விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

|

விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி விஷயங்களை, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து ஒரே நேரத்தில் இடைவெளியின்றி மேற்கொண்டு வருகிறது. நிலவு பயணம், செவ்வாய் கிரகத்தில் மனித காலனி அமைக்கும் பணி, வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது, பிரபஞ்சத்தில் இருக்கும் எக்ஸோபிளானட் கிரகங்களைக் கண்டறிவது, சூரியனின் சக்தியை ஆராய்வது என்று நாசாவின் லிஸ்ட் மிக நீளமாக நீண்டுகொண்டே போகிறது.

நாசா மும்முரமாக வேலை செய்யும் முக்கிய திட்டங்கள்

நாசா மும்முரமாக வேலை செய்யும் முக்கிய திட்டங்கள்

இந்த வரிசையில், எதிர்கால பலனை ஆதரிக்கும் ஒரு மிகவும் முக்கியமான வேலையை நாசா சில காலமாகச் செய்து வந்தது, அதற்கான முடிவு ஒருவழியாக இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில், நாசா அதிகப்படியான விண்வெளி பயணங்களைத் திட்டமிட்டுள்ளது. இதில் உள்ள சில திட்டங்களில் விண்வெளி வீரர்கள் நேரடியாக நீண்ட காலத்திற்கு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனர். இதனால், அவர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமான விஷயங்களை மேம்படுத்த நாசா தீவிரம் காட்டி வருகிறது.

ஸ்பேஸ் சூட்களை மேம்படுத்தும் திட்டம்

ஸ்பேஸ் சூட்களை மேம்படுத்தும் திட்டம்

அப்படி, நாசா மேற்கொண்ட மிக முக்கியமான பாதுகாப்பது நடவடிக்கைகளில் ஒன்று தான், விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஸ்பேஸ் சூட்களை மேம்படுத்தும் திட்டம். எதிர்கால விண்வெளி பயணங்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப செயல்படும் ஸ்பேஸ் சூட்களை நாசா உருவாக்க திட்டமிட்டது. இதன் முடிவாக, சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் நிலவு பயணங்களுக்கான அடுத்த தலைமுறை விண்வெளி உடைகளை உருவாக்க இப்போது நாசா இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

ஸ்பேஸ் சூட் உருவாக்க இரண்டு நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தமா?

ஸ்பேஸ் சூட் உருவாக்க இரண்டு நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தமா?

எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி சர்வீசஸ் (xEVAS) ஒப்பந்தத்தின் வெற்றியாளர்களான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் சென்றடைந்துள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நிலயத்திற்கு வணிக விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது மற்றும் அதன் சொந்த தனியார் விண்வெளி நிலையத்தில் சமீப காலமாக வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் வழங்கப்பட மற்றொரு நிறுவனம் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனமாகும்.

புதிய ஸ்பேஸ் சூட் ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதிய ஸ்பேஸ் சூட் ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாம் சந்திரனுக்கு வரும்போது உடைகள் மூலம் சரித்திரம் உருவாக்கப்படும். விண்வெளியில் இந்த ஆடைகளை அணிந்தவர்களாகவும் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கும் நமது முதல் நிற நபரும், நமது முதல் பெண்மணியும் இருப்பார்கள் என்று நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் இயக்குனர் வனேசா வைச் கூறியுள்ளார். மேம்படுத்தப்படும் புதிய ஸ்பேஸ் சூட் ஒப்பந்தங்களின் மதிப்புகள் பற்றி இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவை 2034 வரை $3.5 பில்லியன் (தோராயமாக ரூ. 27,100 கோடி) உச்சவரம்பைக் கொண்டுள்ளன என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

ஐஎஸ்எஸ் மற்றும் சந்திரனுக்குச் செல்லும் ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கான சூட் ரெடியா?

ஐஎஸ்எஸ் மற்றும் சந்திரனுக்குச் செல்லும் ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கான சூட் ரெடியா?

NASA இப்போது வரை இரண்டு நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது, வரும் காலத்தில் இன்னும் ஒன்று அல்லது அதற்கு மேலும் நிறுவனங்களை இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. யுஎஸ் விண்வெளி ஏஜென்சியின் வல்லுநர்கள் சூட்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் தரங்களை வகுப்பது, நிறுவனங்களை வடிவமைத்தல், சான்றளித்தல் தயாரித்தல் மற்றும் ஐஎஸ்எஸ் மற்றும் ஆர்ட்டெமிஸ் பயணங்கள் சந்திரனுக்குத் திரும்புவதற்கான துணை உபகரணங்களை உருவாக்குவது என்று அனைத்தும் இதில் அடங்கும்.

நாசா ஏன் சொந்தமாக ஸ்பேஸ் சூட்களை உருவாக்கவில்லை?

நாசா ஏன் சொந்தமாக ஸ்பேஸ் சூட்களை உருவாக்கவில்லை?

தற்போதுள்ள ஸ்பேஸ்சூட், 40 ஆண்டுகளாக ஏஜென்சிக்கு சிறப்பாக வேலை செய்து வருகிறது என்று ISS இன் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மேலாளர்டினா கான்டெல்லா கூறியுள்ளார். அடுத்த தலைமுறை மிகவும் நெகிழ்வானதாகவும், பல்துறை மற்றும் நீடித்ததாகவும் இருக்கும். நாசா முதலில் சொந்தமாக சூட்களை உருவாக்க விரும்பியது. ஆனால், அந்த ஏஜென்சியின் ஆடிட்டர் இந்த வழக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி தாமதங்களை எதிர்கொள்கிறது என்று கூறிய பிறகு தொழில் பங்குதாரர்களுக்கு மாறத் தொடங்கியது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

Best Mobiles in India

English summary
NASA Awarded Next Generation Spacesuits Contract For ISS and Moon Mission To Two Companies : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X