விண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..

|

இந்த வாரம் 2011க்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து விண்வெளி வீரர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோதனை ஏவுகலன் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்துள்ளனர்.

லை 4:33 மணிக்கு (20:33 ஜிஎம்டி), மூத்த நாசா விண்வெளி

கடந்த புதன்கிழமை (மே 27) மாலை 4:33 மணிக்கு (20:33 ஜிஎம்டி), மூத்த நாசா விண்வெளி வீரர்களான பாப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கான் 9 ராக்கெட் மூலம் தூக்கிச் செல்லும் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் வாகனத்தில் இணை தளபதிகளாக பயணித்துள்ளனர்.

டெமோ -2 என அழைக்கப்படும்

டெமோ -2 என அழைக்கப்படும் இந்த மிஷனில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்துள்ளனர். மே 28 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ள அவர்கள், மேலும் ஒன்று முதல் நான்கு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!

2011 இல் முடிவடைந்த பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து

நாசாவின் விண்கல திட்டம் 2011 இல் முடிவடைந்த பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து சுற்றுப்பாதையில் செல்லும் மனிதர்கள் கொண்ட முதல் மிஷன் டெமோ -2 ஆகும். உண்மையில் அந்த இறுதி விண்கல பயணத்திலும் (எஸ்.டி.எஸ் -135), தற்போதைய மிஷனிலும் ஹர்லி இருப்பது மேலும் சிறப்பானது.

ஏவுதலுக்கு ஒரு வாரம்

விண்வெளி வீரர்கள் ஏவுதலுக்கு ஒரு வாரம் முன்னதாக மே 20 அன்றே கென்னடி விண்வெளி மையத்திற்கு வந்து, விண்வெளிக்குச் செல்வதற்கு விடாமுயற்சியுடன் தயாராகினர்.


"அமெரிக்க மண்ணில் இருந்து அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் அமெரிக்க ராக்கெட்டுகளில் ஏவுவதற்கான குழுவில் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் இப்போது அமெரிக்கா முழுமைக்குமான ஒரு பிரகாசமான ஒளியாக உள்ளீர்கள். நீங்கள் செய்த அனைத்திற்கும், நீங்கள் செய்யவிருக்கும் அனைத்திற்கும் மிக்க நன்றி. "என்று நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் மே 20 அன்று ஹர்லியும் பெஹன்கனும் கென்னடி விண்வெளி நிலையத்திற்கு வந்தபின்னர் கூறினார்.

அதன் வரலாற்று முக்கியத்து

இந்த ஏவுதல், அதன் வரலாற்று முக்கியத்துவத்தின் காரணமாக, கென்னடிக்கு பெக்கன் மற்றும் ஹர்லியுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை காண ஏராளமான கூட்டத்தை ஈர்க்கும். இருப்பினும், டெமோ -2 நிலையான சூழ்நிலைகளில் விண்ணில் செலுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, பயணக் கட்டுப்பாடுகள், சமூக தொலைதூர வழிகாட்டுதல்கள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் பெரும்பாலான நாசா ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வழிவகுத்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் இது விண்ணில் செலுத்தப்படுகிறது.

வைரஸ் தொற்றுநோயை சுற்றியுள்ள

கொரோனா வைரஸ் தொற்றுநோயை சுற்றியுள்ள கவலைகள் காரணமாக, பிரிட்ன்ஸ்டைன் ஏவுதலுக்காக வீட்டிலேயே தங்கி அதை நேரலை வாயிலாக பார்க்கும்படி மக்களை வலியுறுத்தியிருந்தார் (நாசா டிவியில் ஆன்லைனில் நேரடியாகப் பார்க்க முடியும்).


"இந்த விண்கலன் ஏவுதல் நிகழ்வில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் மக்களைக் கேட்கிறோம், ஆனால் வீட்டிலிருந்து அவ்வாறு செய்ய வேண்டும். கென்னடி விண்வெளி மையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம், "என்று அவர் சமீபத்திய உரையில் கூறினார். உண்மையில் விண்கலன் ஏவுதல் நடைபெறுவதற்கு மறுநாள் வியாழக்கிழமை (மே 28) வரை கென்னடி விண்வெளி நிலையத்தில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.


க்ரூ டிராகனின் ஏவுதலுக்கு ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா சம்மதம் தெரிவித்த நிலையில், திங்களன்று (மே 25), டெமோ -2 மிஷன் குழு, பால்கன் 9 ராக்கெட் மற்றும் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் ஆகியவற்றை இறுதி ஏவுதலுக்கான தயார்நிலையில் உள்ளதை மதிப்பாய்வு செய்ய விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் வானிலை உள்ளது.

இவற்றிற்கெல்லாம் பின்னர் வானிலை உள்ளது. யு.எஸ். விமானப்படை 45 வது வானிலை படைகளின் படி, மே 27 அன்று விண்கலம் ஏவுதலுக்கு 40% நல்ல நிலைமைகள் இருப்பதை முன்னரே கணித்திருந்தது. நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் இந்த வாரம் விண்கலன் ஏவுதலை நிகழ்த்த முடியாவிட்டால், அடுத்த முயற்சிக்கு அவர்கள் மே 30 வரை காத்திருக்க வேண்டுயிருந்திருக்கும்

Best Mobiles in India

English summary
NASA and SpaceX to launch astronauts into orbit this week on Crew Dragon spacecraft: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X