இன்காக்னிட்டோ மோடு : ஏமாத்திட்டாங்க மக்களே.!!
இண்டர்நெட் உலகில் நிறைந்திருக்கும் அளவில்லா தரவுகளில் நன்மை மற்றும் தீமை இரண்டும் அடங்கியுள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வர். பொதுவாக நம்மவர்கள் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அதிஸ் இருக்கும் அனைத்தும் நமக்கு முழுமையாகத் தெரிவதில்லை, எனினும் தினமும் எதையாவது கற்று கொண்டே தான் இருக்கின்றோம்.
இண்டர்நெட்டில் சில ரகசிய தேடல்களை மேற்கொள்ள இதுவரை நாம் பயன்படுத்திய இன்காக்னிட்டோ குறித்த சில தகவல்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம். இன்காக்னிட்டோ மோடு குறித்த இந்தத் தகவல்கள் இந்த அம்சம் குறித்த பார்வையை மாற்றிவிடும்.
இன்காக்னிட்டோ மோடு குறித்த முழுமையான தகவல்களை விரிவாக ஸ்லைடர்களில் பாருங்கள்..

01
இண்டர்நெட்டில் நம்மால் மறைந்திருக்கவே முடியாது. ரகசியமாக பிரவுசிங் செய்வதால் நீங்கள் தேடுவதை யாரும் பார்க்க முடியாது என்பது எல்லாமே பொய் அல்லது மூடநம்பிக்கை எனலாம்.

02
உண்மையில் இன்காக்னிட்டோ மோடு பயன்படுத்தும் போது உங்களது பிரவுசிங் தகவல்கள் ஏதும் லோக்கல் டிரைவினில் பதிவாகாது. ஆனால் உங்களது இண்டர்நெட் சேவையை கண்காணிப்பவர்களால் உங்களது பிரவுசிங் தகவல்களை பார்க்க முடியும்.

03
இன்காக்னிட்டோ மோடில் நீங்கள் மேற்கொள்ளும் பதிவிறக்கங்கள் உங்களது லோக்கல் டிரைவினில் அப்படியே இருக்கும். இன்காக்னிட்டோ மோடினை
விட்டு வெளியேறினாலும் பதிவிறக்கம் செய்தவை அப்படியே இருக்கும்.

04
இன்காக்னிட்டோ என்றால் மறைந்திருத்தல் என்றாலும் முழுமையாக மறைந்திருக்க முடியாது. கார்ப்பரேட்களின் கண்காணிப்பு குழுவினரால் நீங்கள் பயன்படுத்திய இணைய முகவரிகளைப் பயன்படுத்த முடியும். நீங்கள் பதிவு செய்த தரவுகளை மறைக்க முடியும் ஆனால் அவை கண்காணிக்கப்படுவதை நிறுத்த முடியாது.

05
இன்காக்னிட்டோ மோடு அல்லது பிரைவேட் பிரவுசிங்கில் எவ்வித கிளிட்ச் (பிழை) என்றாலும் உங்களது செஷன்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகின்றன. பெரும்பாலான கிளிட்ச் உங்களது பிரவுசிங் செஷன்களை உளவு பார்க்கலாம்.

06
இன்காக்னிட்டோ மோடினை தனியார் இண்டர்நெட் மையங்களில் பயன்படுத்தலாம். முக்கியமாக உங்களது தனிப்பட்ட தரவுகள் அல்லது முக்கிய தரவுகளை பதிவு செய்ய நேரும் சேவைகளுக்கு இன்காக்னிட்டோ மோடினை சில நிமிடங்கள் பயன்படுத்தலாம்.

07
உங்களது கணினி இல்லாமல் வேறொருவர் கணினியை பயன்படுத்த நேரிடும் போது இன்காக்னிட்டோ மோடு பயன்படுத்தவது நல்லது.


Click it and Unblock the Notifications