Home
News

கூரைக்குள் மழை.. நாமக்கல் ஹோட்டலில் செயற்கை மழைச்சாரல்.. சூட்டை தணிக்க புது மிஸ்டிங் தொழில்நுட்பம்..

நாமக்கல் (Namakkal) அருகே ஒரு தனியார் உணவு விடுதி வெப்பத்தால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களை குளிர்விக்கும் வகையில் செயற்கையாக மழைச்சாரலை உருவாக்கும் புதிய மிஸ்டிங் சிஸ்டம் (Misting System Technology) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை குளிர்விக்கும் வகையில், செயற்கையாக மழைச்சாரல் உருவாக்கப்பட்டு, தெளிக்கும் மிஸ்டிங் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களை குளிர்விக்க அனுமதிக்கிறது.

கூரைக்குள் மழை.. நாமக்கல் ஹோட்டலில் செயற்கை மழைச்சாரல்.. மிஸ்டிங் டெக்

செயற்கையாக கூரைக்குள் மழைச்சாரல்.. புது மிஸ்டிங் சிஸ்டம் தொழில்நுட்பம் (Namakkal Misting Cooling System Technology):
மிஸ்டிங் சிஸ்டம் என்றால் என்ன? நீளமான குழாய்களில் தண்ணீரை பாய்ச்சி, 1 அடி இடைவெளியில் ஸ்பிரேயிங் குழாய்கள் அமைத்து, அது வழியாக தண்ணீரை மிஸ்ட் புகை போன்ற சிறிய துளி மழைச்சாரலாக பொழிவது தான் மிஸ்டிங் கூலிங் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது. இது சீலிங் ஃபேன் உயரத்தில் இருந்து கீழே நடக்கும் மக்கள் மீது தெளிப்பது போல உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களில் விழும் பனிமூட்டம் போல இந்த மிஸ்டிங் சிஸ்டம் செயற்கையாக மிஸ்ட் போன்ற அமைப்பை ஒரு கூரைக்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பகல் நேரத்தில் வாடிக்கையாளர்கள் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதாகவும், இரவு நேரங்களில் அனல் காற்றில் இருந்து இளைப்பாறுகிறார்கள் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இப்போது இந்த மிஸ்டிங் சிஸ்டத்தால் நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஹோட்டல் மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக, இந்த ஹோட்டல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதினால், அவ்வழி செல்லும் வாகன ஓட்டுனர்களை பெரிதாக கவர்ந்துள்ளது என்றும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மிஸ்டிங் சிஸ்டத்தை அமைக்க 2 லட்சம் வரை செலவானதாக ஹோட்டல் உரிமையாளர் கூறியிருக்கிறார்.

கூரைக்குள் மழை.. நாமக்கல் ஹோட்டலில் செயற்கை மழைச்சாரல்.. மிஸ்டிங் டெக்

ஒரு நாளுக்கு 300 லிட்டர் தண்ணீர் தேவையா? அம்மாடியோவ்.!
இந்த மிஸ்டிங் சிஸ்டத்தை நாள் முழுக்க செயல்பாட்டில் வைக்க சுமார் 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுத்துவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வெப்பத்தை தணிக்க இந்த ஹோட்டல் நிர்வாகம் எடுத்துள்ள முயற்சி பாராட்டிற்குரியது என்றாலும், ஒரு நாளுக்கு 300 லிட்டர் தண்ணீர் செலவாவதை ஏற்றுக்கொள்ள மனம் மருக்கிறது.

பெங்களூர் போன்ற ஊர்களில் மக்கள் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கவே போராடும் நிலையில், ஒரு நாளுக்கு சுமார் 300 லிட்டர் தண்ணீர் மழைச்சாரலாக வீணாகிறது என்பதே மறுபக்க உண்மையாக இருக்கிறது. இதை நினைக்கையில், தண்ணீரை மறுசுழற்சி செய்ய கூடிய வகையில் இயங்கும் தொழில்நுட்பத்தை ஹோட்டல் நிர்வாகம் தேர்வு செய்திருந்தால் முழுமையான பாராட்டை பெற்றிருக்க முடியும் என்பது சில மக்களின் கருத்தாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் பல ஏர் கூலிங் தொழில்நுட்பங்கள் எல்லாம் பயன்படுத்த கிடைக்கின்றன என்பதே உண்மையாகும். தண்ணீரை வீணடிக்காமல், மறுசுழற்சி செய்து, ஒரே தண்ணீரை பல மாதங்களுக்கு வீணாகாமல், பாதுகாப்பான முறையில் ஏர் கூலிங் செய்ய அனுமதிக்கும் தொழில்நுட்பங்களும் இப்போது பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. குறிப்பாக பெரிய இடங்களில் தனியாக ஒரு கூலிங் சிஸ்டத்தை அமைத்து, பாரிய இடத்தை குறைந்த செலவில் குளிர்விக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Namakkal Hotel Introduced Misting Cooling System Under Roof Attracts Highway Roadside Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X