Just In
- 42 min ago
2000 ஆண்டுகள் பழமையானது: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்.!
- 2 hrs ago
இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!
- 6 hrs ago
அறிமுகமானது மோட்டோ ஜி52ஜே 5ஜி: 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை இதுதான்!
- 6 hrs ago
இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!
Don't Miss
- Lifestyle
எந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு &இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் தெரியுமா?
- Movies
பான் மசாலா விளம்பரத்தில் மகேஷ் பாபு.. மொத்த மானத்தையும் வாங்கும் நெட்டிசன்கள்.. இப்படி ஆகிடுச்சே!
- News
ஆசையாக சென்ற சுற்றுலா.. ஆபத்தான மூணாறு பள்ளத்தில் விழுந்த கார் - தாய் மகன் உயிரிழந்த பரிதாபம்
- Finance
வரலாற்று சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு என்ன தெரியுமா..?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!
- Sports
"அது நடக்கவில்லை என்றால் ஓய்வு பெறுவேன்".. விராட் கோலியின் தடாலடி முடிவு.. விமர்சனங்களுக்கு பதிலடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன நடக்குது?- வானில் இருந்து விழுந்த மர்ம உலோக பந்து: அடுத்தடுத்து மூன்று இடத்தில் பதற்றம்- இம்முறை குஜராத்!
குஜராத்தின் மூன்று பகுதிகளில் மர்ம விண்வெளி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று வியாழன் மாலை 4.45 மணியளவில் ஐந்து கிலோ எடையுள்ள முதல் பெரிய கருப்பு உலோக பந்து பலேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காம்போலாஜ் மற்றும் ராம்புராவிலும் வானத்தில் இருந்து பொருட்கள் விழுந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா
நேற்று (மே 12) மாலை ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பாலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா ஆகிய மூன்று இடங்களில் விண்வெளியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் விழுந்தன. இதையடுத்து கிராம மக்கள் ஆர்வத்துடன் இதை காண முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தடய அறிவியல் ஆய்வக நிபுணர்களை அழைத்து விசாரணையை தொடங்கியது.

ஐந்து கிலோ எடையுள்ள உலோக பந்து
நேற்று (மே 12) மாலை சுமார் 5 மணியளவில் பலேஜில் என்ற பகுதியில் ஐந்து கிலோ எடையுள்ள முதல் பெரிய கருப்பு பந்து விழுந்தது. இதைதொடர்ந்து காம்போலாஜ் மற்றும் ராம்புரா பகுதியில் இதேபோன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து பகுதி ஒவ்வொன்றுக்கும் 15 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறது. இதையடுத்து கிராம மக்கள் காவல்துறையை அழைத்து தகவலை குறிப்பிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

செயற்கைக்கோள் குப்பைகளாக இருக்கலாம் என கணிப்பு
குஜராத் மாநிலம் ஆன்ந்த் மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திடம் கூறுகையில், இந்த உலோக பந்தானது செயற்கைக்கோள் குப்பைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்டார். முதல் பந்து மாலை 4.45 மணியளவில் விழுந்தது அடுத்த சிறிது நேரத்தில் மற்ற இரண்டு இடங்களில் உலோக பந்துகள் விழுந்தன., காம்போலாஜில் ஒரு வீட்டின் மீது இந்த பந்து விழுந்துள்ளது, பிற இரண்டு பகுதிகளிலும் திறந்த வெளி பகுதிகளில் விழுந்திருக்கிறது. இது என்ன வகையான விண்வெளி பந்துகள் என்பது தற்போது வரை தெரியவில்லை, ஆனால் கிராம வாசிகள் தகவலின்படி இது வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

என்னவாக இருக்கக்கூடும் என்பதை கண்டறிய முயற்சி
விசாரணையை துரிதப்படுத்த எஃப்எஸ்எல் நிபுணர்கள் குழுவை மாவட்ட காவல்துறை வரவழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்எஸ்எல் விசாரணை நடத்தி கூடுதல் விவரங்களை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எஃப்எஸ்எல் அறிக்கை வரும் வரை காத்திருக்கப்படும் எனவும் அதிகாரிகளும் பொருட்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கண்டறிய முயற்சித்து வருவதாக ராஜ்ஜியன் குறிப்பிட்டார்.
|
முன்னதாக இதேபோன்ற ஒரு மர்ம பொருள்
அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிராவில் வானத்தில் இருந்து இதேபோன்ற பொருட்கள் விழுந்தது. மகாராஷ்டிராவில் வானத்தில் இருந்து விழுந்த 3 மீட்டர் உலோக வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை தெஹ்சிலின் பவன்பூர் கிராமத்தில் குண்டு போன்ற பொருள் ஒன்றும், 3 மீட்டர் அளவிலான உலகோம் சிண்டேவாஹி தாலுகாவில் உள்ள லட்போரி கிராமத்திலும் கண்டுபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் இருந்து ஒரு உலோக வளையம் மற்றும் குண்டு போன்ற உருளை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து நீண்ட நேரம் ஒளியுடனான ஒரு மர்ம பொருள் பயணிக்கும் வீடியோ காட்சியும் பெரிதளவு வைரலானது.
|
சுமார் 3 மீட்டர் அளவுள்ள ரிங்
சிந்தேவாஹி கிராமத்தில் 3 மீட்டர் வளையம் ஒன்று கிடப்படதாக தகவல் கிடைத்தது. அந்த பொருள் மிகவும் சூடாக இருந்தது, வானத்தில் இருந்து விழுந்தது போல் அந்த பொருள் இருந்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை மற்றொரு கிராமத்தில் இருந்து ஒரு உருளையான குண்டு போன்ற பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என சந்திராபூர் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் ஏஎன்ஐ செய்தித் தளத்தில் குறிப்பிட்டார். சந்திராபூர் மாவட்ட ஆட்சியர் அஜய் குல்ஹானே கூறுகையில், சனிக்கிழமை இரவு சிந்தேவாஹி தாலுகாவில் உள்ள லட்போரி கிராமத்தில் சுமார் 3 மீட்டர் அளவுள்ள ரிங் ஒன்றும் ஞாயிற்றுக்கிழமை காலை தெஹ்சிலின் பவன்பர் கிராமத்தில் உருளை போன்ற பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக ரிங் முன்பு முன்பு அந்த இடத்தில் இருந்ததில்லை, வானத்தில் இருந்து விழுந்திருக்கலாம். 1 முதல் 1.5 அடி விட்டம் கொண்ட உருளை போன்ற பொருள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது என கூறினார். மும்பையில் உள்ள பேரிடம் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை குழு சந்திராபூர் மாவட்டத்திற்கு சென்று பொருட்களை சரிபார்க்கும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற பொருட்கள் வேறு ஏதேனும் சிதறிக் கிடக்கின்றவா என்பதை கண்டறிய மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இளநிலை வருவாய்த்துறை அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999