1000 தொட்டாச்சு- ஆயிரமாவது சிறுகோளை கண்டுபிடித்த நாசா: இதுவும் பூமியை நோக்கி தான்!
பூமிக்கு அருகே வந்த குறுங்கோள் ஒன்றை நாசா கண்டுபிடித்து இருக்கிறது. இந்த குறுங்கோளுக்கு 2021 பிஜேஐ என பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது நாசா கண்டறிந்து சிறுகோளானாது பூமியல் இருந்து சுமார் 17 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததாக கூறப்படுகிறது.

ரேடாரில் சிக்காமல் இருந்த சிறுகோள்
இதுநாள் வரை ரேடாரில் சிக்காமல் இருக்க காரணம் இந்த குறுங்கோளானது மிகவும் சிறியது. இந்த குறுங்கோள் 17 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 94 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை கடந்து சென்றுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் ஆனது அளவு மிகவும் சிறியதாக இருந்ததால் ரேடாரில் இது காணப்பட முடியவில்லை என கூறப்படுகிறது.

1.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு
தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) பூமிக்கு அருகில் உள்ள பொருள்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. பூமியில் 1.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்ற புதிய சிறுகோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2021 பிஜே1 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வந்த 1000 ஆவது சிறுகோள் ஆகும்.
சிறுகோள் அளவு மிக சிறியது
கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் அளவு சிறியது என்று குறிப்பிடுவது பிற கோள்களை ஒப்பிடும் போதே ஆகும்.
ஜேபிஎல் மூலம் பூமியை நோக்கியோ அல்லது விண்வெளியிலோ வேகமாக நகரும் பொருட்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சிறுகோள் பூமியை தாக்கும், எந்தளவு தூரத்தில் கடந்து செல்கிறது என்பதை கணிக்க இது பெருதளவு உதவுகிறது.

வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருள்
விண்கலன் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்
எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்
சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

பிரம்மாண்ட எரிகல்
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல் ஒன்று பூமியை நோக்கி பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா குறிப்பிட்டது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறும் எனவும் தெரிவித்தது.இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டது.

மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியை நோக்கி
இந்த எரிகல் முதலில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது. 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் 1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு '1991 VG' என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. இது மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications