வெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு!

|

நாசாவின் ரகசியத் தகவல்கள் வெறும் $35 டாலர் மதிப்புடைய மலிவான கணினியை பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டுள்ளது.

வெறும் 35 டாலர் கணினியை பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு!

ஹேக்கர்கள் திருடிய தகவல்கள் நாசாவிற்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியுமா? எந்த முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளார்கள் தெரியுமா?

குழந்தைகளுக்கான சாதனம் கொண்டு ஹேக்

குழந்தைகளுக்கான சாதனம் கொண்டு ஹேக்

வெறும் $35 டாலருக்கு விற்கப்படும் கிரெடிட்-கார்டு அளவிலான சாதனம் தான் ராஸ்பெர்ரி பை. அயல் நாடுகளில் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டிங் கோடிங் கற்பிக்க இந்த ராஸ்பெர்ரி பை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக நமது வீடு டிவிகளில் சொருகப்படும் ஒரு எளிமையான இயந்திரம் தான் இந்த ராஸ்பெர்ரி பை சாதனம்.

சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.! சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.!

தற்காலிகமாக நாசா துண்டிப்பு

தற்காலிகமாக நாசா துண்டிப்பு

இந்த சிறிய ராஸ்பெர்ரி பை (Raspberry Pi) கணினியைப் பயன்படுத்தி நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி நெட்வொர்க்கில் ஊடுருவி, முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஹேக்கிங்கிற்கு பிறகு விண்வெளி விமான அமைப்புகளைத் தற்காலிகமாக நாசா துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

23 மிக முக்கியமான கோப்புகள் திருட்டு

23 மிக முக்கியமான கோப்புகள் திருட்டு

இந்த எளிமையான சாதனத்தை பயன்படுத்தி, நாசா நெட்வொர்க்கிலிருந்து 500 மெகாபைட் அளவிலான 23 மிக முக்கியமான கோப்புகள் உடன் கூடிய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று நாசாவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.!ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.!

நாசா கவனிக்கவில்லையா? வேடிக்கை!

நாசா கவனிக்கவில்லையா? வேடிக்கை!

ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி, ஏப்ரல் 2018 நாசா நெட்வொர்க்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த தாக்குதல் கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.

ஹேக்கர்கள் திருடிய தகவல்கள் இது தான்

ஹேக்கர்கள் திருடிய தகவல்கள் இது தான்

கியூரியாசிட்டி ரோவரை கையாளும், செவ்வாய் அறிவியல் ஆய்வக பணியிலிருந்த இரண்டு தடைசெய்யப்பட்ட கோப்புகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் சர்வதேச ஆயுத ஒழுங்குமுறைகள் தொடர்பான தகவல்கள் போன்ற இரகசிய தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை! கலக்கத்தில் அமெரிக்கா!சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை! கலக்கத்தில் அமெரிக்கா!

 டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் தற்காலிகமாக துண்டிப்பு

டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் தற்காலிகமாக துண்டிப்பு

குறிப்பாக JPL இன் மூன்று முதன்மை நெட்வொர்க்கில் உள்ள இரண்டு நெட்வொர்க்கை ஹேக்கர்கள் வெற்றிகரமாக ஹேக் செய்து, தகவல்களை திருடியுள்ளனர். மேலும் ஜேபிஎல் நெட்வொர்க்கிலிருந்து நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் தகவல்கள் மற்றும் பல விண்வெளி விமானம் தொடர்பான அமைப்புகளை தற்காலிகமாக நாசா, JPL நெட்வொர்க்கில் இருந்து துண்டித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Datas Are Stolen By Hackers And They Just Used $35 Computer To Steal Data : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X