அந்த ஒரு நொடி.. 286 நாட்கள் தவம்.. பூமியே வியந்த வருகை.. சுனிதா வில்லியம்ஸ் பயணம்.. வெற்றிகரமாக முடிந்தது!
உலகமே இவரது வருகைக்கு எதிர்பார்த்திருந்த நிலையில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams Return To Earth). சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த அவர் இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு டிராகன் விண்கலன் மூலம் புளோரிடா மாகாணத்தின் அருகில் இருக்கும் கடற்கரையில் தரையிறங்கினார். இவருடன் புட்ச் வில்மோர் பூமியை அடைந்தார்.
இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு இவர்கள் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமி நோக்கி புறப்பட்டனர். இவர்களது பயணம் 17 மணிநேரமாக தொடர்ந்தது.

விண்வெளி பயணம்: 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து அட்லஸ் வி ராக்கெட் மூலம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டனர். இந்த ஸ்டார்லைனர் குழு விமான சோதனையானது, 10 நாளுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது.
ஜூன் 6ஆம் தேதி இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆனால், டாக்கிங் செயல்முறைக்கு உதவும் 28 த்ரஸ்டர்களில் 5 செயல்படவில்லை. இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலைய பொறியாளர்கள் த்ரஸ்டர்களை சரி செய்தனர். இதை அடுத்து ஸ்டார்லைனர் விண்கலம் டாக்கிங்கை முடித்தது. இந்த த்ரஸ்டர்கள் கோளாறு மற்றும் ஹீலியம் லீக் ஆகியவை திட்டமிட்டப் பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தியது.
திரும்புவது ஒத்திவைப்பு: நாசாவானது, ஜூன் 18ஆம் தேதி அன்று ஸ்டார்லைனர் குழு பூமிக்கு திரும்புவது ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தது. இந்த தொழில்நுட்ப கோளாறு தொடர்ந்து நீடித்ததால், ஜூலை 2ஆம் அன்று மற்றொரு அறிவிப்பு வெளியானது. அதில், இந்த தொழில்நுட்ப கோளாறை சரிய செய்யும் பணிகள் 45 நாட்களுக்கு மேல் நீடிக்காது. அதன்பிறகு அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி நாசா மற்றும் போயிங் நிறுவனங்கள், ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. இதனால், ஸ்டார்லைனர் பயணத்துக்கு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நேரம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் தொடர்ந்து இருக்க வேண்டி இருந்தது.
செப்டம்பர் 7ஆம் தேதி நியூ மெக்ஸிகோவில் க்ரூவ் மெம்பர்கள் இல்லாமலேயே ஸ்டார்லைனர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சோதனையை போலவே ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆகவே, செப்டம்பர் 28ஆம் தேதி இரண்டு இருக்கைகளுடன் க்ரூவ் 9 ஏவப்பட்டது.
இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூவ் டிராகன் விண்கலம் அது மூலம் அனுப்பப்பட்டது. இதன்பிறகு நவம்பர் 12ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் மாதத்தின் இடைப்பட்ட நாட்களில் க்ரூவ் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்ப இருப்பதாக நாசா அறிவித்தது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது உறுதியானது.

பூமியை நோக்கிய பயணம்: இவர்கள் பூமிக்கு திரும்புவது 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் இது உறுதி செய்யப்பட்டது. மார்ச் 18ஆம் தேதி க்ரூவ் 9 (டிராகன் விண்கலம்) இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 17 மணி நேர பயணத்துக்கு பிறகு மெக்சிகோ வளைகுடாவில் இருக்கும் புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவரது பயணம் 286 நாட்களுக்கு பிறகு முடிந்தது. இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு டிராகன் விண்கலன் பூமிக்கு வந்தது. அந்த நொடியில் உலகமே நிம்மதியடைந்தது.
Image Credits: NASA


Click it and Unblock the Notifications








