பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?

|

நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே ஒரு புதிய கிரகம் நட்சத்திரத்தைக் கடப்பதற்கான அறிகுறிகளை முதன்முறையாகக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டது. இதன் மூலம் முன்னர் கருதப்பட்டதை விட அதிக தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட்டுகளை தேட ஒரு புதிய வழியை நாசா கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எக்ஸோபிளானட் எங்கு அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

மெஸ்ஸியர் 51 (M51) - புதிய எக்ஸோபிளானட் கண்டுபிடிப்பா?

மெஸ்ஸியர் 51 (M51) - புதிய எக்ஸோபிளானட் கண்டுபிடிப்பா?

நாசா தனது சமீபத்திய அறிக்கையில், சாத்தியமான புதிய எக்ஸோபிளானட் கிரகத்தின் வேட்பாளர் சுழல் விண்மீன் மெஸ்ஸியர் 51 (M51) மண்டலத்தில் அமைந்துள்ளதாகக் கூறியுள்ளது. இதன் தனித்துவமான சுயவிவரத்தின் காரணமாக இந்த இடம் வேர்ல்பூல் கேலக்ஸி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, இன்னும் பல புதிய எக்ஸோபிளானட் கிரகத்தை நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே கண்டறியக் கூடிய மிகப்பெரிய சாத்திய கதவைத் திறந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

எக்ஸ்-ரே வேவ்லென்த் பயன்படுத்தி நாசா நடத்திய சோதனை

எக்ஸ்-ரே வேவ்லென்த் பயன்படுத்தி நாசா நடத்திய சோதனை

"எக்ஸ்-ரே வேவ்லென்த் பயன்படுத்தி புதிய எக்ஸோபிளானட் கிரக வேட்பாளர்களைத் தேடுவதன் மூலம் மற்ற உலகங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு புதிய அரங்கைத் திறக்க நாங்கள் முயல்கிறோம், இது மற்ற விண்மீன் திரள்களில் அவற்றைக் கண்டுபிடிப்பதைச் சாத்தியமாக்கும் ஒரு உத்தியாகும்" என்று வானியல் இயற்பியல் மையத்தின் ரோசன்னே டி ஸ்டெபனோ கூறியுள்ளார். ஹார்வர்ட் மற்றும் ஸ்மித்சோனியன் (CfA) கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ், இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் அமைந்துள்ள எம்51 யுஎல்எஸ் 1 (M51-ULS-1)

பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் அமைந்துள்ள எம்51 யுஎல்எஸ் 1 (M51-ULS-1)

எம்51 யுஎல்எஸ் 1 (M51-ULS-1) எனப்படும் பைனரி அமைப்பில் இந்த புதிய எக்ஸோப்ளானெட் வேட்பாளர் கண்டறியப்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் சூரியனை விட 20 மடங்கு அதிக நிறை கொண்ட ஒரு துணை நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கருந்துளையும் உள்ளது என்று நாசா கூறியுள்ளது. எக்ஸோப்ளானெட் வேட்பாளர் சனி கிரகத்தின் அளவுக்கு ஒத்த அளவை கொண்டிருக்கும் என்று நாசா தோராயமாகக் கணித்துள்ளது.

ஒரு முழுமையான சுழற்சி நிறைவடைய 70 ஆண்டுகளா?

ஒரு முழுமையான சுழற்சி நிறைவடைய 70 ஆண்டுகளா?

நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையைச் சூரியனிலிருந்து சனியின் இருமடங்கு தூரத்தில் சுற்றும் என்றும் குழு மதிப்பிடுகிறது. எக்ஸ்ட்ராகேலக்டிக் எக்ஸோப்ளானெட் என்ற விளக்கத்தைச் சரிபார்க்க ஆராய்ச்சியாளர்களுக்குக் கூடுதல் தரவு தேவைப்படுகிறது. புதிய எக்ஸோபிளானட் கிரகத்தின் வேட்பாளரின் சுற்றுப்பாதை மிகப்பெரியதாக இருப்பதால், அடுத்த முறை அது தனது பைனரி பார்ட்னருக்கு முன்னால் கடந்து செல்லும் போது, ​​சுமார் 70 ஆண்டுகள் கடந்திருக்கும் என்று நாசா கூறுகிறது.

வீடியோகாலில் சுந்தர்பிச்சை செய்த தவறு- என்னதான் சிஇஓ-வா இருந்தாலும் அவரும் மனிதர் தானே!வீடியோகாலில் சுந்தர்பிச்சை செய்த தவறு- என்னதான் சிஇஓ-வா இருந்தாலும் அவரும் மனிதர் தானே!

3,000 ஒளி ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவெளி கிரகங்கள்

3,000 ஒளி ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவெளி கிரகங்கள்

இது பின்னர், பல தசாப்தங்களாக கண்காணிப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளை முறியடிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. பால்வீதி விண்மீன் மண்டலத்தில் இதுவரை அறியப்பட்ட அனைத்து வெளிக்கோள்கள் மற்றும் எக்ஸோப்ளானெட் வேட்பாளர்கள் ஏராளமானவை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனேனில் இவை அனைத்தும் பூமியிலிருந்து சுமார் வெறும் 3,000 ஒளி ஆண்டுகளுக்குக் குறைவான இடைவெளி தொலைதூரத்தில் தான் கண்டறியப்பட்டுள்ளது.

28 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்கிய புதிய எக்ஸோபிளானட்

28 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்கிய புதிய எக்ஸோபிளானட்

ஆனால், M51 இன் கதையே வேறு, காரணம் இந்த புதிய புறக்கோள் பூமியில் இருந்து சுமார் 28 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இவ்வளவு அதிகமான தொலைதூரத்தில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எக்ஸோபிளானட் ஒரு அற்புதமான விஷயம் என்று நாசா கூறுகிறது. எக்ஸ்ரே கதிர்களைப் பயன்படுத்தி இந்த எக்ஸோபிளானட் கண்டறியப்பட்டது போல், இன்னும் பறந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஏராளமான புதிய விஷயங்களைக் கண்டறிய இது உதவும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
NASA Finds Evidence Of Possible Planet Outside Of Milky Way Galaxy Messier 51 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X