Just In
- 7 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 8 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 9 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 9 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?
நேஷனல் ஏ ரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - நாசா (NASA) இன் எக்ஸ்பெடிஷன் 68 மிஷன் காரணமாக, இதுவரை திறந்த விண்வெளியில் சுமார் 256 முறைக்கும் மேல் விண்வெளி வீரர்கள் மிகவும் ஆபத்தான ஸ்பேஸ்வாக் நிகழ்வை மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஸ்பேஸ்வாக் நிகழ்வின் திக்திக் நிமிடங்களை வீடியோ பதிவாக நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

ISS இல் கோளாறு ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? எதற்காக ஸ்பேஸ்வாக் நடத்தப்பட்டது?
என்ன ஆனது? எதற்காக 256 முறை விண்வெளி வீரர்கள் திறந்த விண்வெளியில் ஆபத்தின் விளிம்பில் ஸ்பேஸ்வாக் (spacewalk) செய்ய அனுப்பப்பட்டார்கள்? ISS இல் கோளாறு ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? நாசா எதையாவது மறைக்கிறதா? Expedition 68 mission என்றால் என்ன? உண்மையிலேயே என்ன காரணத்திற்காக விண்வெளி வீரர்கள் (astronauts) திறந்த விண்வெளியில் ஸ்பேஸ்வாக் செய்ய வெளியில் அனுப்பப்பட்டனர் என்பதை பார்க்கலாம்.

எக்ஸ்பெடிஷன் 68 மிஷனுக்காக திறந்த விண்வெளியில் நடந்த விண்வெளி வீரர்கள்.!
எக்ஸ்பெடிஷன் 68 மிஷன் தொடர்பாக (Expedition 68 mission), விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்பேஸ்வாக் செய்து முடித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையம் ரோல்-அவுட் சோலார் அரேயை (iROSA) நிறுவுவதற்காக ஆபத்தான ஸ்பேஸ்வாக் நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.

ISS நிலையத்தின் ஸ்டார்போர்டு கட்டமைப்பில் என்ன நடந்தது?
ISS நிலையத்தின் ஸ்டார்போர்டு கட்டமைப்பில் 4A பவர் சேனலுக்கான மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த ஸ்பேஸ்வாக் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், 1B பவர் சேனலின் மின் அமைப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதை மீண்டும் இயக்க தேவைப்படும் வேலைகளை சரியாகச் செய்து முடிப்பதற்காக 2 விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்வாக் செய்ய அனுப்பப்பட்டனர்.

1B பவர் சேனல் கேபிள் லைன் வீரர்களால் துண்டிக்கப்பட்டதா?
இதைச் சரி செய்வதற்கு அவர்கள் 1B பவர் சேனல் அமைப்பில் இருக்கும் ஒரு மின்சார லைன் கேபிளைத் துண்டிக்க வேண்டியதிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி வீரர்கள் திறந்த விண்வெளியில், ஆபத்தைத் துச்சமாக நினைத்து மேற்கொண்ட அந்த ஸ்பேஸ்வாக் நிகழ்வை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளது.
நாசா பதிவிட்ட அந்த திக்திக் ஸ்பேஸ்வாக் நிமிடங்களை பார்ப்பதற்கு எதோ 3 ஹாலிவுட் திரைப்படங்களை ஒன்றாக பார்த்தது போன்றுள்ளது.

நாசா பதிவிட வீடியோவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
நாசா பதிவிட வீடியோ பதிவில், "இதை நாம்மால் சரிசெய்ய முடியுமா? ஆம், நம்மால் முடியும். விண்வெளி வீரர்கள் ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் @Space_Station இன் ஸ்டார்போர்டு டிரஸ் கட்டமைப்பில் ரோல்-அவுட் சோலார் அரேயை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர். 1B பவர் லைன் கேபிளையும் துண்டித்துள்ளனர். இப்போது ஒரு ஆற்றல் சேனலை அதன் இயக்க திறனில் 75%க்கு மீட்டமைத்துள்ளனர்." என்று நாசா பதிவிட்டுள்ளது.

7 மணி நேரத்திற்கும் மேலாக திறந்த விண்வெளியில் மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த 2 வீரர்கள் யார் தெரியுமா?
நாசாவின் எக்ஸ்பெடிஷன் 68 இன் விமானப் பொறியாளர்கள் ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் 7 மணி நேரம் 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 2:21 EST மணிக்கு அவர்களுடைய ஸ்பேஸ்வாக் நடையை முடித்துக் கொண்டனர்.
7 மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு விண்வெளி வீரர்களும் திறந்த விண்வெளியில் ஸ்பேஸ்வாக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் ஸ்பேஸ்வாக்கிங் ஆபத்தானது என்று கூறப்படுகிறது?

என்ன காரணத்தினால் ஸ்பேஸ்வாக் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது?
திறந்த விண்வெளியில் எதிர்பாராமல் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே பெரும் ஆபத்தாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு சிறிய விண்வெளி கல் அல்லது சிறிய தூசி கூட விண்வெளி வீரர்களின் உயிரிற்கு ஆபத்தானதாக முடியக்கூடும் என்பது ஒரு காரணம். அதேபோல், நீண்ட நேரம் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ஸ்பேஸ் சூட் உள் இருக்கும் போது நைட்ரஜன் உருவாக்குகிறது.
இது வீரர்களின் உடலின் வாயு முட்டைகளாக உருமாறி அவர்களின் உடலில் பாதிப்பை உருவாக்குகிறது.

