நினைத்துக்கூட பார்க்க முடியல: விண்கல் பூமியை தாக்கினால் என்ன செய்வது?- நாசா நிபுணர்கள் பதில்!

|

பூமிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் "வானத்தை நோக்கியே தங்கள் பார்வையை வைத்திருக்கிறது" என நாசா தெரிவித்துள்ளது.

வித்தியாசமான மற்றும் அபாயகரமான அனுபவம்

வித்தியாசமான மற்றும் அபாயகரமான அனுபவம்

கனடாவில் சமீபத்தில் ஒரு பெண் ஒருவருக்கு வித்தியாசமான மற்றும் அபாயகரமான அனுபவம் ஏற்பட்டது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது விண்கல் ஒன்று கூரையை துளைத்து வீட்டுக்குள் வந்தது. இந்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இதையடுத்து இதுகுறித்த பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டது. இதில் முக்கிய கேள்வியாக இருப்பது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் பெரிய விண்கல், ஒரு சிறுகோள், பூமியை தாக்கினால் என்ன செய்வது என்பதாகும் இந்த கேள்வி குறித்த ஆர்வம் அதிகரித்த காரணத்தால், நாசா தனது நிபுணர் ஒருவரிடம் இதுகுறித்த கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து டாக்டர் கெல்லி ஃபாஸ்ட்., எங்களை கண்டுபிடிப்பதற்கு முன் சிறுகோளை கண்பிடிப்பது மிக அவசியம் என கூறினார், பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாசா பகிர்ந்த இன்ஸ்டா வீடியோ

டாக்டர் ஃபாஸ்டின் பதிலை பகிர்ந்து கொள்ளும் வகையில், நாசா ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது. இதில் கிரக பாதுகாப்பு அலுவலகம் தங்களை கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர்கள் சிறுகோள்களை கண்டுபிடிக்க முடிகிறதா என்ற கேள்வியை உறுதி செய்வதற்காக "வானத்தை நோக்கி கண்களை வைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளது.

கிரக பாதுகாப்பு நிபுணர்

கிரக பாதுகாப்பு நிபுணர்

இதுகுறித்து கிரக பாதுகாப்பு நிபுணர் ஃபாஸ்ட், "தற்போதைய நிலையை பொறுத்தவரையில், தடுக்கப்படக் கூடிய இயற்கை பேரழிவு என்றால் அது சிறுகோள் தாக்கம் மட்டுமே ஆகும். நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் சிறுகோள்களை கண்டுபிடித்து அவற்றின் சுற்றுப்பாதையை கணக்கிடுவதற்கான திட்டங்களை ஆதரித்து வருகிறது. சிறுகோள் தாக்கத்தின் அச்சுறுத்தலை குறிப்பிட்ட தசாப்தங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அதன் விலகல் பணி சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் விண்கற்கள்

பூமியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் விண்கற்கள்

விண்கற்கள் பூமியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் பூமியில் சிறிய விண்கற்கள் தரையிறங்குகின்றன. அவற்றை மக்கள் சேகரித்து வைக்கிறார்கள், சில நேரங்களில் இந்த கற்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகின்றன. விண்கற்களுடன் ஒப்பிடுகையில் சிறுகோள்கள் மிகப்பெரியவை ஆகும். கிரகங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறியது. சிறுகோள்கள் ஆனது கிரகங்களை போன்றே சூரியனை சுற்றி வருகின்றன.

ஈர்ப்பு விசையே காரணம்

ஈர்ப்பு விசையே காரணம்

விண்கலன் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன. சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

புதிய சிறுகோள் ஒன்று கண்டுபிடிப்பு

புதிய சிறுகோள் ஒன்று கண்டுபிடிப்பு

தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) பூமிக்கு அருகில் உள்ள பொருள்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. பூமியில் 1.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்ற புதிய சிறுகோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2021 பிஜே1 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வந்த 1000 ஆவது சிறுகோள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Nasa Expert answer about What If Asteroid Were Going to Hit Earth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X