Home
News

இந்தியா: வெடித்து சிதறிய சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன்- உஷார்.!

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன் வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சியோமி நிறுவனம், அண்மையில் பல புதிய தயாரிப்புகளை சியோமி பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம், பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன் மாடல்களை இந்திய சந்தையில் இறக்குமதி செய்தது. அண்மையில் வெளியான சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன் ஆன்லைன் விற்பனையில் அதிக யூனிட்களை விற்பனை செய்து சாதனையும் படைத்தது.

நல்கொண்டா

நல்கொண்டா

நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷாலிகௌரராம் பகுதியில், சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன் வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்ச் ஆப் ஆன ரெட்மி 5ஏ

சுவிட்ச் ஆப் ஆன ரெட்மி 5ஏ

ஷாலிகௌரராம் பகுதியில் வசிக்கும் ராவுல சுரேஷ் என்பவர் நான்கு மாதத்திற்கு முன்பு நல்கொண்டாவில் உள்ள ஒரு முன்னணி ரீடைல் விற்பனையாளர் கடையில், சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன் வாங்கி இருக்கிறார். சனிக்கிழமை சுரேஷின் ஸ்மார்ட் போன் திடீரென சுவிட்ச் ஆப் ஆனது, ஆன் செய்ய முயற்சித்தும் மொபைல் ஆன் ஆகவில்லை.

ஸ்மார்ட் போன் வெடித்தது

ஸ்மார்ட் போன் வெடித்தது

சுவிட்ச் ஆப் ஆனா தனது ரெட்மி 5ஏ ஸ்மார்ட் போன்னை சரி செய்வதற்காக அருகில் இருந்த மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றிருக்கிறார். தனது சட்டை பையில் இருந்து ஸ்மார்ட் போன்னை எடுத்து கடையில் கொடுத்த சில வினாடியில், அவரின் ஸ்மார்ட் போன் வெடித்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் சியோமி பயனர்களை அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது.

 சியோமி ரெட்மி 4ஏ

சியோமி ரெட்மி 4ஏ

சியோமி ஸ்மார்ட் போன்கள் வெடித்துச் சிதறும் சமத்துவம் இதுவே முதல் முறை அல்ல. இதற்கு முன்பு ஷம்ஷபாத் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட் போன் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nalgonda man escapes from Redmi 5A phone explosion : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X