பூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்!

|

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான, சூரிய மண்டலத்தின் ஒவ்வொரு கிரகத்திற்கும் முந்திய பனிமனிதன் வடிவ விண்வெளி பாறை ஒன்று, பூமியில் உயிரினங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

4.1 பில்லியன் மைல்

4.1 பில்லியன் மைல்

மனிதனால் இதுவரை ஆராயப்பட்டதிலேயே மிக தொலைதூர பொருளான இந்த அசாதாரணமான வடிவம்கொண்ட அரோகோத் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், பூமியிலிருந்து 4.1 பில்லியன் மைல் தொலைவில் நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தனது பயணத்தை

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் ஆரம்பத்தில் புளூட்டோவைக் கடந்து பறந்து சென்று, பின்னர் 1 ஜனவரி 2019 அன்று அராக்கோத்-ஐ நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்தது.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

அல்டிமா துலே

அல்டிமா துலே

முன்னதாக அல்டிமா துலே என்று அழைக்கப்பட்ட இந்த அரகோத், கைபர் பெல்ட்டில் உள்ளது. முதன்முதலாக தெளிவற்ற படங்கள் வெளியுலக பார்வைக்கு வந்ததிலிருந்து வானியலாளர்களுக்கு சதி செய்துள்ளது.

 கூடுதலான ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன

கூடுதலான ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன

இப்போது வெளியாகியுள்ள அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்கள் மனிதர்களால் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட மிக தொலைதூர பொருளைப் பற்றிய கூடுதலான ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன.

பனிப்பந்து வடிவ பொருள்

பனிப்பந்து வடிவ பொருள்

இந்த பனிப்பந்து வடிவ பொருள் ஒரு காலத்தில் இரண்டு தனித்தனி பொருள்களாக இருந்ததாகவும், பின்னர் அவை இறுதியில் ஒன்றிணைந்து இன்று காணப்படும் தனித்துவமான வடிவத்தை பெற்றுள்ளதாகவும் மூன்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது முன்னர் அறியப்படாத பாறையின் தனித்துவமான சிவப்பு நிறத்தையும் வெளிப்படுத்தியதுள்ளது. சூரிய மண்டலத்தில் உயரினங்களின் வாழ்க்கையை துவங்க காரணமாக இருந்த முக்கிய மூலக்கூறுகளின் இருப்பைக் கொண்டிருக்கிறது.

முழுமையான விளக்கத்தை

இந்த ஆச்சர்யத்தக்க நிகழ்வு நடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, விஞ்ஞானிகள் அரோகோத்தின் சேர்மங்கள் மற்றும் தோற்றம் பற்றிய முழுமையான விளக்கத்தை இன்னும் உருவாக்கி வருகின்றனர்.

ஆதியான பொருள்

ஆதியான பொருள்

'அரோகோத் என்பது விண்கலத்தால் இதுவரை ஆராயப்பட்ட மிக தொலைதூர, மிகவும் பழமையான மற்றும் மிகவும் ஆதியான பொருள். எனவே இது ஒரு தனித்துவமான கதையை கொண்டிருக்கும் என்று எங்களுக்குத் தெரியும் 'என்று கொலராடோவின் போல்டரில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூ ஹாரிசான் முதன்மை புலனாய்வாளர் ஆலன் ஸ்டெர்ன் ஒரு ஊடகத்திடம் தெரிவித்தார்.

CamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா? இல்லைனா உடனே இதை இன்ஸ்டால் செய்யுங்க!CamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா? இல்லைனா உடனே இதை இன்ஸ்டால் செய்யுங்க!

 ஒட்டுமொத்த கிரகங்கள்

ஒட்டுமொத்த கிரகங்கள்

கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. மேலும் இதன் விளைவாக ஒட்டுமொத்த கிரகங்கள் மற்றும் அவற்றின் உருவாக்கம் குறித்து புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். ' என்கிறார்.

 22 மைல் நீளமும் 12 மைல் அகலமும் கொண்டது

22 மைல் நீளமும் 12 மைல் அகலமும் கொண்டது

அரோகோத் தோராயமாக சியாட்டல் நகரின் அளவிற்கு, அதாவது 22 மைல் நீளமும் 12 மைல் அகலமும் கொண்டது. இது ஒரே மாதிரியான சிவப்பு நிற மேற்பரப்பைக் கொண்டுள்ள இது, மென்மையான மற்றும் சில பள்ளங்களுடன் கூடிய பரப்புடையது.


உறைந்த மெத்தனால் - ஒரு வகை ஆல்கஹால் - மற்றும் அடையாளம் காணப்படாத சிக்கலான கரிம மூலக்கூறுகளால் ஆன இந்த கிரகத்தில் இதுவரை தண்ணீர் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோளியப்பாறை கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இது, சூரிய மண்டலத்தின் அசல் கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றாக இருந்தது.

 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

இந்த சிறிய கிரகங்கள் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒன்றிணைந்திருக்கலாம். மேலும் அவை கிரகங்கள் உருவாகும் வழியில் ஒரு முக்கிய இடைநிலை அளவு படியாகும்.

source: sciencealert.com

Best Mobiles in India

English summary
NASA Captures Rare Photo of a Dust Devil Swirling on The Surface of Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X