பூமியில் சூரியன் இப்படி கூட காட்சி அளிக்குமா? பெருங்கடல் மீது இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்கலையே.!

|

விண்வெளியில் மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களும், அரிய நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படி விண்வெளியில் இருந்து பூமியில் நிகழும் நிகழ்வுகளைச் சர்வதேச விண்வெளி நிலையம் கண்காணித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது விண்வெளியில் இருந்து பார்த்தபடி பசிபிக் பெருங்கடல் நீர் மீது சூரியன் கதிர்கள் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சி ISS இல் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூரியனை இது வரை நாம் இப்படி பார்த்திருக்க முடியாது?

சூரியனை இது வரை நாம் இப்படி பார்த்திருக்க முடியாது?

சூரியனை இது வரை நாம் இப்படி ஒரு பரிணாமத்தில் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதமான வீடியோ பதிவு சர்வதேச விண்வெளி நிலையத்தால் படம் பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கிளிப் முழுமையாகப் பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் கண்கவர் காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த வீடியோ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகிவிட்டது. உண்மையில் இந்த வீடியோ பூமியின் அழகைச் சிறப்பாகக் காட்டியுள்ளது.

இந்த வீடியோ எப்படி படம்பிடிக்கப்பட்டது தெரியுமா?

இந்த வீடியோ எப்படி படம்பிடிக்கப்பட்டது தெரியுமா?

ஒரு நிமிடம் நீளமுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வொண்டர் ஆஃப் சயின்ஸால் பதிவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கால இடைவெளி வீடியோ ஆகும். தெரியாதவர்களுக்கு இது டைம் லேப்ஸ் வீடியோ என்று கூறப்படுகிறது. இது எர்த் சைன்ஸ், ரிமோட் சென்சிங் யூனிட், நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் ஈடுபாட்டுடன் இந்த புகைப்படங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

'சரிசெய்ய முடியாத' கோளாறுகளை எதிர்கொள்ளும் சர்வதேச விண்வெளி நிலையம்.. ரஷ்யா வெளியிட்ட எச்சரிக்கை..'சரிசெய்ய முடியாத' கோளாறுகளை எதிர்கொள்ளும் சர்வதேச விண்வெளி நிலையம்.. ரஷ்யா வெளியிட்ட எச்சரிக்கை..

வைரல் ஆகும் வீடியோ பதிவு

வைரல் ஆகும் வீடியோ பதிவு

இந்த அற்புதமான வீடியோ சூரியனின் பிரதிபலிப்பு நீரில் இருந்து பிரகாசிப்பதைக் காட்டுகிறது. இது குமுலோனிம்பஸ் மேகங்களின் (cumulonimbus clouds) வரிசையால் நிழலாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ்எஸ் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 253 மைல்களுக்கு மேல் சர்வதேச டேட் லைனைச் சுற்றி வந்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படங்களைப் படம் பிடித்து ஒரு நேர இடைவெளியில் வீடியோவை இணைத்தது தான் சிறப்பு. இந்த வீடியோவை இது வரை சுமார் 299.4K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!

ISS பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்

சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி ஏராளமான செய்திகள் சமீபத்தில் வலைத்தளங்களை நிரப்பி வருகிறது. ISS பற்றி வெளியான அற்புதமான செய்திகளில் இது ஒன்றாகும். இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி சமீபத்தில் வெளியான திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சர்வதேச விண்வெளி நிலையம் தனது இறுதி நாளை நெருங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 80 சதவீத உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்று ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யா எச்சரித்ததற்கு என்ன காரணம்?

ரஷ்யா எச்சரித்ததற்கு என்ன காரணம்?

வன்பொருள் கோளாறு காரணமாகச் சரிசெய்ய முடியாத சேதங்கள் ஏற்பட்டு வருவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் "சரிசெய்ய முடியாத" அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
NASA Captures Suns Reflection On Pacific Ocean Video From Outer Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X