அதிக நேரம் திறந்த விண்வெளியில் இருந்தால் மனித ரத்தம் கொதித்துவிடுமா?
இது தவிரத் திறந்த விண்வெளியில் மனித ரத்தம் அழுத்தத்தின் காரணமாகக் கொதிநிலைக்குச் சென்றுவிடவும் வாய்ப்புள்ளது.
சரியான அழுத்தத்தை ஸ்பேஸ் சூட்டில் கவனிக்கவில்லை என்றால், இது ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர, விண்வெளியில் மிதந்து தொலைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது.
எதிர்பாராத விபத்துகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதனால் ஸ்பேஸ்வாக் மிகவும் ஆபத்தான செயலக கருதப்படுகிறது.

இதுவரை எத்தனை வீரர்கள் ஸ்பேஸ்வாக்கின் போது இறந்துள்ளார்கள்?
விண்வெளிப் பயணத்தின் போது இதுவரை எத்தனை விண்வெளி வீரர்கள் மரணத்தைச் சந்தித்துள்ளனர் என்று தெரியுமா உங்களுக்கு?
மார்ச் 2021 நிலவரப்படி, ஐந்து வெவ்வேறு சம்பவங்களில், எதிர்பாராத விபத்துகளில் 15 அஸ்ட்ரோனட்ஸ் என்று அழைக்கப்படும் விண்வெளி வீரர்கள் மற்றும் 4 காஸ்மோனட்ஸ் என்று அழைக்கப்படும் விண்வெளி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 3 வீரர்கள் கர்மன் கோட்டிற்கு மேலே உள்ள விண்வெளியின் விளிம்பு வரை பறந்து இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ISS இல் நடைபெற்ற 256வது விண்வெளி நடைப்பயணமா இது?
சரி, இப்போது ISS இல் நடைபெற்ற ஸ்பேஸ்வாக் பயணத்திற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக, விண்வெளி நிலையத்தின் ஆற்றலை மேம்படுத்தவும், பராமரிக்கவும் இதுவரை சுமார் 256 ஸ்பேஸ்வாக் நடையை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இது ISS இன் 256வது விண்வெளி நடைப்பயணமாகும். ஆறு மாத கால அறிவியல் பயணத்தின் போது இந்த இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் இது இரண்டாவது ஸ்பேஸ்வாக் நடைப்பயணம் ஆகும்.

அடுத்த வீரர்கள் மீண்டும் ஸ்பேஸ்வாக் செய்ய போவது எப்போது தெரியுமா?
இந்த வெற்றிகரமான விண்வெளி நடைப்பயணத்திற்குப் பிறகு, அடுத்த திட்டமிடப்பட்ட ஸ்பேஸ்வாக் நிகழ்வு வரும் டிசம்பர் 19 ஆம் தேதி திங்கள் அன்று போர்ட் டிரஸ்ஸில் உள்ள 4A பவர் சேனலில் iROSA ஐ நிறுவ நடத்தப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
மொத்தம் ஆறு திட்டமிடப்பட்ட iROSAக்களில் வீரர்கள் இப்போது தான் 4வது iROSA-வை நிறுவியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இன்னும் 2 பேனல்களை விண்வெளி வீரர்கள் நிறுவ வேண்டியதுள்ளது. இதற்காக அவர்கள் மீண்டும் ஸ்பேஸ்வாக் செய்ய வேண்டியதுள்ளது.

ஆபத்தென்று தெரிந்தும் வீரர்கள் வெளியில் செல்ல காரணம் என்ன?
எக்ஸ்பெடிஷன் 68 பணிக்கு இந்த சோலார் அரேக்கள் ஏன் முக்கியமானவை? எதற்காக இவ்வளவு ஆபத்தைத் தாண்டி விண்வெளி வீரர்கள் இந்த பேனல்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும்?
இது ISS இன் மின் உற்பத்தித் திறனை 30 சதவீதம் வரை அதிகரிக்க உதவும் என நாசா விளக்கம் அளித்துள்ளது. இதன் விளைவாக, நிலையத்தின் மொத்த மின்சாரம் 160 கிலோவாட்டிலிருந்து 215 கிலோவாட்டாக அதிகரிக்கும் என்பதனால் தான் இந்த முயற்சி பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

எதற்காக இந்த எக்ஸ்பெடிஷன் 68 மிஷன் நடத்தப்படுகிறது?
எக்ஸ்பெடிஷன் 68 பணியானது செப்டம்பர் 2022 இல் தொடங்கியது மற்றும் மார்ச் 2023 இல் முடிவடையும், இதில் உயிரியல், புவி அறிவியல், மனித ஆராய்ச்சி, இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி ஆய்வுகள் அடங்கும். நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்குப் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையைத் தாண்டி மனித விண்வெளிப் பயணத்தைத் தொடர்வதற்கான அடித்தளத்தை இந்த கண்காணிப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470