருகிறது. மார்ஸ் ஏஜென்ட் வாகனத்தில் உள்ள சாம்பில்களை எர்த் ரிட்டர்ன் ஆர்பிட்டர் எடுத்துக் கொள்ளும். இது 2030-களில் பூமிக்கு கொண்டு வரப்படும்.

மனிதர்களை அனுப்புவதன் முயற்சி
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில் இந்த செயல்பாடு நம்மை மேலும் ஒரு கட்டம் முன்னோக்கி செல்ல உதவும் என நாசா தரப்பில் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகம் குறித்த பல கேள்விகளுக்கு இது பதிலளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
source: timesnownews.com


Click it and Unblock the Notifications