ரூ.15 லட்சம் பரிசு அறிவித்த நாசா: இதைமட்டும் செய்தால் போதும்., ஆகஸ்ட் 17 வரை டைம் இருக்கு!

|

நிலவில் மனிதர்கள் பயன்படுத்துவதற்கான கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா

2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனித கழிவு மேலாண்மை பிரச்சனையை தீர்க்க புதுமையான தீர்வுகளை கண்டறியும் முயற்சியும் நாசா சந்திர லூ சவாலை அறிமுகப்படுத்தியது.

புது திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயர்

புது திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயர்

2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இந்த பயணமானது விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்க இருக்கும் நாசாவின் புது திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்

கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்

முந்தைய கால விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்களின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்களுக்கு தீர்வு காண நாசா திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ ஈர்ப்பு விசை

மைக்ரோ ஈர்ப்பு விசை

மைக்ரோ ஈர்ப்பு விசை மட்டுமின்றி எதிர்காலத்தில் சந்திர லேண்டர் விண்கலத்தில் நிலவின் ஈர்ப்பு விசை சக்தியிலும் பயன்படுத்தக் கூடிய கழிவறையை வடிவமைக்க நாசா அழைப்பு விடுத்திருக்கிறது.

முதல் பரிசாக ரூ.15 லட்சம்

இதை வடிவமைத்து அனுப்புபவர்களுக்கு முதல் பரிசாக இந்திய மதிப்பில் 15 லட்சம், இரண்டாம் பரிசு 7 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் பிரிவில்

18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் பிரிவில்

விண்வெளி கழிப்பறைகள் ஏற்கனவே இருந்தபோதிலும், அமெரிக்க விண்வெளி நிறுவனம் விண்வெளியிலும் சந்திரனின் ஈர்ப்பு விசையிலும் பயன்படுத்தும் வகையிலான மிகவும் சுருக்கமான, திறமையான கண்டுபிடிப்பு ஒன்றை தேடுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம். அதேபோல் அனைவரும் பங்கேற்று தங்களது திறன்களை காண்பிக்கலாம்.

Best Mobiles in India

English summary
NASA announce Lunar Loo Challenges for human waste disposal concepts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X