53 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கு கவுண்டவுன் தொடங்கியது.. யார் அந்த 4 பேர்.. இதோ விவரம்..
விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி விஷயங்களை, நாசா (nasa) விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு நாளை மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது நாசா. இதக்குவேண்டி ஆர்டெமிஸ் (Artemis) என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது நாசா அமைப்பு.
குறிப்பாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருந்த விண்வெளி ஆர்வார்களுக்கு, இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. அதுவும் 1972-ம் ஆண்டில் அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் யாரும் செல்லவில்லை.

அந்த காலகட்டங்களில் நிலவுக்குச் செல்வது மிகப்பெரிய சாதனையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவில் மனிதர்கள் வசிக்க நிரந்தர மனித தளம் அமைப்பதையும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான ஒத்திகையாகவும் தான் இந்த ஆர்டெமிஸ் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ் II திட்டம் (Artemis II)
குறிப்பாக 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அருகில் அழைத்துச் செல்லும் முதல் மிஷன் ஆர்டெமிஸ் II. அதுவும் இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக நிலவைச் சுற்றி வருவார்கள்.
ஆர்டெமிஸ் III திட்டம் (Artemis III)
அதேபோல் மனிதர்கள் மீண்டும் நிலவில் தடம் பதிக்கப் போவது ஆர்டெமிஸ் III மிஷனில் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மட்டும் வெற்றி பெற்றால், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண்ணும், முதல் கறுப்பினத்தவரும் இந்த திட்டம் மூலம் வரலாறு படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென்துருவப் பகுதியில் (South Pole) தரையிறங்குவதே நாசாவின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம், அங்கு தான் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் ஆர்டெமிஸ் திட்டத்திற்காக உலகின் வலிமையான ராக்கெட் Space Launch System மற்றும் மனிதர்கள் பயணிக்கும் Orion விண்கலத்தை நாசா பயன்படுத்த உள்ளது.
நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான கவுண்டவுனை இன்று காலை தொடங்கியது நாசா அமைப்பு. நாளை (ஏப்ரல் 1) மாலை 4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்குப் பயணிக்க தயாராக இருக்கிறது ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் (Space Launch System) ராக்கெட். குறிப்பாக இந்த நிலவு பயணம் 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று நாசா கூறியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பூமியிலிருந்து புறப்பட்டு, நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பசிபிக் கடலில் தரை இறங்குவது தான். நிலவுக்குச் செல்லும் 4 விண்வெளி வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது நாசா அமைப்பு.
1. ரீட் வைஸ்மேன் (Reid Wiseman): அமெரிக்காவைச் சேர்ந்த இவர், ஆர்டெமிஸ் திட்டத்தின் தலைவராகச் செயல்பட உள்ளார்.
2.விக்டர் குளோவர்(Victor Glover): அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இந்த திட்டத்தில் பைலட் என்று கூறப்படுகிறது. அதுவும் இவர் நிலவுக்குச் செல்லும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.

3.கிறிஸ்டினா கோச் (Christina Koch): நிலவுக்கு செல்லும் அமெரிக்காவின் முதல் பெண்மணி இவர்தான். இவர் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படுகிறது.அதேபோல் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்து பெண் என்ற சாதனையும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
4.ஜெரமி ஹான்சென் (Jeremy Hansen):கனடாவை சேர்ந்த இவர் இந்த திட்டத்தில் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படுகிறது. அதுவும் நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற உள்ளார்.


Click it and Unblock the Notifications








