செவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி

|

உலக நாடுகள் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், உயிரினங்கள் வாழ முடியுமா என்றும், அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோளை இஸ்ரோவும் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது நாசா அமைப்பு. அதன்படி தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்ட நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது, செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்படித்து அனுப்பி வருகிறது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய ஒரு புகைப்படம் பெரும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது.

பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம்

பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம்

சில நாட்களுக்கு முன்பு நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் அடிவானத்தை படம்பிடித்து அனுப்பியது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவாதமானது செவ்வாய் கிரகத்தையோ அல்லது அதன் உள்ளடக்கங்களை குறித்தோ இல்லை. அந்த புகைப்படத்தில் காணப்பட்ட வேறு ஒரு காட்சியை மையமாகக் கொண்டது.

புகைப்படத்தில் இருந்த வானவில்

புகைப்படத்தில் இருந்த வானவில்

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் அடிவானத்தை படம்பிடித்து அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தின் மேற்புற மஞ்சள் வானத்தில் வானவில் போன்று தோன்றியது. பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் பகிரப்பட்ட இந்த புகைப்படம் குறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதம் நடந்தது. செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமற்றது என ரெட்டிட் மற்றும் டுவிட்டரில் பல்வேறு கோட்பாடுகள் குறித்து நெட்டிசன்கள் விவாதித்தனர். இருப்பினும் புகைப்படத்தில் அது காணப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் வானவில்லா?

செவ்வாய் கிரகத்தின் வானவில்லா?

அது செவ்வாய் கிரகத்தின் வானவில்லா அல்லது சுற்றி இருக்கும் நீர் துளிகளால் பிரதிபலிக்கும் ஒளியால் தோன்றப்பட்டவையா என பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இங்கு போதுமான நீர் இல்லை எனவும் குளிர்நிலை காரணமாக வளிமண்டலத்தில் திரவ நீருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது எனவும் விவாதம் முன்வைக்கப்பட்டது.

நாசா பகிர்ந்த புகைப்படம்

இந்தநிலையில், சமூகவலைதள விவாதத்திற்கு நாசா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் வானவில் என்பது சாத்தியமில்லை என நாசா தெளிவுப்படுத்தியுள்ளது. புகைப்படங்களை கிளிக் செய்யும்போது கேமரா லென்ஸ் மூலம் ஏற்படும் "லென்ஸ் எரிப்பு" எனவும் இதைதவிர வேறு எதையும் படம் காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பெர்சவரன்ஸ் பதிவு செய்யப்பட்ட புகைப்படம்

பெர்சவரன்ஸ் பதிவு செய்யப்பட்ட புகைப்படம்

பெர்சவரன்ஸ் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படத்தின் போது ஒளி சிதறல் லென்ஸ் எரிப்பு ஏற்பட்டு இது தோன்றியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ரோவர் பின்புற ஹஸ்காம்களில் சன்ஷேட்ஸ் அவசியம் என கருதப்படவில்லை எனவே அதன்மூலம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் சிதறலால் இவை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்த நாசா

செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்த நாசா

அண்மையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். மேலும் நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைகப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA explained about the photo of the diligent rover: Is it possible in the rainbow on Mars?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X