நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

|

விண்வெளி பயணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான காலனி அமைப்பது, நிலவில் இருக்கும் நீரைப் பிரித்தெடுப்பது என்று படு மும்முரமாக நாசா அதன் விண்வெளி ஆராய்ச்சியில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறது. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA), நாசாவின் நீண்ட நாள் கனவு திட்டமான ஆர்ட்டெமிஸ் திட்டத்தைச் செயல்படுத்த நாசா தயாராகிவிட்டது. நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல் படி, 2025 ஆம் ஆண்டில் சந்திரனுக்குப் பல விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளது என்று அறிவித்துள்ளது.

நாசாவின் நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப் போகிறதா?

நாசாவின் நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப் போகிறதா?

இது நாசாவின் நீண்ட நாள் லட்சியமாகத் தோன்றினாலும், இந்தக் கனவை நிறைவேற்ற மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது தான் தண்ணீர்!. ஆம், நிலவில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தத் துடிக்கிறது நாசா. எந்தவொரு கிரகத்தின் நிலப்பரப்புகளில் விண்வெளி நிலையம் அமைத்து வசதியாக இருக்க, விண்வெளி வீரர்களுக்குத் தண்ணீர் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. நாசா இப்போது நிலவில் அமைக்கவிருக்கும் விண்வெளி நிலையத்திலும், இந்த தேவையை நாசா நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் வீரர்களின் விலை நிலவில் மோசமாகிவிடும்.

பூமியில் இருந்து தான் நீர் நிலவிக்ரு வந்ததா? விஞ்ஞானிகள் சொன்ன ரிப்போர்ட்

பூமியில் இருந்து தான் நீர் நிலவிக்ரு வந்ததா? விஞ்ஞானிகள் சொன்ன ரிப்போர்ட்

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, நிலவில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக நீர் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆச்சரியப்படும் விதமாக, இந்த நீர் பூமியில் இருந்தே நிலவிற்குச் சென்று உருவானது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எது, பூமியில் இருந்து நிலவிற்கு நீர் சென்றதா? இது நம்புகிற மாதிரி இல்லையே! என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பூமியில் இருந்து நிலவிற்கு நீர் எப்படிச் சென்றிருக்கும் என்பதற்கான அறிவியல் விளக்கத்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

நாசாவின் நிலவு விண்வெளி நிலையம் எங்கு அமைக்கப்படுகிறது?

நாசாவின் நிலவு விண்வெளி நிலையம் எங்கு அமைக்கப்படுகிறது?

"நாசாவின் ஆர்ட்டெமிஸ் குழு நிலவின் தென் துருவத்தில் ஒரு அடிப்படை முகாமை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு, பூமியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் தோன்றிய நீர் அயனிகள் விண்வெளி வீரர்களின் உயிர் ஆதரவு அமைப்பில் பெரும் பங்கை வகிக்கும்" என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் குண்டர் க்ளெடெட்ச்கா கூறுகிறார். நாசாவின் கூற்றுப்படி, ஆர்ட்டெமிஸின் நிலவின் அடிப்படை முகாம்களின் கட்டுமானப் பணிகள் சந்திரனின் தென் துருவத்தில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாசா ஏன் நிலவின் தென் துருவத்தைத் தேர்வு செய்தது தெரியுமா?

நாசா ஏன் நிலவின் தென் துருவத்தைத் தேர்வு செய்தது தெரியுமா?

நாசா ஏன் நிலவின் தென் துருவத்தில் விண்வெளி நிலையத்தை அமைக்கத் திட்டமிடுகிறது தெரியுமா? ஏனெனில் விஞ்ஞானிகள் கணித கணிப்பின் படி, நிலவின் தென் துருவ மேற்பரப்பிற்கு அடியில் நிறைய உறைந்த நீரை, நாசாவின் ஆய்வுகள் கண்டறிந்ததாகத் தெரிகிறது. நிலவின் ஈர்ப்புத் தரவுகளைச் சுற்றியுள்ள சமீபத்திய ஆய்வுகள், சந்திர துருவங்களில் குறைந்தபட்சம் 3,500 கன கிலோமீட்டர் கூடுதல் நீர் இருக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

நிலவில் எவ்வளவு ஆக்சிஜன் மற்றும் நீர் இருக்கிறது தெரியுமா?

நிலவில் எவ்வளவு ஆக்சிஜன் மற்றும் நீர் இருக்கிறது தெரியுமா?

கடந்த ஆண்டு நாசா வெளியிட்ட தகவலில், 800 கோடி மக்கள் சுமார் 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது என்றும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. இது உலகின் எட்டாவது பெரிய ஏரியான வட அமெரிக்காவின் ஹுரோன் ஏரியில் காணப்படும் நீரின் அளவிற்குக் கிட்டத்தட்டச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது விஞ்ஞானிகள் கூறிய நம்ப முடியாத விஷயத்திற்கு வருவோம். பூமியில் இருந்த நீர் எப்படி நிலவிற்குச் சென்றிருக்க முடியும் என்பதற்கான அறிவியல் விளக்கத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

நிலவிற்கு நீர் உண்மையில் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

நிலவிற்கு நீர் உண்மையில் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள குறிப்பு படி, சில சமயங்களில், பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அயனிகள், பூமிக்கு அருகில் உள்ள சந்திர மேற்பரப்பில் விழுந்து, விரட்டலுக்கு உட்பட்டு சந்திரனுக்குள் சென்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், சந்திரனுக்கு அதன் சொந்த காந்த மண்டலம் இல்லை, எனவே இந்த துகள்களைப் பூமிக்குத் திருப்பி அனுப்பும் திறன் கொண்டதாக இருக்காது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

நிலவில் இருக்கும் உறைந்த நீரை பிரித்தெடுக்க முயலும் நாசா

நிலவில் இருக்கும் உறைந்த நீரை பிரித்தெடுக்க முயலும் நாசா

எனவே, அதை அதன் மேற்பரப்பில் ஏற்றுக் கொண்டு நீரை நிலவில் உறைய வைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும், இந்த அயனிகள் இணைந்து சந்திர நிரந்தர உறைபனியை உருவாக்கி பல புவியியல் செயல்முறைகளுக்கு உட்பட்டிருக்கலாம். இது சந்திர மேற்பரப்புக்குக் கீழே உறைபனியை இட்டுச் சென்றது. படிப்படியாக, இந்த உறைபனி திரவ நீராக மாற்றி பயன்படுத்த நாசா திட்டமிடுகிறது. இந்த பெரிய நீர் வழங்கல் நாசாவின் ஆர்ட்டெமிஸ் பணிக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
NASA Future Moon Base May Have Water From Earths Atmosphere Scientists Explains : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X