ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!

|

1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா நிகழ்த்தி வருகிறது. நாசாவின் க்யூரியாசிட்டி மார்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தில் கச்சிதமாக செதுக்கப்பட்ட கதவு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் க்யூரியாசிட்டி மார்ஸ் ரோவர்

நாசாவின் க்யூரியாசிட்டி மார்ஸ் ரோவர்

நாசாவின் க்யூரியாசிட்டி மார்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தில் கச்சிதமாக செதுக்கப்பட்ட கதவு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ஸ் ரோவர் கிளிக் செய்த புகைப்படத்தில் சுவாரஸ்யமான அம்சம் காணப்பட்டிருக்கிறது. இது வேற்றுகிரக வாசிகளால் செதுக்கப்பட்டிருக்கும் என வதந்தித் தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கான ஆதாரமாகவும் இது பார்க்கப்படுகிறது. அதேபோல் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பாறைகளுக்குள் அமைந்திருக்கும் இந்த வாசல் ஆனது செவ்வாய் கிரகத்தின் மறைவிடம் அல்லது மற்றொரு பிரபஞ்சத்திற்கான நுழைவு வாயிலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மர்மமான வாசல் குறித்து இணையதளத்தில் பல கோட்பாடு

மர்மமான வாசல் குறித்து இணையதளத்தில் பல கோட்பாடு

நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் எடுத்த இந்த புகைப்படத்தில் இடம்பெற்ற மர்மமான வாசல் குறித்து இணையதளத்தில் பல சதி கோட்பாடுகள் வருகிறது. மேலும் சிலர் இந்த கிரகம் சில காலமாக பல நிலநடுக்கங்களை எதிர்கொண்டது இதன் காரணமாக ஏற்பட்ட ஒரு அழுத்தத்தினால் இது ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மே 4 ஆம் தேதி இந்த மாதத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆராய்ச்சியாளர்கள் உண்மையில் இது என்ன என்பது குறித்தும் எப்படி உருவானது என்பது குறித்தும் அறிந்து கொள்ள சில ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.

பாறையின் வாசல் குறித்து முறையாத தகவல் இல்லை

பாறையின் வாசல் குறித்து முறையாத தகவல் இல்லை

இந்த புகைப்படமானது நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் மூலம் எடுக்கப்பட்டது. Greenhugh Pediment எனப்படும் புவியியல் பகுதியில் ரோவரின் மாஸ்ட் கேமரா மூலம் இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டதாக நாசா தெரிவித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் கதவு வாசல் (DoorWay) என்ற பாறை அமைப்பு குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகிறது. பாறையின் வாசல் குறித்து இதுவரை நாசாவிடம் இருந்த எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை. அதேபோல் இந்த பாறையின் வாசலானது இயற்கையாக அமைந்திருக்கலாம் எனவும் அல்லது என்ன காரணம் எனவும் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். கதவு போன்ற பாறை உருவாக்கம் ஆனது மகிவும் பெரியதாக இருக்கிறது. இது உண்மையாக சில சென்டிமீட்டர் மற்றும் குறிப்பிடத்தக்க அங்குல உயரமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவல் அறிவிதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பூ போன்ற பொருள்

பூ போன்ற பொருள்

அதேபோல் கடந்த வாரம் நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு வித்தியாச புகைப்படத்தை எடுத்து அனுப்பியது. ஒரு நுட்பமான கரிம அமைப்பைப் போலத் தோற்றமளிக்கும் பொருள் கிரகத்தில் வாழ்வின் நம்பிக்கையைத் தூண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகச் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இருப்பினும், ரோவரின் பின்னால் உள்ள குழு இந்த பூ போன்ற பொருள் எதனுடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது உண்மையில் ஒரு உயிர் உள்ள மலர் அல்ல. ஆனால், நீர் அதன் உருவாக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

சிறிய பூ அல்லது சில வகையான கரிம அம்சம்

சிறிய பூ அல்லது சில வகையான கரிம அம்சம்

கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இந்த வாரம் அழகான மற்றும் கவர்ச்சியான பூ போன்ற உருவத்தைப் படம் எடுத்துள்ளது. இந்த கேள்விக்குரிய பொருள், ஒரு சிறிய பூ அல்லது சில வகையான கரிம அம்சமாக இருந்தாலும், ரோவர் குழு இந்த பொருள் உண்மையில் ஒரு கனிம உருவாக்கம் என்பதை உறுதிப்படுத்தியது. செவ்வாய் கிரகத்தின் நீரிலிருந்து படியும் தாதுக்களால் உருவாகும் நுட்பமான கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

Source: NASA

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Curiosity Rover Found Doorway in Mars: How it is Formed in Mars

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X