சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா?
இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில், அணு சக்தியின் உதவியுடன் பறக்கும் திறனுள்ள ஒரு ஹெலிகாப்டரை சனி கிரகத்தின் நிலவான டைட்டன் மீது பறக்கவிட்டு அங்கு ஏலியன் உயிர்கள் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்ய உள்ளதாக நாசா அறிவித்தது. மேலும், வியாழன் கிரகத்தின் நிலவான யூரோப்பாவில் உயிர்கள் இருக்கின்றனவா என்றும் தேடும் திட்டமும் இருப்பதாக தெரிவித்திருந்தது.

யூரோபா கிளிப்பர் பணி:
சமீபத்தில் நாசா, இறுதியாக வியாழனின் சந்திரன் யூரோபாவை ஆழ்ந்து ஆய்வு செய்ய தயாராகிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது. கலிலியன் நிலவுக்கான தனது திட்டங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனம் முதலில் அறிவித்த நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த புதிய மேம்பாடு வெளியானது. யூரோபா கிளிப்பர் பணி பற்றிய தகவல்கள் ஆரம்பத்தில் 2017 ஆம் ஆண்டில் வெளியானது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டிலேயே விண்கலம் ஏவுவதற்கு தயாராக இருக்கும் என்று சமீபத்திய அறிவிப்பு குறிப்பிடுகிறது. யூரோபா கிளிப்பர் பணி நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தில் உள்ள கிரக பணிகள் திட்ட அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் வளர்ச்சியை கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் வழிநடத்துகிறது.

நீராவி தடயங்கள் கண்டுபிடிப்பு:
இந்த நிலையில், மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு வியாழனின் சந்திரன் யூரோபாவின் மேற்பரப்பிற்கு மேலே நீர் நீராவியின் தடயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரினங்கள் உள்ளதா?
சிறிய விண்வெளி பாறை என்பது நாசாவின் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்ற தேடலில் அதிக முன்னுரிமை இலக்குகளில் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்பு அத்தியாவசியம் என தெரிவித்துள்ளது.

நீர் திரவம் இருப்பது கண்டுபிடிப்பு
விஞ்ஞானிகள் நீர் திரவத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நீராவி வடிவத்தில் நீர் இருப்பதை உறுதி செய்திருப்பது அடுத்தக்கட்டம் என நாசாவின் விஞ்ஞானியான லூகாஸ் பகானினி நாசா அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

யூரோபாவில் உள்ள நீராவியின் அளவு:
இதுகுறித்து நேச்சர் ஆஸ்ட்ரோனமி இதழில் திங்கள் கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒலிம்பிக் போட்டி நடக்கும் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிலான நீராவி யூரோபாவில் இருப்பதாக தற்போதுவரை நாசா உறுதிசெய்துள்ளது.

முன்பைவிட குறைந்தமட்டத்தில் இருப்பது உறுதி
மேலும் யூரோபாவில் நீர் நீராவியாக வெளியேறுவது முன்னர் மதிப்பிட்டதை விட குறைந்த மட்டத்தில் நிகழ்கிறது என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் யூரோபாவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக சந்தேகிக்கின்றனர், மேலும் அங்கிருக்கும் அவதானிப்புகள் அந்த சந்தேகத்தை உறுதி செய்கிறது.

மின்சாரம் கடத்துவதற்கான திரவம்
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், நாசாவின் கலிலியோ விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மின்சாரம் கடத்தும் திரவத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்தது. அதன்பின் 2018 ஆம் ஆண்டு நடந்த பகுப்பாய்வில் திரவங்களுக்கான சான்றுகள் கிடைத்தன.

யூரோபா கிளிப்பர் பணி 2023:
நாசாவின் வரவிருக்கும் யூரோபா கிளிப்பர் பணி 2023, யூரோபாவின் பனிக்கட்டி குறித்த தகவலை ஆய்வு செய்யும். யூரோபாவின் பனிக்கட்டி குறித்து ஆராய கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் ஒரு ரேடார் ஆகியவை இந்த விண்கலத்தில் இடம்பெறும் எனவும் நீராவி குறித்த கூடுதல் நுண்ணறிவுகளை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Source: sciencealert.com


Click it and Unblock the Notifications