Just In
- 3 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 4 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- News
11 கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மேகநாத ரெட்டிக்கு உதயநிதி இலாகாவில் பொறுப்பு!
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
வரலாற்று சிறப்புமிக்க ஸ்பேஸ்எக்ஸ் விண்கல ஏவுதல் நிகழ்வு! வித்தியாசமாக கொண்டாடிய நாசா வீரர்..
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் தனது வரலாற்று சிறப்புமிக்க ஏவுதல் நிகழ்வுக்கு முன்னதாக, நாசா விண்வெளி வீரர் பாப் பெஹன்கென் தனது சொந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதன் மூலம் வாழ்வின் சிறப்பான அந்த நாளுக்காக தயாரானார் . ஆனால் தான் சுற்றுப்பாதையில் பயணிக்கவுள்ள ஃபால்கன் 9 ராக்கெட்டின் அளவிற்கும் இதற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை.

புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை (மே 27) மாலை 4:33 மணிக்கு EDT (2033 GMT), பெஹன்கென் மற்றும் அவரது சக விண்வெளி வீரரான டக் ஹர்லி இருவரையும் டெமோ-2 மிஷன் மூலம் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக ஏவுதலுக்கு 17 நிமிடங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. சனிக்கிழமையன்று (மே 30) திட்டமிடப்பட்ட அவர்களின் இரண்டாவது ஏவுதல் முயற்சி பலனளித்தால், நாசா விண்வெளி வீரர்கள் வணிக விண்கலத்தில் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்கு பறந்தது இதுவே முதல் முறையாகும். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு விண்வெளி வீரர்கள் அமெரிக்காவிலிருந்து சுற்றுப்பாதைக்கு பயணிக்கவுள்ளனர்.

பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ஏவுதல் நிகழ்வின் முன்கூட்டிய தயாரிப்புகளின் சலசலப்பில் இருந்து சற்றே ஓய்வு எடுத்து, பெஹன்கென் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 26) கடற்கரைக்கு சென்று ஒரு மாதிரி ராக்கெட்டை ஏவினார். அன்று மாலை, புளோரிடாவின் அட்லாண்டிக் கடற்கரையில் மணல் ஏவுதளத்திலிருந்து எஸ்டெஸ்-ன் அமேசான் மாடல் ராக்கெட் விண்ணில் ஏவுவதை போல தோன்றும் புகைப்படத்தை அவர் ட்வீட் செய்தார்.
|
எஸ்டெஸின் கூற்றுப்படி, சுமார் 30 அங்குலங்கள் (76 சென்டிமீட்டர்) உயரம் கொண்ட இந்த அமேசான் மாடல் ராக்கெட், 650 அடி (200 மீட்டர்) உயரத்தை எட்டும். ஒப்பீட்டளவில், 229.6 அடி (70 மீ) உயரம் கொண்ட ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9 ராக்கெட் பூஸ்டர், பூமிக்கு மேலே 150 மைல்களுக்கு (240 கிலோமீட்டர்) அப்பாலும் பறக்க முடியும். இது பெஹன்கனின் பொம்மை ராக்கெட்டை விட 1,000 மடங்கு அதிகமாகும்.

ஆனால் பெஹன்கென் விண்வெளிக்கு செல்வதற்கு முந்தைய தனது கடைசி நாள் முழுவதையும் பூமியில் மணலுடன் மட்டுமே விளையாடவில்லை. " நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் டெமோ மிஷன் 2 தொடங்குவதற்கு முந்தைய நாள், ஏவுதலுக்கு முந்தைய செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய, எனது ஏவுதல் செயல்பாட்டு நுட்பத்தை மேம்படுத்தவும், சர்வதேச விண்வெளி மையத்துடன் உடன் மேலும் ஒரு இணைப்பை பயிற்சி செய்யவும் மற்றும் பூமிக்கு திரும்பும் பாதையை மறுபரிசீலனை செய்யவும் நேரம் எடுத்துக்கொண்டேன்" என்று பெஹன்கென் ட்வீட் செய்தார்.மேலும் ஸ்பேஸ்எக்ஸின் மெய்நிகர் க்ரூ டிராகன் டாக்கிங் சிமுலேட்டரைக் குறிப்பிட்டு "நாங்கள் தயார்!" என உற்சாகமூட்டினார்.

முன்னதாக செவ்வாயன்று, பெஹன்கென் மற்றும் ஹர்லி இருவரும் நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் மற்றும் துணை நிர்வாகி ஜிம் மோஹார்ட் ஆகியோருடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். "ஜிம் பிரைடென்ஸ்டைனும் நானும் பெஹென்கென் மற்றும் ஹர்லி ஆகியோருக்கு, வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்க ராக்கெட்டில் விண்ணில் செல்லும் முதல் விண்வெளி வீரர்களாகும் முன்னர் ஒரு கடைசியாக கைகுலுக்கிக்கொண்டோம்" என்று மோஹார்ட் ட்வீட் செய்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470