நாசாவின் வியப்பூட்டும் அறிக்கை - ப்ளூட்டோ கிரகத்திலும் தண்ணீர்..!

|

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுப்பிடிக்கப்பட்டது விண்வெளி ஆராய்ச்சியின் மாபெரும் மைல்கல்களில் ஒன்றாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

செவ்வாயில் முதல்ல 'எலி', அப்புறம் தான் தண்ணீர்..!

அதை தொடர்ந்து தற்போது ப்ளூட்டோ கிரகத்திலும் நீல வானம் மற்றும் நீர் இருக்கிறது என்ற வியப்பூட்டும் அறிக்கை ஒன்றை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா..!

நாசா :

நாசா :

கடந்த வெள்ளி அன்று நாசா, 'ப்ளூட்டோ'வின் முதல் கலர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் :

நீர் :

அந்த புகைப்படத்தில் இருந்து கிரகத்தில் உறைந்த நிலையில் நீர் இருக்கக்கூடும் என்று நாசா கூறியுள்ளது.

நீல வானம் :

நீல வானம் :

மேலும், ப்ளூட்டோ கிரகமானது, பூமியின் வானத்தை போன்றே நீல வானம் கொண்டு சூழப்பட்டுள்ளது என்றும் நாசா கூறியுள்ளது.

குளிர்ச்சி நிலை :

குளிர்ச்சி நிலை :

ப்ளூட்டோ கிரகம் மிகுந்த குளிர்ச்சி நிலையில் உள்ளதால்(அதாவது மைனஸ் 220 டிகிரி) அங்கு இருக்கும் நீரானது நிச்சயம் உறைந்த நிலையில் தான் இருக்கும் என்கிறது நாசா.

சிவப்பு நிறம் :

சிவப்பு நிறம் :

உறைந்த நிலையில் இருக்கும் நீரானது ஏன் மிகவும் சிவந்த நிறத்தில் உள்ளது என்பதை பற்றி எந்த கருதும் இதுவரை தெரியவில்லை என்றும் நாசா விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கு முன்னால் :

சூரியனுக்கு முன்னால் :

சுமார் 2 மில்லியன் கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருந்து சூரியனுக்கு முன்னால் துல்லியமாக ப்ளூட்டோ கிரகம் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

நியூ ஹாரிசான் :

நியூ ஹாரிசான் :

இந்த புகைப்படங்களையெல்லாம் எடுத்து அனுப்பியது நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலம் (New Horizon) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஒப்பீடு :

ஒரு ஒப்பீடு :

உலகத்தின் அளவோடு ப்ளூட்டோ மற்றும் சாரோன் (Charon) கிரகம்..!

கண்டுபிடித்தவர் :

கண்டுபிடித்தவர் :

க்லைட் தாம்பாக் (Clyde Tombaugh)- இவர் தான் 1931-ஆம் ஆண்டு ப்ளூட்டோ கிரகத்தை கண்டுபிடித்தவர்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : நாசா, டெலிகிராஃப்.கோ.யூகே.

Best Mobiles in India

English summary
ப்ளூட்டோ கிரகத்திலும் நீர் ஆதாரம் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X